களத்தில் புதிய நெறிமுறைகளுடன் மீண்டும் தொடங்கும் விளையாட்டு தொடர்கள்

மே 5 ஆம் தேதி, ஒன்பது வயது சிறுவன் தென் கொரியாவின் சுவோன் பேஸ்பால் ஸ்டேடியத்தில் மையப் புள்ளியாக இருந்தார். கோவிட் -19 நோய்த் தொற்றால் நிறுத்தப்பட்ட நாட்டின் பேஸ்பால் லீக் மீண்டும் தொடங்கப்படுவதைக் குறிக்கும் வகையில், பந்தை முதன் முதலாக வீசுவதற்கான வாய்ப்பு அவருக்கு வழங்கப்பட்டது. சிறுவன்…

By: June 16, 2020, 1:47:18 PM

மே 5 ஆம் தேதி, ஒன்பது வயது சிறுவன் தென் கொரியாவின் சுவோன் பேஸ்பால் ஸ்டேடியத்தில் மையப் புள்ளியாக இருந்தார். கோவிட் -19 நோய்த் தொற்றால் நிறுத்தப்பட்ட நாட்டின் பேஸ்பால் லீக் மீண்டும் தொடங்கப்படுவதைக் குறிக்கும் வகையில், பந்தை முதன் முதலாக வீசுவதற்கான வாய்ப்பு அவருக்கு வழங்கப்பட்டது.

சிறுவன் ஒரு பேஸ்பால் போல வடிவமைக்கப்பட்ட ஒரு பிளாஸ்டிக் குமிழியின் உள்ளே வைக்கப்பட்டிருந்தான். அந்த ‘குமிழி’ என்பது சமூக தூரத்திற்கான அடையாளமாகும், இது தொற்றுநோயை எதிர்த்துப் போராட விளையாட்டு உலகம் என்ன செய்ய வேண்டும் என்பதற்கான ஒரு உருவகமாகும். மேலும், ‘bio-bubble’ பயன்படுத்துவதன் மூலம், முக்கிய போட்டிகள் மீண்டும் தொடங்குவதற்கான திட்டங்கள் இப்போது உள்ளன.

ஒரு bio-bubble என்பது அடிப்படையில் ஒரு குறிப்பிட்ட நபர்களால் மட்டுமே அணுகக்கூடிய ஒரு சுத்திகரிக்கப்பட்ட பகுதியைப் பாதுகாப்பதாகும் – இவை அனைத்தும் கொரோனா வைரஸிலிருந்து பாதுகாப்பானதாக இருக்க வேண்டும். இப்போது பல முக்கிய போட்டிகள் புதிய நெறிமுறைகளுடன் மீண்டும் தொடங்க தயாராக உள்ளன.

தொலைபேசி மூலம் தகவல் – சுஷாந்த் இறப்பு செய்தி கேட்டு நொறுங்கிய தோனி!

NBA (கூடைப்பந்து)

கூடைப்பந்தாட்டத்தின் மார்க்யூ லீக், பிளே ஆஃபில் உள்ள அனைத்து அணிகளையும், புளோரிடாவில் உள்ள 25,000 ஏக்கர் டிஸ்னி வேர்ல்டுக்கு கொண்டுச் செல்வதன் மூலம் சீசனை மீண்டும் தொடங்க முடிவு செய்துள்ளது. இந்த நேரத்தில், டிஸ்னி பூங்கா பொதுமக்களுக்கு மூடப்பட்டுள்ளது,  இப்போது, 22 அணிகளுக்கு மட்டுமே அதன் வாயில்கள் திறக்கப்படும். இந்த இடத்தின் உள்ளே 220 ஏக்கர் ஈஎஸ்பிஎன் வைட் வேர்ல்ட் ஆஃப் ஸ்போர்ட்ஸ் உள்ளது. இது, மூன்று அரங்கங்களைக் கொண்ட ஒரு விளையாட்டு வளாகமாகும், ஒவ்வொன்றும் 20 கோர்ட்களை கையாளும் திறன் கொண்டது, இதில் ஒளிபரப்பு வசதிகளும் உள்ளன. அனைத்து போட்டிகளும் பார்வையாளர்கள் இல்லாமல் விளையாடப்படும்.

எல்லா அணிகளும் ஒரே இடத்தில் இருப்பதால், பயணத்தின் போது வீரர்கள் பாதிக்கப்படும் அபாயத்தை இது நீக்குகிறது.

ஆர்லாண்டோவிற்கு வருவதற்கு முன்பு, வழிகாட்டுதல்கள் வழங்கப்பட்டுள்ளன. ஜூன் 30 ஆம் தேதிக்குள் அணிகள் அந்தந்த தளங்களில் கூடியிருக்க திட்டமிடப்பட்டுள்ளன, அங்கு வீரர்கள் சோதிக்கப்படுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. சோதனையில்  நெகட்டிவ் ரிசல்ட் தருபவர்கள் மட்டுமே பயணிக்க அனுமதிக்கப்படுவார்கள்.

யுஎஸ் ஓபன் (டென்னிஸ்)

யுனைடெட் ஸ்டேட் டென்னிஸ் அசோசியேஷன் (யுஎஸ்டிஏ) யுஎஸ் ஓபனை ரத்து செய்யுமா என்பது இன்னும் தெளிவாகத் தெரியவில்லை, ஆனால் போட்டிகளை நடத்த, நிர்வாகக் குழு திட்டங்களை முன்வைத்துள்ளது.

பெரும்பாலான வீரர்கள் வெளிநாட்டில் இருப்பதால், யு.எஸ்.டி.ஏ விமானங்கள் மூலம் அவர்களை அழைத்து வர உதவும். ஒவ்வொரு வீரரும் விமானத்தில் ஏறும் போது (உதவிக்கு ஒரேயொரு நபரை கூட அழைத்து வர அனுமதி) கோவிட் -19 சோதனைக்கு உட்படுத்தப்படுவார்கள். மேலும் அறிகுறி இல்லாதவராகவும் இருக்க வேண்டும். நியூயார்க்கில் ஒருமுறை, வீரர்கள் வெப்பநிலை சோதனைகள் மற்றும் follow-up சோதனைகளுக்கு உட்படுத்தப்படுவார்கள், மேலும் பிசியோதெரபிஸ்டுகள் நியமிக்கப்பட்ட, பயிற்சி மற்றும் சோதனைக்கான வசதிகள் கொண்ட ஹோட்டலுக்கு அவர்கள் செல்லப்படுவார்கள். நியூயார்க்கில் வீரர்களின் ஹோட்டலுக்கும் மைதானத்திற்கும் இடையில் மட்டுமே பயணிக்க அனுமதிக்கப்படுவார்கள். வேறு எங்கும் செல்ல அனுமதி கிடையாது.

இங்கிலாந்தில் விண்டீஸ் (கிரிக்கெட்)

மேற்கிந்திய தீவுகள் கிரிக்கெட் அணியின் 25 வீரர்கள் மற்றும் 11 சப்போர்ட் ஸ்டாஃப்களுக்கு வைரஸ் சோதனை செய்து நெகட்டிவ் என தெரிந்த பிறகு, இரண்டு விமானங்களில் இங்கிலாந்து சென்றுள்ளனர். மான்செஸ்டருக்கு வந்ததும், ஓல்ட் டிராஃபோர்டில் உள்ள ஒரு ஆன்-சைட் ஹோட்டலில் அணி தங்கியிருக்கும், அங்கு அவர்கள் இரண்டு வாரங்கள் சுயமாக தனிமைப்படுத்தப்படுவார்கள், ஆனால் follow-up சோதனையை முடித்தவுடன் அவர்கள் பயிற்சி பெற அனுமதிக்கப்படுவார்கள். வீரர்கள் தங்களுக்குள் மூன்று நாள் மற்றும் நான்கு நாள் போட்டிகளில் விளையாடுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கிடையில், அவர்கள் ஸ்டேடியம் அல்லது ஹோட்டலை விட்டு வெளியேற அனுமதிக்கப்படுவதில்லை. ஜூலை 8 முதல் சவுத்தாம்ப்டனில் நடக்கவுள்ள முதல்டெஸ்ட் போட்டிக்கு, இங்கிலாந்து மற்றும் வேல்ஸ் கிரிக்கெட் வாரியம், ஹோட்டலு மற்றும் ஸ்டேடியத்தை சேர்த்து பாதுகாப்பு வளையத்தை உருவாக்க திட்டமிட்டுள்ளது. இதில், எல்லோரும் சோதனைக்குஉட்படுத்தப்படுவார்கள், மேலும் காலம் முழுவதும் யாரும்பாதுகாப்பு வளையத்தை விட்டு வெளியேறக்கூடாது.

பிரீமியர் லீக் (கால்பந்து)

ஜூன் 17 ஆம் தேதி பிரீமியர் லீக் மீண்டும் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஒவ்வொரு பயிற்சி அமர்வுக்குப் பிறகும் மூலையில் உள்ள கொடிகள், கோல் போஸ்ட்கள், பந்துகள், கூம்புகள் மற்றும் பயிற்சி பிட்ச்கள் சுத்திகரிப்பு செய்யப்படும். வீரர்கள் வாரத்திற்கு இரண்டு முறை சோதிக்கப்பட வேண்டும், மேலும் வெப்பநிலை சோதனைகள் மற்றும் முன் தயாரிப்பு பணிகளை தினமும் மேற்கொள்ள வேண்டும்.

முதல் கட்ட பயிற்சியில், வீரர்கள் ஒருவருக்கொருவர் தொடர்பு கொள்வது தடை செய்யப்படுகிறது. மேலும் தங்கள் பயிற்சிக்கு பொது போக்குவரத்தைப் பயன்படுத்துவதற்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது.

ஜெர்மன் பன்டெஸ்லிகா (கால்பந்து)

மே 16 மீண்டும் தொடங்குவதற்கு முந்தைய மாதத்தில், வீரர்கள் வாரத்திற்கு இரண்டு முறையாவது சோதிக்கப்பட்டனர் மற்றும் தொடக்க ஆட்டத்திற்கு ஒரு வாரத்திற்கு முன்பே தனிமைப்படுத்தப்பட்டனர்.

இந்த தொடரை நடத்தி முடிக்க, பன்டெஸ்லிகா நடத்தும் 20,000 சோதனைகளுக்கு ஜெர்மன் கூட்டமைப்பு பணம் செலுத்தும் – இது நாட்டின் திறனில் சுமார் 0.4% ஆகும். ஸ்போர்ட்ஸ் இல்லஸ்ட்ரேட்டட் படி, தொடரை முடிக்க ஒரு அணிக்கு மீதமுள்ள எட்டு ஆட்டங்களை நடத்துவதில் சுமார் 800 மில்லியன் டாலர் பங்கு உள்ளது.

வீரர்கள், பார்வையாளர்களை சந்திக்கவோ, பொது போக்குவரத்தைப் பயன்படுத்துவதற்கோ தடை விதிக்கப்பட்டுள்ளது.எந்நேரமும் அவர்களை சுற்றி பாதுகாப்புப் படை நிறுத்தப்பட்டிருக்கும். ஹோட்டல் அறைகளை அவர்கள் பகிர்ந்து கொள்ளக்கூடாது. அவர்கள் உணவருந்தும் போது குறைந்தது இரண்டு மீட்டர் இடைவெளியில் உட்கார வேண்டும், ஒவ்வொரு முறையும் அவர்களின் வெப்பநிலை சரிபார்க்கப்படும் பிரத்தியேக நுழைவாயில்களைப் பயன்படுத்தி ஹோட்டல்களில் நுழைவார்கள். அணி பேருந்தில், அவர்கள் அனைவரும் சில மீட்டர்கள் இடைவெளியில் அமர்ந்திருப்பார்கள்.

அன்று தடுமாற்றம்; இன்று தரமான ஆட்டம் – இந்தியா குறித்து பொல்லாக் ‘விண்டேஜ்’ ஷேரிங்ஸ்

லா லிகா (கால்பந்து)

ஸ்பெயினின் லா லிகா தொடர் ஜூன் 11 அன்று 91 நாள் இடைவெளிக்கு பிறகுமீண்டும் தொடங்கப்பட்டது. மே மாத தொடக்கத்தில் பயிற்சி மீண்டும் தொடங்கியது, அனைத்து வீரர்களும், பயிற்சி ஊழியர்களும், குழு மருத்துவர்களும் தினமும் பரிசோதிக்கப்பட்டனர், மீதமுள்ள பணியாளர்கள் வாரத்திற்கு மூன்று முறையாவதுபரிசோதிக்கப்பட்டனர். மே 4 முதல், வீரர்கள் தனித்தனியாக மட்டுமே பயிற்சி பெற அனுமதிக்கப்பட்டனர், ஒரு வாரம் கழித்து, ஒரு குறிப்பிட்ட நேரத்தில் 12 க்கும் மேற்பட்ட வீரர்கள் பயிற்சி பெற அனுமதிக்கப்படவில்லை – ஒரு ஆடுகளத்தில் ஆறு வீரர்களுக்கு மட்டுமே அனுமதி. உறுப்பினர்கள் தொடர்ந்து சோதிக்கப்படுவதால், ஒரு வாரத்திற்குப் பிறகு முழு அணிக்கு பயிற்சி அளிக்கப்பட்டது.

வீரர்கள் தனித்தனியாக பயிற்சி மைதானங்களுக்கு வர வேண்டும். வீரர்களுக்கு ஒரு நாள் முன்னதாக மக்கும் பைகளில் பயிற்சி கிட்கள் வழங்கப்பட்டன. வீட்டிற்குச் சென்றபின் அவர்கள் அழுக்கு (பயிற்சிக்கு பயன்படுத்திய) கிட்களை பைகளில் வைப்பார்கள், மறுநாள் கிளப்பில் கழுவுவதற்காக கொண்டு வருவார்கள் என்று பிபிசி தெரிவித்துள்ளது. ஒரு ஆடை அறைக்கு மூன்று வீரர்கள் மட்டுமே அனுமதிக்கப்பட்டனர், மேலும் அவர்களின் கிட்களும் பூட்ஸும் வெகு தொலைவில் வைக்கப்பட்டன. இதற்கிடையில், கேண்டீனில் உணவுகள் கூட வீரர்களுக்கு தனித்தனி பைகளில் தான் வைக்கப்பட்டது.

தொடரின் போது, ஏதேனும் ஒரு வீரருக்கு கொரோனா தொற்று இருந்தால், ஒட்டுமொத்த அணியும் தனிமைப்படுத்தப்படும். அப்போதும், இரண்டாவதாக மற்றொரு வீரருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டால், தொடரே ரத்து செய்யப்படும்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil

Get all the Latest Tamil News and Tamil Nadu News at Indian Express Tamil. You can also catch all the latest Tamil Explained News by following us on Twitter and Facebook

Web Title:As sports events resume a look at the new protocols in place corona virus

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com.
பிரபலமானவை
Advertisement

இதைப் பாருங்க!
X