Explained : சீனாவில் அச்சத்தைக் கிளப்பும் வுஹான் வைரஸ்…

சீனப் புத்தாண்டு கொண்டாட்டங்கள் துவங்க உள்ள நிலையில் பரவி வரும் இந்த நோயால் பெரும் அச்சம்

What is the mysterious Coronavirus aka Wuhan Virus?
Travelers wearing face masks stand outside the Beijing Railway Station in Beijing, Tuesday, Jan. 21, 2020. A fourth person has died in an outbreak of a new coronavirus in China, authorities said Tuesday, as more places stepped up medical screening of travelers from the country as it enters its busiest travel period. (AP Photo/Mark Schiefelbein)

What is the mysterious Coronavirus aka Wuhan Virus? : சீனாவில் இது வசந்த காலமாகும். அனைத்து மக்களும் தங்களின் லூனார் புத்தாண்டினை கொண்டாட பெரும்வாரியாக தங்களின் சொந்த ஊர்களுக்கு செல்லும் நாட்கள் இது. ஆனால் மொத்த நாட்டையும் அச்சத்திற்கு ஆளாக்கியுள்ளது கொரோனா வைரஸ் என்று அழைக்கப்படும் வுஹான் வைரஸ். இந்த வைரஸ் நோய் தொற்று எதனால் ஏற்படுகிறது? இதனை குணப்படுத்த முடியுமா? இதனால் ஏற்படும் ஆபத்துகள் என்ன ?

21/01/2020 நிலவரம்

செவ்வாய் கிழமை நிலவரப்படி இந்த வைரஸ் தாக்கியதால் 6 நபர்கள் உயிரிழந்துள்ளதாக உறுதி செய்துள்ளது சீன அரசு. மேலும் இந்த வைரஸ் நோய் தொற்றுள்ளவர்களின் எண்ணிக்கை 291-ஐ அடைந்துள்ளது. ஆரம்பத்தில் இந்த நோய் விலங்குகளிடம் இருந்து மனிதனுக்கு பரவும் நோய் என்று ஆராய்ச்சியாளர்கள் கூறியிருந்தனர். ஆனால் தற்போது இது ஒரு மனிதனிடம் இருந்து மற்றொரு மனிதனுக்கு பரவுவதை உறுதி செய்துள்ளது.

<strong>விஜய்யின் பிகில் வசூலைத் தாண்டாத ரஜினியின் தர்பார்; உண்மை நிலவரத்தைக் கூறும் விநியோகஸ்தர்..</strong>

<iframe width=”560″ height=”315″ src=”https://www.youtube.com/embed/Mg7yzxPKiKA&#8221; frameborder=”0″ allow=”accelerometer; autoplay; encrypted-media; gyroscope; picture-in-picture” allowfullscreen></iframe>

சீனாவில் இந்த வார இறுதியில் இருந்து புத்தாண்டு கொண்டாட்டங்கள் சூடுபிடிக்க துவங்கும் நிலையில் பெய்ஜிங்கில் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு அழுத்தம் கூடியுள்ளது. சர்வதேச பயணிகள் சீனாவிற்கு பத்திரமாக வந்து செல்வதற்கு எந்த வகையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது உலக சுகாதார அமைப்பான WHO சீனாவிடம் கேள்வி எழுப்பியுள்ளது.
இந்த கட்டுரையை ஆங்கிலத்தில் படிக்க

இந்த வைரஸ் ஏன் வுஹான் வைரஸ் என்று அழைக்கப்படுகிறது ?

மத்திய சீனாவின் ஹுபெய் மாகாணத்தில் அமைந்துள்ளது வுஹான் என்ற நகரம். முதன்முதலில் இங்கு தான் இப்படியான நோய் தொற்று இருப்பது கண்டறியப்பட்டது. நிறைய பொதுமக்கள் நிம்மோனியாவால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இதனைத் தொடர்ந்து இங்கு அமைக்கப்பட்டிருக்கும் ஹுவானா கடல் உணவு சந்தை மூடப்பட்டது. செவ்வாய் கிழமை (21/01/2020) நிலவரப்படி ஹூபெய் மாகாணத்தில் மட்டும் 270 நபர்கள் இந்த நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர். கௌண்டாங் பகுதியில் 14 நபர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். அதில் ஒரு இந்தியரும் அடங்குவார்.

வேறெங்கெல்லாம் இந்த நோய் பரவியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது?

வுஹான் நகரில் இருந்து பாங்காங் சென்ற இரண்டு சீன பெண்களுக்கு இந்த நோய் உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. மேலும் ஜப்பானில் இருந்து இந்த மாதத்தின் துவக்கத்தில் வுஹான் வந்து திரும்பிய சீன நபர் ஒருவருக்கு இந்த நோய் உள்ளதாக அறியப்பட்டுள்ளது. மேலும் சீனாவில் இருந்து தெற்கு கொரியாவுக்கு வந்த பெண் ஒருவருக்கும், சீனாவில் இருந்து ஹாங்காங் திரும்பிய மேலும் சிலருக்கு இந்த நோய் பரவியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

இந்த நோயின் அறிகுறியென்ன?

உலக சுகாதார அமைப்பான WHO வெளியிட்டுள்ள அறிக்கையில் இந்த நோயின் அறிகுறிகளாக தீவிர காய்ச்சல், சளி மற்றும் மூச்சுவிட சிரமம் இருத்தல் குறிப்பிடப்பட்டுள்ளது. மிகவும் தீவிரமான நோய் தொற்று இருந்தால் முதலில் நிம்மோனியா ஏற்படும். பிறகு சிறுநீரகம் செயலிழக்க துவங்கும். இறுதியாக அந்நபர் உயிரிழப்பார். இது போன்ற நோய் தொற்றில் இருந்து தப்பிக்கும் பொருட்டு மக்களுக்கு வாய் மற்றும் மூக்கினை மறைக்கும் வகையில் முகமூடி அணிய வலியுறுத்தப்பட்டுள்ளது. மேலும் பண்ணைகளில் உள்ள விலங்குகள், காட்டு விலங்குகள் ஆகியவற்றை தொடுவது போன்றவற்றை தவிர்க்க வேண்டும் என்றும் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது. இதற்கு முன்பு ஏற்பட்ட சார்ஸ் நோய் விலங்குகள் மூலமாக மனிதர்களுக்கு பரவியது குறிப்பிடத்தக்கது.

உலக அரங்கில் ஏன் இந்த நோய் குறித்து கவலை ஏற்பட்டுள்ளது?

2002 – 2003 ஆண்டுகளில் சார்ஸ் நோய் உலகம் முழுவதும் உள்ள 35 நாடுகளில் பரவி 8 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்களிடம் பரவியது. 775 நபர்கள் இந்த நோயால் கொல்லப்பட்டனர். சார்ஸ் நோயும் கொரோனா வைரஸால் ஏற்பட்ட நோயாகும். இந்த நோய் பரவியதிற்கான காரணம் 2017ம் ஆண்டு வரை கண்டறியப்படவில்லை. 2017ம் ஆண்டு சீன ஆராய்ச்சியாளர்கள் சிலர் யுன்னான் மாகாணத்தில் இருக்கும் குகைகளில் வசிக்கும் வௌவ்வால்களால் இந்த வைரஸ் பரவியது என்று கண்டறியப்பட்டது. சிலருக்கு சார்ஸ் நோய் மீண்டும் வரும் என்ற அச்சுறுத்தல் தற்போது உருவாகியுள்ளது.

மேலும் படிக்க : Explained: இராணுவ தலைமை தளபதியின் பதவிக் காலம் நீடிக்க ஏன் சட்டம் கொண்டுவருகிறது பாகிஸ்தான்?

Get the latest Tamil news and Explained news here. You can also read all the Explained news by following us on Twitter, Facebook and Telegram.

Web Title: What is the mysterious coronavirus aka wuhan virus

Next Story
ஹல்வா விழா : பட்ஜெட்டுக்கு முன்பு நிதி அமைச்சகம் ஏன் இதை கொண்டாடுகிறது?
The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com