Advertisment

Explained: கொரோனா வைரஸ் தடுக்க சர்ஜிகல் மாஸ்க் பயன்படுமா?

வுஹான் நகர மக்கள் பொது வீதிகளில் பயணிக்கும் போது சர்ஜிகல் மாஸ்க் அணியவும்  அறிவுறுத்தப்படுகிறார்கள். இருந்தாலும்,வைரஸ் தொற்றுகளைச் சமாளிக்க  இதுபோன்ற சர்ஜிகல் மாஸ்க் பயன்படுமா ?

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
Tamil nadu news live updates

Tamil nadu news live updates

கொரோனா வைரஸால் இதுவரை 41 பேர் பலியாகியுள்ளனர், உலகளவில் 800-க்கும் மேற்பட்ட மக்கள்  பாதிக்கப்பட்டுள்ளனர். எனவே, கொரோனா வைரஸ் பரவுவதை கட்டுப்படுத்துவதற்கான முயற்சிகள் சீன நாட்டில்  அதிகரித்துள்ளது.

Advertisment

சமீபத்தில் வுஹானிலிருந்து அமெரிக்கா திரும்பிய ஒரு பயனருக்கு கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டிருப்பதை  அந்நாட்டின் நோய் கட்டுப்பாட்டு மையம் உறுதிப்படுத்தியது. இப்போது, ​​வைரஸ் தாய்லாந்து மற்றும் தென் கொரியாவிலும் பரவியுள்ளது.

சீனப் புத்தாண்டு  விடுமுறையின் பரபரப்பான நாட்களில் சீன மக்கள் அதிகமாக பயணம் செய்வது வழக்கம். கொரோனா பரவுதலை தடுக்கும் முயற்சியின் ஒரு பகுதியாக, தனது 35 மில்லியனுக்கும் அதிகமான குடிமக்களுக்களின் பயணத்தை சீனா தடைசெய்துள்ளது. வுஹான் நகர மக்கள் பொது வீதிகளில் பயணிக்கும் போது சர்ஜிகல் மாஸ்க் அணியவும்  அறிவுறுத்தப்படுகிறார்கள்.

சீனா மற்றும் இந்தியா போன்ற நாடுகளில் (குறிப்பாக வட இந்தியா) காற்று மாசு அதிகமாக உள்ள நிலையில், மாசுபாட்டிலிருந்து பாதுகாக்க இது போன்ற  சர்ஜிகல் மாஸ்க்  பயன்படுத்துவது வழக்கம்.

 

வைரஸ் தொற்றுகளைச் சமாளிக்க  இதுபோன்ற சர்ஜிகல் மாஸ்க் பயன்படுமா ?

அமெரிக்கா நோய் கட்டுப்பாட்டு மையம் (சிடிசி) நாவல் கொரோனா வைரஸ்  தொடர்பான தேவைப்படும் முன்னெச்சரிக்கை என்ற தனது குறிப்பில், "அத்தகைய நோயாளிகள் அடையாளம் காணப்பட்ட உடன் வாய் மற்றும் மூக்கினை மறைக்கும் வகையில் சர்ஜிகல் மாஸ்க் அணியப்படும் வேண்டும், ஒரு தனி அறையில் வைத்து தான் அவர்களை மதிப்பீடு செய்யப்பட வேண்டும்" என்று கூறியிருந்தது.

ஆந்திர மருத்துவக் கல்லூரியின் டீன் டாக்டர் பி.வி.சுதாகர் கூறுகையில், சர்ஜிகல் மாஸ்க்  ஒரு அளவிற்கு தான் உதவுகின்றன, கொரோனா வைரஸ் (அ) எம்டிஆர் டிபி' (MDR TB)  போன்ற கடுமையான தொற்றுநோய்களிலிருந்து பாதுகாப்பதில் N95 போன்ற மாஸ்க்குகள் சிறந்தவை" என்று தெரிவித்தார்.

கட்டுரையை ஆங்கிலத்தில் படிக்க இங்கே கிளிக் செய்யவும்

மேலும், அவர் இது குறித்து கூறுகையில், சர்ஜிகல் மாஸ்க்  இரு பரிமாணங்கள் கொண்ட கவசம் வடிவில் இருக்கும்   , N95 மாஸ்க் முப்பரிமாணங்கள் கொண்ட  ஒரு கோப்பை வடிவில் இருக்கும்" என்று கூறினார்.

இந்தியாவிலும் வுஹான் வைரஸ்? சென்னை உட்பட 7 விமான நிலையங்களில் தெர்மல் சோதனை!

எனவே N95 மாஸ்க்குகள் மூக்கு மற்றும் வாயைச் சுற்றியுள்ள அனைத்து இடைவெளிகளையும் பாதுகாக்கின்றன. வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்ட மக்களுக்கு N95 முகமூடிகள் குறிப்பாக பயன்படுத்தப்பட வேண்டும் என்றும் கூறினார்.

நாம் பயன்படுத்தும் மாஸ்குகளை வெறும் கைகளால் தொடக்கூடாது, ஏனெனில் தொற்றுநோய்கள் பரவுவதற்கான வாய்ப்புகளை அதிகரிக்கும். மேலும்,  பயன்படுத்திய மாஸ்குகளை தரையில் வீசக்கூடாது, சரியான முறையில், உயிரியல் மருத்துவ கழிவுகளை அகற்றும் முறையைப் பயன்படுத்தி அப்புறப்படுத்த வேண்டும் .

எவ்வாறாயினும், அதிக உற்பத்தி செலவு காரணமாக அரசாங்கம் N95 மாஸ்க்குகளை வெகுஜன அளவில் வழங்க முடியாது. இதனால்தான் பெரும்பாலான பரிந்துரைகள் மற்றும் ஆலோசனைகள் சர்ஜிகல் மாஸ்க்கோடு நின்று விடுகின்றன.

உலக சுகாதார அமைப்பு கொரோனா வைரஸிலிருந்து பாதுகாக்க நிலையான பரிந்துரைகளை அளித்துள்ளது.

  1. ஆல்கஹால் அடிப்படையிலான கை சுத்திகரிப்பான்  அல்லது சோப்புகள் மூலம்  அடிக்கடி கைகளை சுத்தம் செய்தல்,
  2. காய்ச்சல் அல்லது இருமல் உள்ள எவருடனும் நெருங்கிய தொடர்பைத் தவிர்க்க வேண்டும்
  3. சமைக்கப்படாத விலங்கு பொருட்களின் நுகர்வு ஆகியவற்றைத் தவிர்க்க வேண்டும்.

Explained : சீனாவில் அச்சத்தைக் கிளப்பும் வுஹான் வைரஸ்...

காற்று மாசுபாடு -  சர்ஜிகல் மாஸ்க் : 

உதாரணமாக, டெல்லி மாசு புகையில் தூசி, மகரந்தம், மரத்தூள் பற்றும் பல்வேறு தீங்கு விளைவிக்கும் வாயுக்கள் உள்ள இடத்தில் நீங்கள் வடிப்பான்கள் கூடிய மாஸ்க்குகளை பயன்படுத்தலாம்.  என், ஆர் (அ) பி  (N, R or P-) வகையான வடிப்பான்கள் பொது மக்கள் பயன்படுத்துவது வழக்கம்.

N- வகை வடிகட்டி எண்ணெய் இல்லாத துகள்கள் மற்றும் ஏரோசோல்களை உள்ளிழுப்பதில் இருந்து பாதுகாப்பை வழங்குகிறது.

95, 99, 100 என இந்த மூன்று வடிகட்டி மாஸ்க்குகளுக்கும் மூன்று வெவ்வேறு வகையான மதிப்பீடுகள் உள்ளன. அதாவது,  N95 மாஸ்க் என்றால் 95 சதவீத காற்று மாசினை  தடுக்கின்றது.

குறிப்பிடத்தக்க வகையில், முகமூடியின் செயல்திறன்

வாய் மற்றும் மூக்கைச் சுற்றி சரியான முத்திரையை உருவாக்குகிறதா என்பதைப் பொறுத்தது ஒரு மாஸ்கின் செயல்திறன் முடிவெடுக்கப்படுகிறது. சர்ஜிகல் மாஸ்க்  டெல்லி காற்று மாசு மற்றும்  வைரஸ் தொற்றுநோய்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்காது என்பதற்கு  இதுவும் ஒரு காரணம்

China Delhi
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment