அயோத்தி விவகாரம்: தலித் நிலங்கள் அறக்கட்டளைக்கு மாற்றப்பட்டது செல்லாது; இனி என்ன நடக்கும்?

நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தாலும் கூட, பர்ஹாதா மஞ்சா கிராமத்தில் உள்ள தலித் மக்களுக்கு இந்த நிலம் சென்று சேருமா என்பது கேள்விக் குறிதான். இந்த நிலத்தை 1992ம் ஆண்டு என்.ஆர்.வி.டியில் பணியாற்றிய தலித் நபர் ரோங்காய் என்பவருக்கு தலித் மக்கள் விற்பனை செய்து விட்டனர். அவர் அந்த நிலத்தை பதிவு செய்யப்படாத நன்கொடை பத்திரத்தின் கீழ் இந்த வித்யாபீடத்திற்கு வழங்கிவிட்டார்.

Shyamlal Yadav 

Ayodhya Dalit land transfers scrapped : அயோத்தியில் உள்ள வருவாய் நீதிமன்றம் கடந்த வாரம், 1996ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 22ம் தேதி அன்று தலித்துகளிடமிருந்து கிட்டத்தட்ட 21 பிகாஸ் (52,000 சதுர மீட்டர்) நிலத்தை மகரிஷி ராமாயண வித்யாபீட அறக்கட்டளைக்கு (எம்ஆர்விடி) மாற்றிய சர்வே-நைப்-தாசில்தாரின் உத்தரவை ரத்து செய்தது. பான் சிங் உதவி பதிவு அதிகாரியின் நீதிமன்றம் இந்த இடமாற்றம் சட்டவிரோதமானது எனக் கண்டறிந்து, அந்நிலத்தை அனைத்துச் சுமைகளிலிருந்தும் விடுவித்து அரசாங்கத்திடம் ஒப்படைக்கப்படுகிறது என்று அறிவித்தது.

2019ம் ஆண்டு உச்ச நீதிமன்றம் அயோத்தியில் ராமர் கோவில் கட்டலாம் என்று தீர்ப்பு வெளியிட்ட பிறகு எம்.ஆர்.வி.டி. அறக்கட்டளை அரசு அதிகாரிகளுக்கு நிலத்தை விற்றது தொடர்பாக தி இந்தியன் எக்ஸ்பிரஸ் விசாரணை நடத்தி செய்தி வெளியிட்ட பிறகு இந்த இட விற்பனை தொடர்பாக விசாரணை நடத்த உ.பி. முதல்வர் யோகி ஆதித்யநாத் உத்தரவு பிறப்பித்தார்.ராமாயண வித்யபீட அறக்கட்டளையில் இருந்து நிலம் வாங்கிய சில அதிகாரிகள், 28 ஆண்டுகளுக்கு முன்பு தலித் மக்களிடம் இருந்து சட்டத்திற்கு புறம்பாக அறக்கட்டளை நிலம் வாங்கியதா என்ற விசாரணையை மேற்கொண்டவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தாலும் கூட, பர்ஹாதா மஞ்சா கிராமத்தில் உள்ள தலித் மக்களுக்கு இந்த நிலம் சென்று சேருமா என்பது கேள்விக் குறிதான். இந்த நிலத்தை 1992ம் ஆண்டு என்.ஆர்.வி.டியில் பணியாற்றிய தலித் நபர் ரோங்காய் என்பவருக்கு தலித் மக்கள் விற்பனை செய்து விட்டனர். அவர் அந்த நிலத்தை பதிவு செய்யப்படாத நன்கொடை பத்திரத்தின் கீழ் இந்த வித்யாபீடத்திற்கு வழங்கிவிட்டார்.

துணை பதிவு அலுவலரின் உத்தரவு என்ன?

இந்தியன் எக்ஸ்பிரஸ் செய்தி வெளியிட்ட ஐந்து நாட்களுக்கு பிறகு டிசம்பர் 27ம் தேதி அன்று நன்கொடை பத்திரத்தின் கீழ் நிலம் மாற்றப்பட்டது செல்லுபடியாகாது என்று உத்தரவு பிறப்பித்தது. நிலத்தை மாநில அரசாங்கத்திடம் ஒப்படைக்க உத்தரவிட்டது. இந்த விவகாரம் தொடர்பாக மேற்கொண்டு நடவடிக்கைகளை எடுக்க வழக்கு துணை நிலை நீதிபதிக்கு அனுப்பப்பட்டது.

2016ம் ஆண்டு வரை உ.பி. மற்றும் உத்தரகாண்டில் நடைமுறையில் இருந்த உ.பி. ஜமின்தாரி ஒழிப்பு சட்டம் 1950-ன் கீழ் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்த சட்டத்தில் உள்ள பிரிவு 157-ஏ, பட்டியல் இன மக்களின் நிலத்தை பட்டியல் சமூகத்தை சேராத நபர்களுக்கு விற்பது, நன்கொடையாக பெறுவது மற்றும் குத்தகைக்கு விடுவதை தடுக்கிறது.

இந்தச் சட்டத்தின் விதிகளை மீறி செய்யப்படும் ஒவ்வொரு இடமாற்றமும் செல்லுபடியாகாது என்று பிரிவு 166 கூறுகிறது. 167-ல் விற்பனை செய்யப்பட்ட நிலம் அனைத்துச் சுமைகளிலிருந்தும் விடுவிக்கப்பட்டு மாநில அரசுக்குச் சொந்தமானதாகக் கருதப்படும் என்று கூறப்பட்டுள்ளது.

துணை நிலை மாஜிஸ்திரேட் இந்த உத்தரவை ஏற்கும் பட்சத்தில் நிலம் மாநில அரசுக்கு மாற்றப்படும். நிலத்தை நன்கொடையாக எம்.ஆர்.வி.டிக்கு கொடுத்த ரோங்காய் நிலத்திற்கு உரிமை கோரினால் அதன் பின்னர் அந்த நிலம் தொடர்பான சட்ட ரீதியான செயல்முறை பின்பற்றப்படும்.

அயோத்தி நில விற்பனை விவகாரம்: “சோர் பஜார்” என பாஜகவை சாடிய சாம்னாவின் தலையங்கம்

எம்.ஆர்.வி.டியிடம் இருந்து நிலம் வாங்கிய நபர்கள் இதனால் பாதிக்கப்படுவார்களா?

“நிலம் மாற்றப்பட்ட நாளில் நிலத்தில் இருக்கும் மரங்கள், பயிர்கள் மற்றும் கிணறுகள், குறிப்பிட்ட தேதியிலிருந்து நடைமுறைக்கு வரும் வகையில், அனைத்துச் சுமைகளிலிருந்தும் விடுபட்டதாகக் கருதப்படும். நிலம் மாநில அரசுக்கு சொந்தமாக கருதப்படும்” என்று பிரிவு 167 கூறுகிறது. நிலத்தைப் பெற்றவர் குறிப்பிட்ட காலத்தில் அங்குள்ள அசையும் மற்றும் அசையா சொத்துகளை இடம் மாற்றிக் கொள்ளலாம். இது போன்ற நிலத்தில் இருக்கும் சொத்துகளை பறிமுதல் செய்து அங்கே இருக்கும் நபர்களை வெளியேற்ற மாவட்ட ஆட்சியருக்கு அதிகாரம் உண்டு.

இத்தகைய நிலப் பரிமாற்றம் சட்டத்திற்கு புறம்பானது என்று கருதப்படும் பட்சத்தில், வங்கிகளில் கடன் வாங்கி நிலம் வாங்கியவர் ஹோட்டல் நடத்தினாலும், அந்த அடிப்படையில் பிரதிவாதிகளின் கோரிக்கையை பரிசீலிக்க எந்த நியாயமும் இல்லை.

உ.பி. ZA & LR (ஜமீன்தாரி ஒழிப்பு மற்றும் நிலச் சீர்திருத்தங்கள்) சட்டத்தை மீறி வாங்கப்படும் நிலங்களில் சமபங்கு உரிமை கொண்டாடும் கேள்விகளுக்கு இடமே இல்லை என்று மார்ச் 3, 2020 அன்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்தது. பித்தோராகரில் தலித் ஒருவரிடமிருந்து வாங்கப்பட்ட நிலத்தில் ஹோட்டல் நடத்தி வந்த அகலாக் ஹூசைன் Vs கூடுதல் வருவாய் ஆட்சியர் வழக்கில் நீதிமன்றம் இந்த தீர்ப்பை வழங்கியது. வருவாய்த்துறை அதிகாரிகள் அந்த நில ஒதுக்கீட்டை ரத்து செய்தனர்.

முன்னாள் டிவிஷனல் கமிஷனர் எம்.பி.அகர்வால், முன்னாள் அயோத்தி டி.ஐ.ஜி.தீபக் குமார், முன்னாள் தலைமை வருவாய் அதிகாரி புருஷோத்தம் தாஸ் குப்தா, (தற்போது தகுதி நீக்கம் செய்யப்பட்ட) எம்.எல்.ஏ., இந்திர பிரதாப் திவாரி என்ற கப்பு திவாரியின் உறவினர்கள் மற்றும் ஓய்வுபெற்ற ஐ.ஏ.எஸ் அதிகாரி உமாதர் திவேதி போன்றோர் எம்.ஆர்.வி.டியிடம் இருந்து நிலம் வாங்கினார்கள். ஆனால் தற்போது விஸ்வரூபம் எடுத்திருக்கும் இந்த 21 பிகா நிலங்களில் இல்லை என்பது முக்கியமானது.

தற்போது இந்த வழக்கில் என்ன நடக்கும்?

பழைய ஜமீன்தாரி ஒழிப்பு மற்றும் நில சீர்திருத்த சட்டத்தின் தொடர்புடைய விதிகளின் படி சட்டத்திற்கு விரோதமாக வாங்கப்பட்ட நிலங்கள் தொடர்பான வழக்குகளில் மிகவும் அரிதாகவே நிவாரணம் வழங்கப்படுகிறது என்று உ.பி. நில வருவாய் ஆணைய உறுப்பினர்கள் கூறுகின்றனர்.

1992ம் ஆண்டு ரோங்காயிடம் நிலத்தை விற்பனை செய்த மக்கள் என்ன ஆவார்கள்?

இப்படி விற்பனை செய்த நபர்களில் ஒருவரான மகாதேவ் தன்னுடைய மூன்று பிகா நிலத்தை ரூ. 1.02 லட்சத்திற்கு அறக்கட்டளையிடம் விற்பனை செய்தார். அந்த நிலத்தை அறக்கட்டளை விற்பனை செய்ய துவங்கிய போது சட்டத்திற்கு புறம்பாக என்னுடைய நிலம் வாங்கப்பட்டது என்று உ.பி. வருவாய் ஆணையத்திடம் அவர் புகார் அளித்தார். மகாதேவ் 2019ம் ஆண்டு அளித்த புகாரின் அடிப்படையில் தான் தற்போது விசார்ணைகள் நடத்தப்பட்டு வருகிறது. மகாதேவ் அளித்த புகாரின் அடிப்படையில் அயோத்தியின் சிறப்பு நீதிபதியின் (எஸ்டி/எஸ்டி சட்டம்) உத்தரவின் பேரில் 2019 டிசம்பர் 4ஆம் தேதி மகாதேவ் மீது ஐபிசியின் பல பிரிவுகளின் கீழும், மார்ச் 2020இல் சொத்து வியாபாரிக்கு எதிராகவும் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டது.

மகாதேவ்வின் வழங்கறிஞர் பிரபாகர் பாண்டே இது குறித்து கூறிய போது, நான் 1992ல் எனது வாடிக்கையாளரிடம் இருந்து நிலத்தை ரோங்காய் பெற பயன்படுத்திய பஹினாமாவை ரத்து செய்ய போராடிவருகிறேன் என்று கூறினார். இந்த விவகாரம் அயோத்தி சிவில் நீதிமன்றத்தின் முன் விசாரணையில் உள்ளது என்று கூறினார். நிலத்தை ரோங்காய்க்கு விற்பனை செய்த மற்றொரு பட்டியல் சமூகத்தை சேர்ந்தவரின் வழக்கும் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது என்று பிரபாகர் கூறியுள்ளார்.

தலித் நிலங்களை, அயோத்தி அறக்கட்டளைக்கு மாற்றியது சட்டவிரோதமானது: நீதிமன்றம்!

ரோங்காய்க்கு இந்த வழக்கில் என்ன பங்கு உள்ளது?

தன்னுடைய 60களில் இருக்கும் ரோங்காய் இந்தியன் எக்ஸ்பிரஸிடம் பேசிய போது இந்த பத்திரம் ரத்தானது தொடர்பாக தனக்கு ஏதும் தெரியாது என்றும், இந்த விவகாரத்தில் சட்டப்போராட்டம் நடத்த தன்னிடம் நிதி பலம் இல்லை என்றும் கூறினார். தற்போதும் எம்.ஆர்.வி.டி அறக்கட்டையில் ரூ. 5000 மாத சம்பளத்திற்கு பணியாற்றி வருகிறார் ரோங்காய். அயோத்தியில் இருந்து 150 கி.மீக்கு அப்பால் உள்ள சஹாவ்பூர் கிராமத்தில் அவர் வசித்து வருகிறார்.

ARO-வின் உத்தரவு அயோத்தியில் உள்ள வருவாய் நீதிமன்றங்களில் புதிய வழக்குகளையும், 21 பிகா நிலங்களில் நிலத்தை வாங்கியவர்கள், அவர்களின் விற்பனையாளர்கள் மற்றும் பிற பாதிக்கப்பட்ட தரப்பினர் மீது குற்ற வழக்குகள் போடவும் வழிவகை செய்யலாம்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Get the latest Tamil news and Explained news here. You can also read all the Explained news by following us on Twitter, Facebook and Telegram.

Web Title: Ayodhya dalit land transfers scrapped what happens now

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com