சுஷாந்த் இறப்பு குறித்து இந்தியன் எக்ஸ்பிரஸிடம் தோனியின் ஏஜென்ட்டும், தோனி பயோபிக் படத்தின் தயாரிப்பாளருமான அருண் பாண்டே பகிர்ந்த சிறப்பு செய்தி இது,
மஹி, தனது தொலைபேசியில் ஹெலிகாப்டர் ஷாட் விளையாடும் சுஷாந்தின் பயிற்சி வீடியோவை பார்த்தபின், சுஷாந்தின் முகத்தில் தவழ்ந்த குழந்தை போன்ற புன்னகை எனக்கு இன்னும் நினைவிருக்கிறது.
அவரது மரணம் மற்றும் பிற விவரங்களைப் பற்றி சில மணி நேரங்களுக்கு முன்பே எனக்கு தெரிய வந்தது. நான் இப்போது பேரதிர்ச்சியில் இருக்கிறேன், ஆனால் அந்த உற்சாகமான சுஷாந்தின் புன்னகை என் மனதை விட்டு நீங்கவில்லை. 'எம்.எஸ்.தோனி, தி அன்டோல்ட் ஸ்டோ'ரி திரைப்படத்தின் விளம்பரத்திற்காக நானும் மஹியும், சுஷாந்தும் நிறைய பயணம் செய்திருந்தோம். அதற்கு முன்னர் படத்தின் ஸ்க்ரிப்ட் தயாரிக்கப்பட்டது தொடங்கி, நானும் சுஷாந்தும் ஒன்றரை வருடங்களுக்கும் மேலாக ஒன்றாக இருந்தோம்.
‘இவ்வளவு சீக்கிரம் போய்விட்டாரா?’ சுஷாந்த் சிங் ராஜ்புத் மறைவுக்கு கிரிக்கெட் வீரர்கள் இரங்கல்
அதனால் தான், களத்திற்கு வெளியேயும், களத்தின் உள்ளேயும் மஹியின் ஒவ்வொரு அசைவுகளையும் உள்வாங்க சுஷாந்த் எவ்வளவு கடுமையாக உழைத்தார் என்பது எனக்குத் தெரியும். உண்மையில், இந்த திரைப்படத்தை உருவாக்கும் எண்ணம் எனக்கு வந்தபோது, தோனிக்கு இந்த யோசனையை தெரிவித்து அவரை சமாதானப்படுத்த நீண்ட காலம் ஆனது. அதன்பிறகு, அந்த ரோலில் நடிக்கப் போவது யார் என்பதை நான் தீர்மானிக்க விரும்பினேன். என்னிடம் வேலை செய்யும் நபர்களில் ஒருவரிடம் தோனியாக நடிக்கக் கூடிய நடிகர்களின் பட்டியலை எனக்குத் தருமாறு கேட்டேன். அவர்களில் சுஷாந்தும் ஒருவர். 'கை போ சே' என்ற திரைப்படத்தில் நான் அவரைப் பார்த்தேன், அதில் அவரது கதாபாத்திரம் கிரிக்கெட் பயிற்சியாளராக இருந்தது. அதில் அவரது விளையாட்டு நேர்த்தி சிறப்பாக இருந்தது. எனவே நான் அவரைச் சந்தித்தபோது, அவருக்கு மஹி ரோலில் நடிக்க வேண்டும் என்ற ஆசை இருந்தது. நான் மஹியிடமும் பேசினேன், அவர் கை போ சே படம் பார்த்தார். அதன் பிறகு சுஷாந்த் தான் நடிப்பது என்று இறுதி செய்யப்பட்டது. எனவே இயக்குனர் நீரஜ் பாண்டேவை அணுகுவதற்கு முன்பே, சுஷாந்த் தான் தோனியாக நடிப்பார் என்று முடிவு செய்திருந்தேன்.
/tamil-ie/media/media_files/uploads/2020/06/a39-294x300.jpg)
அவரை படத்தில் கமிட் செய்ததும், நாங்கள் இருவரும் ஒவ்வொரு நாளும் ஒன்றாக இருந்தோம். அவரிடம் பல கேள்விகள் இருந்தன, தோனியைப் பற்றி எல்லாவற்றையும் தெரிந்து கொள்ள விரும்பினார். மகிழ்ச்சியான சூழ்நிலையில் அவர் எவ்வாறு நடந்துகொள்கிறார்? சுற்றி சர்ச்சைகள் இருக்கும்போது அவர் என்ன செய்வார்? அவர் சோகமாக இருக்கும்போது எப்படி இருக்கிறார்? அவரது விருப்பு வெறுப்புகள் என்ன? போன்ற அனைத்தையும் தெரிந்து கொள்ள ஆவலாக இருந்தார்.
சில நாட்கள், சுஷாந்த் என்னுடன் இருப்பார். சில நேரங்களில், அவர் முழு நாளையும் மஹியுடன் செலவிடுவார். சில நாட்கள் அவர் தோனியை தூரத்திலிருந்து பார்ப்பார். அவர் ஸ்டாண்டில் உட்கார்ந்து, தோனி அணியை வழிநடத்தும் அந்த உடல் அசைவுகளை, நடத்தைகளைப் பார்ப்பார். சில சமயம், சுஷாந்த் ஹோட்டல் லாபியில் உட்கார்ந்து கொள்வார், மஹிக்குத் தெரியாமல், அவர் அணி வீரர்கள், ரசிகர்கள் அல்லது மற்றவர்களுடன் எவ்வாறு நடந்துகொள்கிறார் என்பதைக் கவனிப்பார். தோனி தனது அறையில், ஒர்க் அவுட் செய்யும் போதோ, அல்லது வேறு ஏதாவது வேலை செய்யும் போதோ, சுஷாந்த் அமைதியாக அங்கேயே உட்கார்ந்து கொண்டு அனைத்தையும் கவனிப்பார். கிட்டத்தட்ட யாருக்குமே புலப்படாமல் இருந்து கவனிப்பார். அடுத்தமுறை தோனியை சந்திக்க வரும் போது, மஹியின் மேனரிஸத்தை அப்படியே பிரதிபலித்து, அதனை ஷூட் செய்து எடுத்து வருவார். அதை தோனியிடம் காண்பிப்பதில் அவர் மிகவும் உற்சாகமாக இருப்பார்.
14, 2020
அவர் தோனியுடனும் அதிக நேரம் செலவழித்துள்ளார்.சுஷாந்த்திடம் இருந்து கேள்விகள் வந்து கொண்டே இருந்தன. அவர் எந்த பதிலிலும் திருப்தி அடையவில்லை என்றால் அதே கேள்வியை சற்று வேறு மாதிரி கேட்டு, மீண்டும் தனது அதிர்ஷ்டத்தை முயற்சிப்பார். எனக்கு ஞாபகம் உள்ளது, அவரின் அதிக கேள்விகளால், தோனி கண்களை உருட்டிக்கொண்டு, "ஏய் நீ இன்னும் எத்தனை கேள்விகளை என்னிடம் கேட்பாய்” என்றார்.
சுஷாந்தின் பதிலும் எனக்கு நினைவிருக்கிறது. அவர், "எல்லோரும் உங்களை என்னில் தேடப் போகிறார்கள், நீங்கள் செய்வது போலவே எல்லாவற்றையும் நான் செய்ய வேண்டியிருக்கும்” என்றார்.
அவரது கேள்விகள் எனக்கு புரிந்தது. அனைவரின் மூளையையும் தோண்டி எடுக்க (தகவல்களை) அவர் ஆசைப்படுவார். தோனியின் கதாபாத்திரத்திற்கு அவர் நியாயம் செய்ய முடியுமா என்பது அவரது மனதில் எப்போதுமே இந்த சந்தேகத்தை ஏற்படுத்தியது. அவர் நிறைய கேள்விகளைக் கேட்பார்.
மேலும் அவர் பேட்டிங்கின் ஒவ்வொரு நுணுக்கத்தையும் மிகச் சரியாக கையாண்டார். தோனி பேட்டிங்கின் ஒவ்வொரு சிறிய நுணுக்கங்களையும் அவர் கைப்பற்றினார். தோனி தனது இடது தோள்பட்டையை அசைக்கும் அந்த விதத்தையும், இடது சட்டை ஸ்லீவை இழுக்கும் விதத்தையும் சுஷாந்த் துல்லியமாக கையாண்டார்.
அவர் இந்த கதாபாத்திரத்தில் சிறப்பாக நடிக்க காரணம், அவர் இந்த படத்தின் ஒரு பகுதியாக இருப்பதற்கு முன்பே, அவர் தோனியின் தீவிர ரசிகராக இருந்தார். தோனி, சுஷாந்தின் இன்ஸ்பையராக இருந்தார். சுஷாந்தும், சினிமா பின்புல குடும்பத்தைச் சேர்ந்தவர் அல்ல, அவரும் தோனி போன்ற ஒரு சிறிய நகரத்திலிருந்து வந்தவர். அவர் எப்போதும், தோனியைப் போலவே, தன்னாலும் சிறப்பாக செய்ய முடியும் என்று நம்பினார். அவரால் அந்த செயலை மிகச் சிறப்பாக செய்யவும் முடியும், அவரும் அதை செய்தார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil“