Shiv Sena mouthpiece corners BJP on Ayodhya land : அயோத்தியில் நில விற்பனை விவகாரங்கள் குறித்து இந்தியன் எக்ஸ்பிரஸ் செய்தி வெளியிட்டுள்ள நிலையில் இன்று (23/12/2021) சிவசேனாவின் அதிகாரப்பூர்வ செய்தித்தாளான சாம்னா தன்னுடைய தலையங்கத்தில் BJP மற்றும் அதன் இந்துத்துவா நிகழ்ச்சி நிரலை நிராகரித்தது மற்றும் காவி கட்சியை ”சோர் பஜார்” என்று அழைத்துள்ளது.
டெல்லி ரகசியம்: சிவசேனா தலைவர்களுடன் தனிப்பட்ட உறவை முறிக்க விரும்பாத மோடி
பாஜகவின் இந்துத்துவம் என்பது கள்ள சந்தை (Chor Bazaar) போன்றது. இது நாளுக்கு நாள் தெளிவாகி வருகிறது. தற்போது அயோத்தி நில விற்பனைகளும் இந்த கள்ள சந்தையின் (Chor Bazaar) ஒரு பங்காக மாறியுள்ளது என்று அந்த தலையங்கத்தில் குறிப்பிடப்பட்டிருந்தது.
2019 நவம்பர் 9ஆம் தேதி அயோத்தியில் ராமர் கோயில் கட்டுவது தொடர்பான உச்ச நீதிமன்றத் தீர்ப்பிற்குப் பிறகு, தேர்ந்தெடுக்கப்பட்ட மக்கள் பிரதிநிதிகள் மற்றும் மாநில அரசு அதிகாரிகளின் உறவினர்கள் அயோத்தியில் நிலம் வாங்கியது தொடர்பாக இந்தியன் எக்ஸ்பிரஸ் புதன்கிழமை அன்று செய்தி வெளியிட்டிருந்தது. அதே நாளில் உ.பி. முதல்வர் இந்த விவகாரம் தொடர்பாக விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளார்.
அயோத்தியில் நிலம் வாங்கிய அதிகாரிகள்; விசாரணைக்கு உத்தரவு பிறப்பித்த உ.பி அரசு
தலையங்கத்தில், உச்ச நீதிமன்றம் அயோத்தி விவகாரம் தொடர்பாக தீர்ப்பு வழங்கிய பிறகு பாஜக தலைவர்கள், எம்.எல்.ஏக்கள், மேயர் அயோத்தியில் சட்டத்திற்கு புறம்பாக நிலம் வாங்கியுள்ளனர். இந்த பரிவர்த்தனைகள் சந்தேகத்திற்கு இடம் அளிப்பதோடு அதிர்ச்சியையும் கொடுத்துள்ளது என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.
பிரதமர் கோடி, ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன், உ.பி. முதல்வர் ஆகியோர் முன்னிலையில் பூமி பூஜை நடைபெற்ற அதே நேரத்தில் பாஜகவில் இருக்கும் வர்த்தகர்கள் கோவில் கட்ட தேர்வு செய்யப்பட்டுள்ள நிலத்திற்கு மிக அருகே நிலத்தில் வர்த்தகம் மேற்கொண்டுள்ளனர். இதுவரை கோவில் அறக்கட்டளை 70 ஏக்கர் நிலத்தை கோவில் கட்டுமானத்திற்காக கைப்பற்றியுள்ளது. அதே நேரம் பாஜக எம்.எல்.ஏக்கள் மற்றும் காவல்துறையினர், கட்சிக்கு நெருக்கமானவர்கள் பலர் நிலம் வாங்கி பெரிய அளவில் முதலீடு செய்துள்ளனர். எப்படி அவர்கள் நிலம் வாங்கியுள்ளனர் என்பதையும், அவர்கள் வாங்கியுள்ள நிலத்தின் மதிப்பு என்ன என்பதையும் தி இந்தியன் எக்ஸ்பிரஸ் கோடிட்டு காட்டியுள்ளது. கோவில் கட்டுமானத்திற்கு பிறகு இத மொத்த இடமும் மாறிவிடும். அதனால் நிலத்தின் விலையும் அதிகரித்துவிடும். இந்த வர்த்தகம் மதத்தின் பெயரால் நடைபெற்றுள்ளது. யார் இதற்காக ரத்தம் சிந்தினார்கள், யார் இதற்காக இறந்தார்கள்? இப்போது யார் இதில் லாபம் பார்க்கின்றார்கள். இது ஒரு முறைகேடு என்று சாம்னா குறிப்பிட்டுள்ளது.
அயோத்தி மேயர் சில லட்சங்களுக்கு ஒரு நிலத்தை வாங்கி அடுத்த பத்து பதினைந்து நிமிடங்களில் ராம் ஜென்மபூமிக்கு ரூ. 16 கோடிக்கு விற்பனை செய்துள்ளார். அந்த மேயரும் பாஜவை சேர்ந்தவர் தான். இது ராமர் பெயரில் நடக்கின்ற கள்ளச் சந்தை. யாரேனும் இதனை இந்துத்துவா என்று அழைத்தால் கைகளைக் கட்டிக் கொண்டு அவர்களின் கால்களில் விழுந்துவிட வேண்டும் என்றும் அந்த கட்டுரையில் குறிப்பிட்டுள்ளது.
எம்.எல்.ஏ முதல் மேயர் வரை: ராமர் கோவில் தீர்ப்பிற்கு பிறகு அயோத்தியில் நிலம் வாங்கிய அதிகாரிகள்
அதிகாரத்திற்காக இந்துத்துவா கொள்கைகளை சிவசேனா விவாகரத்து செய்துவிட்டது என்று பாஜக கூறுவதுண்டு. ஆனால் பாஜக தற்போது இந்த வணிக ரீதியான இந்துத்துவத்துடன் ஒட்டிக்கொள்ளட்டும். இவர்கள் ராமரையும் கூட இந்த வணிக ரீதியான நடவடிக்கைகளில் இருந்து விட்டுவைக்கவில்லை. கோவிலின் நலனுக்காக இறந்தது யாரோ. ஆனால் அதன் மூலம் பாஜக ஆதாயம் அடைகிறது. அயோத்தியில் கோவில் கட்ட வேண்டும் என்று போராட்டம் நடத்திய எல்.கே. அத்வானி பாஜகவில் இருந்து ஓரங்கட்டுப்பட்டுவிட்டார். தற்போது அயோத்தியில் வணிக மையங்கள் உருவாகின்றனர் என்றும் குறிப்பிட்டப்பட்டிருந்தது.
அயோத்தியில் தலித் நிலங்களை சட்டவிரோதமாக வாங்கிய அறக்கட்டளை; அதிகாரிகளின் உறவினர்களுக்கு விற்பனை
பாஜகவின் இந்துத்துவா என்பது இந்த சமூகத்தை கலங்கப்படுத்துகிறது. நிலத்தை கையகப்படுத்த தொழில்நுட்பத்தை வளர்த்துக் கொண்டது பாஜக என்ற குற்றச்சாட்டையும் முன்வைத்த சாம்னா, ”பாஜகவின் இந்துத்துவாவில் ராமருக்கு இடம் இல்லை, ஆனால் வணிகத்திற்கு மட்டும் தான் இடம் இருக்கிறது என்பதையே இந்த செய்தி சுட்டிக்காட்டுகிறது. ராம் நாம் சத்யா ஹெய் என்பது மற்றவர்களுக்கு தான். பாஜகவிற்கு அதிகாரமும் பணமும் தான். பாஜக நாட்டை விற்றுவிட்டது ஆனால் அயோத்தியை விற்க விடமாட்டோம். ஏன் என்றால் இந்துத்துவாவின் காவிக் கொடியை சிவசேனா பற்றி இருக்கிறது” என்று கட்டுரையை முடித்துள்ளது.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil