Advertisment

அன்று தடுமாற்றம்; இன்று தரமான ஆட்டம் - இந்தியா குறித்து பொல்லாக் 'விண்டேஜ்' ஷேரிங்ஸ்

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
Shaun Pollock , indian cricket team, bcci, cricket news, இந்திய கிரிக்கெட் அணி, விளையாட்டு செய்திகள், கிரிக்கெட் செய்திகள், ஷான் பொல்லாக்

லேட் 80'ஸ் கிட்ஸிடம் இந்திய கிரிக்கெட் அணி பற்றி கேட்டுப் பாருங்கள். அவர்களில் பெரும்பாலானோர் சொல்வது, 'சச்சின் அவுட்-னா மேட்ச் காலி... அதனால, அவர் அவுட்டானா டிவியை ஆஃப் பண்ணிடுவோம்' என்று அவர்கள் சொல்வதை நீங்கள் கேட்கலாம்.

Advertisment

ஆனால், தோனி எனும் வீரனின் வருகைக்குப் பிறகு, அணியின் மேட்ச் விண்ணர்கள் எண்ணிக்கை கூடியது. அவருக்கு கைக்கொடுக்கும் விதமாக ஐபிஎல் தொடங்கப்பட்ட பிறகு, அணி முழுக்க மேட்ச் விண்ணர்களாக கட்டமைக்கப்பட்டது.

'அனைவரும் உங்களை என்னில் தேடுவார்கள்' - தோனிக்கே நிலைமையை புரிய வைத்த சுஷாந்த் சிங்

இன்று விராட் கோலி கைகளில் ஒரு வெற்றிகரமான அணியாக தவழ்ந்து கொண்டிருக்கிறது டீம் இந்தியா. அந்தந்த காலங்களில் அந்தந்த கேப்டன்கள் எடுத்த முயற்சி, கொடுத்த உழைப்பே இன்றைய உச்ச நிலைக்கு காரணம்.

இந்தியாவின் விண்டேஜ் நிலைமை குறித்து தென்னாப்பிரிக்க முன்னாள் வேகப்பந்து வீச்சாளரும், உலகின் தலை சிறந்த பவுலர்களில் ஒருவருமான ஷான் பொல்லாக் தனது நினைவலைகளை பகிர்ந்துள்ளார்.

"உண்மையில், இப்போது இந்திய அணி மிக வலிமையான நிலையில் உள்ளது. பந்துவீச்சில் ஆழம், நிறைய வேரியேஷன்கள், உயரமான வீரர்கள், வேகமாக பந்து வீசுபவர்கள், நிறைய ஆற்றல் உள்ளவர்கள் என்று அதிக வீரர்கள் இந்தியா வசம் உள்ளார்கள். ஆகையால், சூழலுக்கு ஏற்றவாறு தகுந்த அணியை உருவாக்க, நல்ல வாய்ப்பு கிடைக்கிறது" என்று சோனி டென் பிட் நிகழ்ச்சியில் பொல்லாக் தெரிவித்துள்ளார்.

ஜஸ்பிரித் பும்ரா வேகப்பந்துவீச்சு கூட்டணியை வழிநடத்த, இஷாந்த், ஷமி, புவனேஷ்வர் அவருக்கு பக்கபலமாக திகழ்கின்றனர்.

இதுதவிர, தீபக் சாஹர், நவ்தீப் சைனி, ஷரதுள் தாகூர் ஆகிய பவுலர்களும் இந்தியாவுக்கு எந்நேரமும் சிறப்பாக செயல்பட காத்திருக்கின்றனர்.

'எனது தலைமையில் உருவான வீரர்கள்' - 2011 உலகக் கோப்பை குறித்து கங்குலி

நீங்கள் மூன்று அல்லது நான்கு வேகப்பந்து வீச்சாளர்களுடன் களமிறங்க விரும்பினாலும் இந்தியாவால் தற்போது அது முடியும். ஆனால், சில வருடங்களுக்கு முன்பு, இந்தியாவில் ஸ்ரீகாந்த் மற்றும் வெங்கடேஷ் பிரசாத் மட்டுமே இருப்பார்கள்... மூன்றாவது சப்போர்ட்டிவ் பவுலர் அதே தரத்துடன் இந்திய அணியில் இருக்க மாட்டார். இரு முன்னணி பந்துவீச்சாளர்களுக்கும், இதனால் ஒரு சப்போர்ட் இல்லாமல் இருந்தது.

நாங்கள் பும்ராவுடன் உரையாடும் வாய்ப்பு ஒன்று கிடைத்தது. அப்போது அவர், 'அனைவரும் போட்டியாளர்களாக இருக்கிறார்கள். அனைத்திற்கும் தயாராக இருக்க வேண்டும். நீங்கள் கண்டிப்பாக அனைத்துப் போட்டியிலும் சிறப்பாக விளையாட வேண்டும். உங்களுக்கு சில போட்டிகள் சரியாக அமையவில்லை எனில், பிறகு வேறொருவர் உள்ளே நுழைந்து, உங்கள் இடத்தை ஆக்கிரமித்துக் கொள்வார்' என்றார். இந்த சூழல் நிலவுவது இந்திய அணிக்கு நல்லது தான்" என்று ஷான் பொல்லாக் தனது கருத்துகளை பகிர்ந்துள்ளார்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil

Cricket
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment