டிஜிட்டல் ஹெல்த் ஐடி – 14 டிஜிட் நம்பரின் பயன்களை அறிந்துகொள்ளுங்கள்!

ஆயுஷ்மான் பாரத் டிஜிட்டல் மிஷன் கீழ் ஒவ்வொரு குடிமகனுக்கும் டிஜிட்டல் ஹெல்த் ஐடி வழங்கப்படுகிறது. நாடு முழுவதும் உள்ள மருத்துவமனைகளில் சிகிச்சை பெற இது உங்களுக்கு எப்படி உதவும் என்பதையும், இதில் எப்படி பதிவு செய்யலாம் என்பதையும் இச்செய்தி தொகுப்பில் காணுங்கள்

பிரதமர் நரேந்திர மோடி இன்று ஆயுஷ்மான் பாரத் டிஜிட்டல் மிஷன் (The Ayushman Bharat Digital Mission) என்னும் திட்டத்தை தொடங்கி வைத்தார். இந்தத் திட்டத்தின் மூலம் குடிமக்கள் அனைவருக்கும் 14 எண் டிஜிட்டல் ஹெல்த் ஐடி வழங்கப்படும். இந்த பிரத்யேக ஐடி மூலம், ஒரு நபரின் முழு மருத்துவ வரலாற்றைப் பதிவேற்றம் செய்துகொள்ளலாம். எளிதாக கணினியில் உங்களில் ஹெல்த் ஐடி நம்பர் டைப் செய்தால் பழைய பரிசோதனை முடிவுகள்,மருத்துவ சான்றிதழ்கள்,  ஆகியவற்றை எளிதாக தெரிந்துகொள்ளலாம்.

ஹெல்த் ஐடி பெறுவது எப்படி?
டிஜிட்டல் ஹெல்த் மிஷன் (NDHM) திட்டத்தில் சேர விரும்புவோர், https://nha.gov.in/NDHM என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்திலோ அல்லது மொபைலில் ABMD Health Records செயலியை பதிவிறக்கம் செய்தோ ரெஜிஸ்டர் செய்யலாம். இதுதவிர, இந்தியா முழுவதும் உள்ள அரசு அல்லது தனியார் மருத்துவமனைகள், சமூக சுகாதார மையங்கள் மற்றும் அரசாங்கத்தின் ஆரோக்கிய மையங்களில் ஹெல்த் ஐடியில் ரெஜிஸ்டர் செய்துதரக்கோரலாம்.
அந்நபர், மருத்துவ சிகிச்சை ஒருங்கிணைப்புக்காகவும், எதிர்கால மருத்துவ பதிவுகளைப் பகிர்வதற்காகவும் தனிப்பட்ட சுகாதார பதிவுகள் (Personal Health Records)பராமரிப்பது  அவசியம்.


PHR என்றால் என்ன?
ஒவ்வொரு ஹெல்த் ஐடிக்கும் சுகாதார பதிவுகள் தரவைப் பகிர்வதற்கு ஒப்புதல் மேலாளருடன் இணைப்பு தேவை. ஒப்புதல் மேலாண்மை என்பது வாடிக்கையாளர்கள் ஒரு வணிகத்துடன் பகிர விரும்பும் தனிப்பட்ட தரவை தீர்மானிக்க அனுமதிக்கும் ஒரு அமைப்பு அல்லது செயல்முறையாகும். தற்போது, ஒருவர் ஹெச்ஐடி-சிஎம்-இல் பதிவு செய்ய ஹெல்த் ஐடியைப் பயன்படுத்தலாம்.
ரெஜிஸ்டர் செய்திட என்ன தேவை?
தற்போது, ஏபிடிஎம் மொபைல் அல்லது ஆதார் கார்ட் மூலம் ஹெல்த் ஐடி உருவாக்குகிறது. விரைவில் பான் கார்டு அல்லது ஓட்டுநர் உரிமத்துடன் ஹெல்த் ஐடி உருவாக்கத்தை ஆதரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
மொபைல் அல்லது ஆதார் மூலம் ஹெல்த் ஐடி உருவாக்கிட, உங்களின் பெயர், பிறந்த ஆண்டு, பாலினம், முகவரி, மொபைல் எண்/ஆதார் விவரங்களை பகிர்ந்து கொள்ள கோருகிறது.
ஆதார் கட்டாயமா?
இல்லை. ஆதார் இல்லாமலே, மொபைல் எண்ணைப் பயன்படுத்தி ரெஜிஸ்டர் செய்யலாம்
எனது மொபைல் எண்ணுடன் இணைக்கப்படாத எனது ஆதார் எண்ணை பயன்படுத்தலாமா?
நீங்கள் ரெஜிஸ்டர் செய்திட ஆதார் எண்ணை உபயோகித்தால், ஆதாரில் உள்ள செல்போன் எண்ணுக்கு ஓடிபி மெசேஜ் அனுப்பப்படும். அதை பதிவிடுவது கட்டாயம். இல்லையெனில், அவர்கள் அருகிலுள்ள மருத்துவ மையத்தில் ஆதார் எண்ணைப் பயன்படுத்தி பயோமெட்ரிக் அங்கீகாரத்தைத் தேர்வு செய்ய வேண்டும். வெற்றிகரமான அங்கீகாரத்திற்குப் பிறகு, அந்த மையத்திலே தனது ஹெல்த் ஐடியை உருவாக்கிடலாம்.


தனிப்பட்ட சுகாதார பதிவுகள் பாதுகாப்பாக இருக்குமா?
ஏபிடிஎம் பயனாளிகளின் சுகாதாரப் பதிவுகள் எதையும் சேமிக்கவில்லை என்று என்ஹெச்ஏ கூறுகிறது. பதிவுகள் சுகாதாரத் தகவல் வழங்குநர்களுடன் ரிடென்ஷன் பாலிசி அடிப்படையிலே சேமிக்கப்படுகிறது. இந்த பாலிசி மூலம், அவரின் தகவல்கள் எந்த காலம் வரை சேமித்துவைத்திருக்கலாம் என்பதை அந்நபர்கள் தான் முடிவு செய்கின்றனர். சம்பந்தப்பட் நபர் ஒப்புதல் அளித்த பின்னரே ஏபிடிஎம் நெட்வொர்க்கில் “மறைகுறியாக்க வழிமுறைகளுடன்” தனிப்பட்ட சுகாதார தகவல்கள் பகிரப்படுகின்றன”.
ஹெல்த் ஐடியை நீக்கிவிட்டு, தளத்தைவிட்டு வெளியேறலாமா?
நிச்சயம் வெளியேறலாம் என என்ஹெச்ஏ கூறுகிறது. இரண்டு விதமான விருப்பங்கள் பயனாளிகளுக்கு வழங்குகிறது. ஒன்று ஒரு பயனர் தனது சுகாதார ஐடியை நிரந்தரமாக நீக்கலாம் அல்லது தற்காலிகமாக செயலிழக்கச் செய்யலாம்.
ஹெல்த் ஐடியை நிரந்தரமான நீக்கும் பட்சத்தில், அனைத்து விதமான தகவல்களும் அழிக்கப்படும். எதிர்காலத்தில், இந்த ஐடியை பயன்படுத்தி எவ்வித தகவல்களையும் பெற இயலாது.
தற்காலிகமாக ஐடியை செயலிழக்க வைத்தால், மீண்டும் ரீஆக்டிவேட் செய்வது வரை பயனாளி அந்த கார்ட்டை பயன்படுத்த இயலாது. எந்தவொரு மருத்துவச் சிகிச்சை மையத்திலோ அந்த ஹெல்த் ஐடியை பயன்படுத்த முடியாது.
என்னென்ன வசதிகள்
மருத்துவமனையில் சேர்வது மூலம் டிஸ்சார்ஜ் ஆகுவது வரை மொத்த விவரங்கள் டிஜிட்டலாக பெற முடியும். கூடுதலாக, நீண்ட கால தேவைக்காக உங்களது பழைய மருத்துவ சிகிச்சை விவரங்களைப் பதிவேற்றிப் பயன்பெறலாம்.
வரவிருக்கும் புதிய வசதிகள்?
வரவிருக்கும் புதிய வசதி மூலம், இந்த கார்ட் மூலம் நாடு முழுவதும் அங்கீகரிக்கப்பட்ட மருத்துவர்களை கண்டறிய முடியும். இதனால், போலியான மருத்துவர்களை எளிதாக கண்டறியலாம்.பயனாளி தனது குழந்தை பிறந்ததிலிருந்து ஹெல்த் ஐடியை பராமரிக்கலாம். கூடுதலாக, அந்நபர் தனது அடையாள அட்டையை அணுகவும், தனிப்பட்ட சுகாதார பதிவுகளைப் பார்க்கவும் அல்லது நிர்வகிக்கவும் ஒரு நபரை நியமிக்க முடியும். இந்த முறை மூலம் செல்போன்கள் இல்லாதவர்களுக்கு ஹெல்த் ஐடி நிர்வகிப்பதில் சிரமம் இருக்காது.
இந்த திட்டத்தின் அவசியம் என்ன?
இந்த முயற்சி “மருத்துவமனைகளில் நடைமுறைகளை எளிமையாக்குவதோடு” “வாழ்க்கை எளிமையை அதிகரிக்கும்” ஆற்றலைக் கொண்டுள்ளது என பிரதமர் மோடி தெரிவித்திருந்தார்.
தற்போது, ​​மருத்துவமனைகளில் டிஜிட்டல் ஹெல்த் ஐடியின் பயன்பாடு தற்போது ஒரு மருத்துவமனை அல்லது ஒரே குழுவிற்கு மட்டுமே வரையறுக்கப்பட்டுள்ளது. அதிகப்படியான பிரைவேட் மருத்துவமனைகளை கொண்டுள்ள குழுவை பெரும்பாலும் ஆதரிக்கிறது. புதிய முயற்சி முழு சுற்றுச்சூழல் அமைப்பையும் ஒரே தளத்தில் கொண்டு வரும்.


உதாரணமாக, ஒரு நோயாளி டெல்லியில் உள்ள எய்ம்ஸில் சிகிச்சை பெற்று, வேறு நகரத்தில் உள்ள மற்றொரு மருத்துவமனைக்கு செல்ல விரும்பும் பட்சத்தில், அந்த மருத்துவமனை டிஜிட்டல் ஹெல்த் கார்ட்டை அங்கீகரிக்கும் சூழலிலிருந்தால், பழைய மருத்துவ பரிசோதனை முடிவுகளை கொண்டு செல்ல வேண்டிய அவசியம் இருக்கும். அனைத்து தகவலும் ஹெல்த் ஐடி நம்பர் மூலம், தயாராக இருக்கும். மேலும், அருகிலுள்ள மருத்துவர்கள் மற்றும் நிபுணர்களைக் கண்டுபிடிப்பதையும் இந்த தளம் எளிதாக்குகிறது.


எதிர்காலத்தில், இந்த வசதியை பெற டிஜிட்டல் ஹெல்த் கார்ட் அவசியம் என மத்திய அரசு கூறினாலும் ஆச்சரியப்படுவதற்கு இல்லை

Get the latest Tamil news and Explained news here. You can also read all the Explained news by following us on Twitter, Facebook and Telegram.

Web Title: Ayushman bharat digital mission health id benefits

Next Story
முட்டை, பச்சைப் பயறு, பீன்ஸ்… தினசரி 150 கிராம் புரோட்டின் கிடைக்க இந்த உணவுகள் முக்கியம்!Tamil Health tips in tamil: Protein rich foods in tamil
The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com