Advertisment

பூனைக்கும் கொரோனா! - இனி செல்லப் பிராணிகளையும் தனிமைப்படுத்தணுமா?

ஹாங்காங்கில் கொரோனா வைரஸால் பாதிப்படைந்த நாய்கள் எந்த விதமான அறிகுறிகளையும் காட்டவில்லை. ஆனால், இந்த பூனை தற்போது சுவாசம் மற்றும் செரிமான பிரச்சினைகளால் அவதிப்படிகிறது.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
பூனைக்கும் கொரோனா! - இனி செல்லப் பிராணிகளையும் தனிமைப்படுத்தணுமா?

கடந்த வாரம், பெல்ஜியம் நாட்டில், கொரோனா வைரஸ் தொற்றால் பாதிப்படைந்த உரிமையாளர் ஒருவர் வளர்த்த செல்லப் பூனைக்கும் வைரஸ் இருப்பதை சுகாதார அதிகாரிகள் கண்டறிந்ததாக ஏ.எஃப்.பி என்ற செய்தி நிறுவனம் தெரிவித்தது.

Advertisment

முன்னதாக, ஹாங்காங் நாட்டில் கொரோனா வைரஸ் தொற்று உடையவரோடு தொடர்பில் இருந்ததாக சந்தேகிக்கப்பட்ட 17 நாய்கள் மற்றும் எட்டு பூனைகளுக்கு நடத்தப்பட்ட சோதனையில், இரண்டு நாய்களுக்கு வைரஸ் தொற்று இருப்பது கண்டறியப்பட்டது.

பெல்ஜிய உணவு பாதுகாப்பு நிறுவனமான AFSCA வெளியிட்டுள்ள அறிக்கையில், " ஹாங்காங்கில் பாதிப்படைந்த நாய்கள் எந்த விதமான நோய் அறிகுறிகளையும்  காட்டவில்லை. ஆனால், இந்த பூனை சுவாசம் மற்றும் செரிமான பிரச்சினைகளால் அவதிப்படுகிறது என்று தெரிவித்துள்ளது.

தற்போதைய கொவிட்-19 நோயை ஏற்படுத்தும் வைரஸ்,  கொரோனா வைரஸ் குடும்பத்தின் ஒரு குறிப்பிட்ட வகைகளில் ஒன்றாகும்.

எம்பிபிஎஸ் மட்டுமல்ல... நீட் வெற்றிக்கு பிறகு உங்களுக்கு இத்தனை வாய்ப்புகள்!

மனிதர்களைத் தாண்டி, இந்த வைரஸ் பன்றிகள், கால்நடைகள், பூனைகள், நாய்கள், ஒட்டகங்கள், முள்ளெலிகள், பறவைகள் உள்ளிட்ட பாலூட்டிகளை பாதிக்கலாம் என்று கணிக்கப்படுகிறது.

SARS, MERS போன்ற நோய்களை ஏற்படுத்திய வைரஸைப் போலவே, நாவல் கொரோனா வைரசும் (SARS-CoV-2)  ஜூனோடிக் வகையை சேர்ந்தது. அதாவது, விலங்குகளிடமிருந்து மனிதர்களுக்கு பரவும் தன்மை கொண்டவை. புதிய கொரோனா வைரஸ் முதன் முதலில்  எந்த விலங்கிடமிருந்து மனிதர்களுக்கு வந்தது, என்பதை  இன்னும் தெளிவாகத் கூற முடியவில்லை.

பூனைகள், நாய்ககள் போன்ற விலங்குகளைப் பாதித்து,  ஆனால், மனிதர்களைப் பாதிக்காத சில கொரோனா வைரஸ்களும்  உள்ளன. நோய் தடுப்பு மற்றும் கட்டுப்பாட்டு மையக் கூற்றுப்படி, தற்போது பரவும் கொவிட்-19 நோயை  செல்லப்பிராணிகள் பரப்பும் என்பதற்கு இதுவரை எந்த அடிப்படை ஆதாரங்கள் இல்லை, கொவிட்-19 நோயால் வெவ்வேறு விலங்குகள் எப்படி பாதிக்கப்படிகின்றன என்பதை புரிந்து கொள்ள மேற்படி ஆய்வுகள் தேவைப்படுகிறது"என்று தெரிவித்துள்ளது.

அமெரிக்க கால்நடை மருத்துவ சங்கத்தின் (ஏ.வி.எம்.ஏ) வலைத்தளத்தில், “2 நாய்கள் (ஹாங்காங்) மற்றும் 1 பூனை (பெல்ஜியம்) கொரோனாவைரஸால்  பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.  செல்லப்பிராணிகளால் பொது மக்கள் உட்பட பிற விலங்குகளுக்கு கொவிட்-19 நோய் பரப்பப்படுகின்றன என்பதற்கு ஆதாரம் இல்லை என்பதை  தொற்று நோய் நிபுணர்களும், பல சர்வதேச விலங்கு சுகாதார நிறுவனங்களும் ஒப்புக்கொள்கின்றன,” என்று தெரிவித்துள்ளது.

பரிந்துரைக்கப்படும் முன்னெச்சரிக்கைகள் என்ன ?

கொவிட்-19 நோய் உறுதி செய்யப்பட்டவர்கள் விலங்குகளுடன் நெருங்கிய தொடர்பில் இருப்பதை தவிர்க்குமாறு அறிவுருத்தப்படுகிறார்கள்.

நோய்த்தொற்று இல்லாதவர்கள் தங்கள் செல்லப்பிராணிகளுடன் வழக்கம் போல் நடைபயிற்சி, உணவளித்தல், விளையாடுதல் போன்றவைகள செய்ய ஏ.வி.எம்.ஏ பரிந்துரைக்கிறது. செல்லப்பிராணிகளுடன் தொடர்புகொள்வதற்கு முன்பும், பின்பும்... சுகாதாரத்தை பேணிகாக்க தங்கள் கைகளைக் கழுவவும் பரிந்துரை செய்யப்படுகிறார்கள்.

AFP செய்தி நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில், விலங்குகளை முகத்தில் யாரும் எச்சில் செய்ய வேண்டாம்  என்ற பரிந்துரையையும் பெல்ஜிய அரசு விடுத்துள்ளது.  விலங்குக்கு வைரஸ் பரவுவதைத் தடுப்பதற்கும், மனிதர்கள் எச்சில் வழியாக நோய் பிறருக்கு பரவாமல் தடுப்பதற்கும் இந்த பரிந்துரை பொருந்தும் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Coronavirus Corona Corona Virus
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment