Assets of Indian regional parties : இந்தியாவில் இருக்கும் பிராந்திய கட்சிகளின் சொத்து மதிப்புகள் குறித்த அறிக்கைகளை வெளியிட்டுள்ளது அசோசியேசன் ஆஃப் டெமாக்ரெடிக் ரிஃபார்ம்ஸ் என்ற அமைப்பு. 2016-17 மற்றும் 2017-18 கால அளவில் இந்த கட்சிகளின் சொத்து மதிப்புகள் எவ்வளவு இருக்கிறது என்று அந்த அறிக்கைகள் தகவல்கள் வெளியிட்டுள்ளன.
2016-17 ஆண்டில் 39 ஆக இருந்த பிராந்திய கட்சிகள் 2017-18 ஆண்டில் 41 ஆக உயர்ந்துள்ளது. முறையே அக்கட்சிகளின் சொத்து மதிப்பு ரூ.1,267.81 கோடியில் இருந்து ரூ.1320.06 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது. ஒவ்வொரு கட்சிக்குமான சராசரி சொத்து மதிப்பானது ரூ.40.33 கோடியில் (39 கட்சிகள்) இருந்து ரூ.61.61 கோடியாக (41 கட்சிகள்) உயர்ந்துள்ளது.
மேலும் படிக்க : ஹரியானா தேர்தல் 2019 : பாஜகவிற்கு பெரும் சவாலாக இருக்கும் ஜாட் தொகுதிகள்…
சமாஜ்வாடி கட்சியின் சொத்து மதிப்பு மட்டும் ரூ.583.29 கோடி ஆகும். இந்த 41 கட்சிகளில் அதிக சொத்துக்களை கொண்ட கட்சி இதுவாகும். கணக்கிடப்பட்ட மொத்த சொத்து மதிப்பில் இந்த கட்சியின் பங்கு மட்டும் 46% ஆகும். தமிழக பிராந்திய கட்சிகளான திமுக மற்றும் அதிமுகவின் சொத்துகளும் 15% வரை உயர்ந்துள்ளது. 191.64 கோடி ரூபாய் வரையில் சொத்துமதிப்புகளை கொண்டுள்ளது திமுக கட்சி. அதிமுகவின் சொத்து மதிப்பு 189.54 கோடியாகும். தெலுங்கு தேசியம் கட்சி மட்டுமே தங்களுக்கு 100 கோடி ரூபாய்க்கு மேல் சொத்து மதிப்பு உள்ளது என்பதை ஒப்புக் கொண்டது. இந்த 4 கட்சிகள் இல்லாமல் இதர 8 கட்சிகள் தங்களின் சொத்து மதிப்புகள் வெறும் 10 கோடிக்கு மேல் தான் இருப்பதாகவும் அறிவித்துள்ளது. ஆம் ஆத்மி கட்சி 13வது இடத்தில் உள்ளது.
Assets of Indian regional parties
ஐக்கிய ஜனதா தளம் கட்சியின் சொத்து ரூ. 3.46 கோடியில் இருந்து ரூ. 13.78 கோடியாக (மூன்று மடங்கு) உயர்ந்துள்ளாது. மதசார்பற்ற ஜனதா தளம் கட்சியின் சொத்து மதிப்பு ரூ.7.61 கோடியில் இருந்து ரூ. 15.44 கோடியாக உயர்ந்துள்ளது. தெலுங்கு ராஷ்ட்ரிய சமிதி கட்சியின் சொத்து 14.49 கோடியில் இருந்து ரூ.29.04 கோடியாக அதிகரித்துள்ளது.
Assets of Indian regional parties
நிலையான சொத்து, கடன்கள் மற்றும் அட்வான்ஸ், எஃப்.டி.ஆர் டெபாசிட்கள், டி.டி.எஸ், முதலீடு மற்றும் இதர சொத்துகளின் அடிப்படையில் இந்த சொத்து மதிப்புகள் கணக்கிடப்பட்டுள்ளது. கணக்கீடுக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட இரண்டு கால அளவீடுகளில் ஃபிக்ஸட் டெபாசிட் மதிப்பு ரூ.809.52 கோடி (63.85%) - 2016 - 2017க்கான மதிப்பீடு . 2017 - 2018 காலங்களில் ரூ. 859.89 கோடி (65.14%) என தெரியவந்துள்ளது.