MS Dhoni movie hero Sushant Singh Rajput commits suicide, தோனி பட ஹீரோ சுஷாந்த் சிங் ராஜ்புத் தற்கொலை, பாலிவுட் நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத் தற்கொலை, சுஷாந்த் சிங் ராஜ்புத் மரணம், actor Sushant Singh Rajput death, Sushant Singh Rajput commits suicide, Sushant Singh Rajput passes away, Sushant Singh Rajput no more, cricket players mourning, cricket players yuvraj singh, யுவ்ராஜ் சிங், சேவாக், இர்ஃபான் பதான், virender sehwag, rahane, irfan pathan, bollywood actor Sushant Singh Rajput death, ms dhoni biopic, ms dhoni life history movie hero Sushant Singh Rajput
இந்திய கிரிக்கெட் வீரர் தோனி வாழ்க்கை வரலாற்றுப் படத்தில் தோனியாக நடித்த நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத் மும்பையில் அவரது வீட்டில் இன்று தற்கொலை செய்துகொண்டார். அவரது திடீர் மறைவுக்கு விளையாட்டு வீரர்கள் ரவிசாஸ்திரி, அனில் கும்ப்ளே, யுவ்ராஜ் சிங், வீரேந்தர் சேவாக், இர்ஃபான் பதான், ஷிக்கர் தவான், ரஹானே உள்ளிட்டோர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.
கிரிக்கெட் வீரர் தோனி வாழ்க்கை வரலாற்றுப் படத்தில் தோனியாக நடித்த பாலிவுட் நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத் இன்று மும்பை, பாந்த்ராவில் உள்ள அவரது வீட்டில் தூக்கிட்டு இறந்த நிலையில் கண்டெடுக்கப்பட்டது. மும்பை மேற்கு மண்டல கூடுதல் போலீஸ் கமிஷனர் சுஷாந்த் சிங் ராஜ்புத் இறந்ததை உறுதி செய்துள்ளார்.
34 வயதான சுஷாந்த் சிங் ராஜ்புத் கடைசியாக டிரைவ் என்ற படத்தில் நடித்திருந்தார். இவர் இந்திய கிரிக்கெட் ஜாம்பவான் மகேந்திர சிங் தோனியின் வாழ்க்கை வரலாற்றுப் படமான எம்.எஸ்.தோனி படத்தில் தோனியாக நடித்து பிரபலமானார். மேலும், சுஷாந்த் சிங் ராஜ்புத், கை போ சே, பிகே, டிடெக்டிவ் பையோம்கேஷ் பக்ஷி உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார்.
இந்த நிலையில், சுஷாந்த் சிங் ராஜ்புத் மும்பை பாந்த்ராவில் உள்ள அவரது இல்லத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். சுஷாந்த் சிங் ராஜ்புத் திடீர் மரணத்துக்கு முன்னாள் கிரிக்கெட் வீரர்கள் ரவிசாஸ்திரி, அனில் கும்ப்ளே, யுவராஜ் சிங், வீரேந்தர் சேவாக், ஹர்பஜன் சிங், இர்ஃபான் பதான் ஆகியோர் ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ளனர். மேலும், சுஷாந்த் சிங் ராஜ்புத் திடீர் மறைவுக்கு கிரிக்கெட் வீரர்கள் ஷிக்கர் தவான், அஜிங்கிய ரஹானே, அஷ்வின், சுரேஷ் ரெய்னா உள்ளிட்டோர் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துள்ளனர்.
I’m shocked at the tragic passing away of #SushantSinghRajput. A life brimming with promise and possibilities ended abruptly. My condolences to his family and fans ???? pic.twitter.com/8g1VCY0Kne
I really can’t believe this! Someone so young and successful?? We actually don’t know what goes on the inside, while it looks completely different from the outside! ???? #RIPSushantSinghRajputpic.twitter.com/kQrcdiE11T