Advertisment

ஒரு பெண்ணின் மிக நீண்ட ஒற்றை விண்வெளிப் பயணம் - சாதித்த அமெரிக்க வீராங்கனை

பெக்கி விட்சன் ஒரு விண்வெளிப் பயணத்தில் ஒரு பெண்மணியாக மிக நீண்ட காலம் இருந்த சாதனையை தன்வசம் வைத்துள்ளார்

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
astronaut christina koch sets new record longest single space flight by a woman - ஒரு பெண்ணின் மிக நீண்ட ஒற்றை விண்வெளிப் பயணம் - சாதித்த அமெரிக்க வீராங்கனை

astronaut christina koch sets new record longest single space flight by a woman - ஒரு பெண்ணின் மிக நீண்ட ஒற்றை விண்வெளிப் பயணம் - சாதித்த அமெரிக்க வீராங்கனை

இந்த வாரத்தில், அமெரிக்க விண்வெளி வீரர் கிறிஸ்டினா கோச், சர்வதேச விண்வெளி நிலையத்தில் (ஐ.எஸ்.எஸ்), ஒரு பெண்ணாக 289 நாட்களைக் கடந்த போது, விண்வெளியில் தொடர்ந்து அதிக நாட்களைக் கழித்த பெண் என்ற சாதனையை படைத்திருக்கிறார்.

Advertisment

2019ம் ஆண்டு கலையுலகம் இழந்த நட்சத்திரங்கள்

பெண்களுக்கான முந்தைய சாதனையை மற்றொரு அமெரிக்கரான பெக்கி விட்சன் 2016-2017 ஆம் ஆண்டில்  படைத்திருந்தார்.

மேலும் படிக்க - மும்பை வனப்பகுதிக்கு வரும் சுல்தான் புலி பற்றி தெரியுமா?

மின்சார பொறியியலாளரான கோச் (40) அந்த சாதனையை நீட்டிக்க உள்ளார். வரும் 2020ஆம் ஆண்டு பிப்ரவரி 6ஆம் தேதியன்று கிறிஸ்டீனா பூமிக்குத் திரும்புகிறார். அப்போது அவர் 328 நாட்கள் விண்வெளியில் வசித்திருப்பார். விண்வெளிப் பயணங்கள் பொதுவாக ஆறு மாதங்கள் மட்டுமே இருக்கும். ஆனால் நாசா ஏப்ரல் மாதத்தில் தனது பணியை விரிவுபடுத்துவதாக அறிவித்தது.

Source: NASA Source: NASA

340 நாட்கள்

ஆண் மற்றும் பெண் விண்வெளி வீரர்களைக் கணக்கிடுகையில், இது ஒரு அமெரிக்கர் மிக நீண்ட ஒற்றை விண்வெளிப் பயணத்திற்கான ஒட்டுமொத்த சாதனையாகும். ஸ்காட் கெல்லி 2015-2016 ஆம் ஆண்டில் 340 நாட்கள் விண்வெளியில் கழித்தார்.

எந்தெந்த காரணங்களின் அடிப்படையில் இந்தியாவில் விவாகரத்து வழங்கப்படுகிறது?

438 நாட்கள்

ஜனவரி 1994 மற்றும் மார்ச் 1995 க்கு இடையில், ரஷ்யாவின் வலேரி பாலியாகோவ் 438 நாட்கள் மிர் விண்வெளி நிலையத்தில் கழித்தார். ஒட்டுமொத்தமாக, இது மிக நீண்ட ஒற்றை மனித விண்வெளிப் பயணத்திற்கான உலக சாதனை ஆகும்.

Astronaut Christina Koch sets new record Astronaut Christina Koch sets new record

665 நாட்கள்

கோச் இப்போது மிக நீண்ட ஒற்றை விண்வெளிப் பயணத்திற்காக அவரை முந்தியிருந்தாலும், பெக்கி விட்சன் ஒரு விண்வெளிப் பயணத்தில் ஒரு பெண்மணியாக மிக நீண்ட காலம் இருந்த சாதனையை தன்வசம் வைத்துள்ளார். இப்போது 59 வயதானதால் ஓய்வுபெற்ற விட்சன், ஒரு உயிர்வேதியியலாளர் ஆவார், அவர் 2002 மற்றும் 2017 க்கு இடையில் பல விண்வெளி பயணங்களில் மொத்தம் 665 மணிநேரங்களை பதிவு செய்தார். இப்போது, கோச்சின் நீட்டிக்கப்பட்ட பணியானது, நாசாவுக்கு  நீண்ட விண்வெளிப் பயணங்களின் விளைவுகளைப் பற்றி அறிய உதவும். எதிர்கால ஆழமான விண்வெளி ஆய்வு பணிகளை ஆதரிக்க இதுபோன்ற தகவல்கள் தேவை என்று நாசா அதிகாரிகள் கூறியுள்ளதாக அசோசியேட்டட் பிரஸ் செய்தி வெளியிட்டுள்ளது.

878 நாட்கள்

எந்தவொரு விண்வெளி வீரரும், ஆணும், பெண்ணும் விண்வெளியில் செலவழித்த மிக நீண்ட ஒட்டுமொத்த நேரம் இதுவாகும். ரஷ்யாவின் ஜெனடி படல்கா இந்த சாதனையைப் படைத்துள்ளார், 1998 மற்றும் 2015 க்கு இடையில் ஐந்து விண்வெளிப் பயணங்களில் 878 நாட்கள் (சுமார் 2½ ஆண்டுகள்) இதில் அடக்கம்.

Nasa
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment