இன்றும் ஏன் பெரியார் தமிழகத்தின் முக்கியமான ஒருவராக திகழ்கிறார்?

ஒவ்வொரு கட்சியும் இன்னும் வெறும் பெயரளவிலாவது பெரியாரின் சமூக மற்றும் அரசியல் நீதி குறித்து பேசி கொண்டு தான் இருக்கின்றார்கள். 

பெரியாரின் 46வது இறந்த தினத்தன்று பாஜக வெளியிட்ட  ட்வீட், தற்போது நீக்கப்பட்டுவிட்டது, தமிழகத்தில் பெரும் அதிருப்தியையும், கோப அலைகளையும் உருவாக்கியது. கடந்த ஆண்டு மார்ச் மாதம் இதே போன்று பாஜக  தலைவர் எச்.ராஜா,” தமிழகம் முழுவதிலும் உள்ள பெரியார் சிலைகள் உடைக்கப்படும்” என்று பதிவிட்ட முகநூல் பதிவாலும் கடும் எதிர்ப்பலைகள் தமிழகத்தில் உருவானது. இந்து மதம் வெளிப்படையாக மற்றும் நிலையாக இருக்கும் ஒரு மாநிலத்தின் மக்களுக்கு ஏன் இந்த சீர்திருத்தவாதி, சிந்தனையாளரை மிகவும் பிடித்திருக்கிறது?

இன்று காணப்பட்டது அரிய வகை சூரிய கிரகணமா ?

யார் இந்த பெரியார்?

1879ம் ஆண்டு பெரியார் பிறந்தார். தமிழ் மக்களின் அடையாளம் மற்றும் சுயமரியாதை ஆகியவற்றிற்காக இவர் நடத்திய சுயமரியாதை போராட்டங்களின் மூலமாக இன்றும் அவர் அடையாளம் காணப்படுகிறார். திராவிட மக்களுக்காக திராவிட நாடு என்று சிந்தித்த அவர் திராவிடர் கழகம் என்ற கட்சியையும் நிறுவினார். ஈரோடு மாவட்டத்தில் காங்கிரஸ் கட்சியின் தொண்டராக தன்னுடைய அரசியல் பயணத்தை  துவங்கினார் அவர்.

திருநெல்வேலி மாவட்டம் சேரன்மாதேவியில் அமைக்கப்பட்ட குருகுலம் காங்கிரஸ் ஆதரவால் நடத்தப்பட்டது. அதனை வி.வி.எஸ். ஐயர் நடத்திவந்ந்தார். அப்போது பிராமண குடும்பத்தை சார்ந்த மாணவர்களுக்கு தனியாகவும், இதர மாணவர்களுக்கு தனியாகவும் உணவு பரிமாறப்பட்டது. இதனை எதிர்த்து காந்தியிடம் வாக்குவாதம் நடத்தினார். அம்மாணவர்களின் பெற்றோர்களின் வேண்டுகோள்களுக்கு இணங்க வி.எஸ்.எஸ் ஐயர் உணவு வழங்கினார். இதனை பெரியார் எதிர்த்தார். காந்தியோ “ஒருவர் மற்றொருவருடன் அமர்ந்து உணவு உண்ணாமல் இருப்பது பாவத்திற்கு உரிய செயல் ஒன்றும் இல்லை. அவர்களின் மரபுகளை மதிக்க வேண்டும்” என்று கூறினார்.

இதனை ஏற்றுக் கொள்ள மறுத்த பெரியார் 1925ம் ஆண்டு காங்கிரஸ் கட்சியில் இருந்து வெளியேறினார். பிறகு நீதிக்கட்சியில் இணைந்து சமூகத்தில் பிராமண மக்கள் செலுத்தும் ஆதிக்கத்திற்கு எதிராக சுயமரியாதை இயக்கத்தில் பங்கேற்றார்.  பிராமணோர் அல்லாதோருக்கு அரசு வேலை வாய்ப்புகளில் இடம் அளிக்க வேண்டும் என்று நீதிக்கட்சி போராட்டம் நடத்தியது. அதன் பின்னர் மெட்ராஸ் மாகாணத்தை ஆளும் பொறுப்பு நீதிக்கட்சியின் கைக்கு வந்த போது இட ஒதுக்கீடு அறிவித்து உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டது.

பெரியாரின் புகழ், தமிழகத்தை தாண்டியும் பரவிச் சென்றது. வைக்கம் பகுதியில் 1924ம் ஆண்டு நடைபெற்ற வைக்கம் சத்தியாகிரக போராட்டத்தில் பங்கேற்றார். புகழ்பெற்ற வைக்கம் கோவிலில் தாழ்த்தப்பட்ட மக்களின் நுழைவுக்காக ‘ஆலய நுழைவு’ போராட்டத்தில் ஈடுபட்டார். இந்த போராட்டத்தின் தன்னுடைய மனைவியுடன் கலந்து கொண்டு சிறைவாசம் பெற்றார். அதன் பின்பு அவரை வைக்கம் வீரர் என்றும் வழங்கலாயிற்று.

1920 முதல் 1930 ஆண்டுகள் வரையில் சமூக மற்றும் அரசியல் சீர்திருத்தங்களை மேற்கொண்டார். காங்கிரஸ் கட்சியிலும், தேசிய விடுதலை இயக்கத்திலும் இருக்கும் பிற்போக்கு தனங்களை முற்றிலுமாக எதிர்த்தார். தமிழ் சமூகம் பாரபட்சமற்ற சமநிலை சமூகமாக இருக்க  வேண்டும் என்றும் அதற்காக போராடினார். சமஸ்கிருதம் பேசும் ஆரிய பிராமணர்களால் தான் தமிழ் சமூகத்தில் சாதிமுறைகள் கொண்டு வரப்பட்டது என்றும் அவர் தன்னுடைய வாதங்களையும் கருத்துகளையும் முன் வைத்தார்.

இந்தி திணிப்பினை காங்கிரஸின் அமைச்சரவை 1930 ஆண்டுகளில் முன்வைத்த போது அதனை கடுமையாக எதிர்த்தார். மேலும் தமிழ் அடையாளம் மற்றும் சுயமரியாதை இயக்கத்தின் மீதும் நடத்தப்பட்ட தாக்குதல் என்றார். 1940ம் ஆண்டில் திராவிடர் கழகத்தை உருவாக்கினார். தமிழ், மலையாளம், தெலுங்கு, கன்னட மொழி பேசும் மக்களை ஒருங்கிணைத்த சுதந்திர திராவிட நாடு தேவை என்ற கோரிக்கையை முன் வைத்தார். இவருடைய கொள்கைகள் அனைத்தும் தமிழக கலாச்சாரம் மற்றும் அரசியல் அடையாளத்தை மறுசீரமைத்தது. அந்த கொள்கைகள் இன்றைய தமிழ் நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் எதிரொலித்து கொண்டு தான் இருக்கிறது. 1973ம் ஆண்டு, தன்னுடைய 94வது வயதில் உயிரிழந்தார்.

மேலும் படிக்க : திராவிடக் கட்சிகளை தூண்டிச் சுடர்விட வைக்கும் பெரியார்

இந்த மண்ணில் பெரியார் விட்டுச் சென்றது என்ன?

ஒரு சமூக சீர்திருத்தவாதியாக அவர், சமூகத்தில், கலாச்சாரத்தில், பாலின ரீதியில் சமமற்ற தன்மை இருப்பதை உணர்ந்தார். மதநம்பிக்கை, பாரம்பரியம், பாலினம் ஆகியவற்றின் அடிப்படையை தொடர்ந்து கேள்வி கேட்டார். மக்கள் பகுத்தறிவுடன் செயல்பட வேண்டும் என்று கேட்டுக் கொண்டார். பெண்கள் சுதந்திரமாக இருக்க வேண்டும் என்றும் வெறும் குழந்தைகள் பெற்றுக் கொள்ளும் கருவியாக மட்டும் இருக்க கூடாது என்றும் கூறினார். வேலை நிறுவனங்களிலும் சமத்துவம் தேவை என்றும் அவர் போராடினார்.

மேலும் சடங்குகள், சம்பிரதாயங்கள் அற்ற திருமணங்களை முன் நின்று நடத்தினார். பெண்களுக்கு சொத்துரிமை மற்றும் விவாகரத்து செய்வத்ற்கான உரிமையையும் அவர் பெற்றுத் தந்தார். மக்கள் தங்களின் பெயர்களுக்கு பின்னால் இட்டுக் கொள்ளும் சாதிப்பெயர்களை இனி பயன்படுத்த வேண்டாம் என்றும், தாழ்த்தப்பட்டவர்கள் சமைத்த உணவுகளை மாநாடுகளில் பரிமாறவும் ஏற்பாடுகளை செய்தார் அவர். ஆண்டாடு காலமாக இருந்த சாதிய, மத கோட்பாடுகளில் இருக்கும் தவறுகளை அவர் சுட்டிக் காட்டினார். அதனால் தான் அவர் இன்றும் தந்தை பெரியார் என்று வழங்கப்படுகிறார். ஆனாலும் இன்றும் தமிழகத்தில் சாதிப்பிரிவினைகள் இருந்து கொண்டு தான் இருக்கிறது. ஒவ்வொரு கட்சியும் இன்னும் வெறும் பெயரளவிலாவது பெரியாரின் சமூக மற்றும் அரசியல் நீதி குறித்து பேசி கொண்டு தான் இருக்கின்றார்கள்.

Get all the Latest Tamil News and Tamil Nadu News at Indian Express Tamil. You can also catch all the latest Tamil Explained News by following us on Twitter and Facebook

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com.
Just Now
X
×Close
×Close