பூஸ்டர் டோஸ் ஒமிக்ரானை எதிர்த்து செயல்படுமா? - விளக்கப் படங்கள்
தடுப்பூசிகள் ஏற்படுத்தியுள்ள நோய் எதிர்ப்பு சக்தியானது காலப்போக்கில் குறையும் தன்மை கொண்டவை என்பதால் பூஸ்டர் தடுப்பூசிகளை செலுத்த சில நாட்டின் அரசுகள் மக்களுக்கு பரிந்துரை செய்துள்ளது.
தடுப்பூசிகள் ஏற்படுத்தியுள்ள நோய் எதிர்ப்பு சக்தியானது காலப்போக்கில் குறையும் தன்மை கொண்டவை என்பதால் பூஸ்டர் தடுப்பூசிகளை செலுத்த சில நாட்டின் அரசுகள் மக்களுக்கு பரிந்துரை செய்துள்ளது.
Can booster doses fight Omicron variant of Covid-19 :
Advertisment
கொரோனா தொற்றின் புதிய மாறுபாடான ஒமிக்ரான் உலக அளவில் பெரும் கவலை அளிக்கக் கூடிய ஒரு மாறுபாடாக உருவெடுத்துள்ளது. இந்த தொற்றின் தாக்கம், பரவும் தன்மை, உயிரிழப்புகள், அறிகுறிகளின் தீவிரம், மருத்துவமனை சேர்க்கை அதிகரிப்பு போன்றவை குறித்து உறுதியான முடிவுகள் எடுக்க இன்னும் போதுமான தரவுகள் கிடைக்கப்படவில்லை.
உலகம் முழுவதும் பூஸ்டர் தடுப்பூசிகளை செலுத்துவது குறித்து ஆலோசனை நடைபெற்று வருகிறது. மக்களில் பெரும்பாலானோர் இரட்டை டோஸ் தடுப்பூசிகளை செலுத்திக் கொண்டுள்ளனர். ஒரு சில நிறுவனங்கள் கொரோனாவுக்கு எதிரான பாதுகாப்பை வழங்கும் ஒற்றை டோஸ் வகை தடுப்பூசிகளையும் வழங்கியுள்ளது.
இந்நிலையில் இந்த தடுப்பூசிகள் ஏற்படுத்தியுள்ள நோய் எதிர்ப்பு சக்தியானது காலப்போக்கில் குறையும் தன்மை கொண்டவை என்பதால் பூஸ்டர் தடுப்பூசிகளை செலுத்த சில நாட்டின் அரசுகள் மக்களுக்கு பரிந்துரை செய்துள்ளது. அமெரிக்காவில் பொதுமக்கள் பூஸ்டர் தடுப்பூசிகளை செலுத்திக் கொள்கின்றனர்.
Advertisment
Advertisements
இந்தியாவில் பூஸ்டர் தடுப்பூசி தொடர்பாக இன்னும் எந்தவிதமான அதிகாரப்பூர்வ அறிவிப்புகளும் வெளியாகவில்லை. ஒமிக்ரான் தொற்றை எதிர்க்க பூஸ்டர் தடுப்பூசிகள் உதவுமா என்பதை கீழே உள்ள விளக்கப் படங்கள் மூலம் நீங்கள் அறிந்து கொள்ள முடியும்