வலுவான சுகாதார அமைப்பு: கேரளாவில் கொரோனா கட்டுக்குள் வந்த ரகசியம்

செயல்படாத மருத்துவமனைகளை கோவிட் -19 வசதிகளாக மாற்றி, அரசு தனது மருத்துவ வசதிகளையும் முடுக்கிவிட்டது. இதுவரை, 38 அரசு மருத்துவமனைகள் கோவிட் -19 மருத்துவமனைகளாக மாற்றப்பட்டுள்ளன

corona virus containment in kerala robust healthcare system
corona virus containment in kerala robust healthcare system

ஜனவரி 30 ஆம் தேதி, இந்தியா தனது முதல் கொரோனா வைரஸ் பாதிப்பை கண்டது. கேரளாவும் அன்று தான் தனது முதல் கொரோனா பாதிப்பை உறுதி செய்தது. வுஹானில் இருந்து திரும்பிய 23 வயதான மருத்துவ மாணவருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டது.


அன்றிலிருந்து, இன்று வரை கேரளாவில் 437 கொரோனா பாதிப்புகள் உறுதி செய்யப்பட்டுள்ளன. சிகிச்சை மூலம் 308 பேர் வைரஸில் இருந்து மீண்டுள்ளனர். இரண்டு பேர் இதுவரை இறந்துள்ளனர். 70% பேர் இதுவரை சிகிச்சை மூலம் குணமடைந்துள்ளனர். மீட்பு விகிதம் நாட்டிலேயே கேரளாவில் தான் அதிகம். கேரளா இதுவரை 20,821 மாதிரிகளை பரிசோதித்துள்ளது, இது எந்த மாநிலத்தை விடவும் மிக அதிகமாகும்.

குஜராத் மாநிலத்தில் கொரோனா பாதிப்பு மற்றும் மரணங்கள் ஒரே வாரத்தில் மூன்று மடங்கு அதிகரிப்பு

1956 ஆம் ஆண்டில் கேரளா ஒரு தனி மாநிலமாக மாறுவதற்கு முன்பே, இப்பகுதி பல பாதிப்புள்ள பொது சுகாதார நிகழ்வுகளை கண்டுள்ளது. 1879 ஆம் ஆண்டில், முந்தைய திருவிதாங்கூர் ஆட்சியாளர்கள் தங்கள் ஆட்சியின் போது அரசு ஊழியர்கள், கைதிகள் மற்றும் மாணவர்களுக்கு தடுப்பூசி கட்டாயமாக போட வேண்டும் என பிரகடனப்படுத்தினர். 1928 ஆம் ஆண்டில், ராக்பெல்லர் அறக்கட்டளையுடன் இணைந்து ஒரு ஒட்டுண்ணி சர்வே நடத்தப்பட்டு, கொக்கி புழு மற்றும் ஃபைலேரியாசிஸைக் கட்டுப்படுத்த வழிவகை செய்யப்பட்டது.

கேரளாவில் நிகழும் இந்த சமூக சுகாதார விழிப்புணர்வுக்கு கல்வியறிவு மற்றும் பெண்களின் கல்வி ஆகியவற்றில் அம்மாநிலம் கவனம் செலுத்தியது தான். தவிர, 100% தடுப்பூசி அளவை அடையவும் தனிப்பட்ட சுகாதார கலாச்சாரத்தை வளர்க்க உதவியதும் முக்கிய காரணங்கள் ஆகும்.

உலக சுகாதார அமைப்பு, 2005 ஆம் ஆண்டில் 12 நாடுகளில் நடத்திய ஒரு ஆய்வில், மலம் கழித்தபின் சோப்புடன் கை கழுவுவது கேரளாவில் 34% அதிகமாக இருப்பதைக் கண்டறிந்தது, இது கணக்கெடுக்கப்பட்ட மற்ற மாநிலங்கள் / நாடுகளில் மிக உயர்ந்த அளவாக இருந்தது. எனவே, கோவிட் -19 பரவலின் போது, கை கழுவுதல் மற்றும் சானிடிசர்களைப் பயன்படுத்துவதை ஊக்குவிப்பதற்காக அரசு தனது ‘பிரேக் தி செயின்’ பிரச்சாரத்தைத் தொடங்கியது. அது சில சிறந்த நடைமுறைகளை மீண்டும் வலியுறுத்துவதற்கு மட்டுமே முன்னெடுக்கப்பட்டதே தவிர, புதிதாக அதை சொல்லித் தர வேண்டிய நிலையில் கேரளா இல்லை.

சுகாதார உள்கட்டமைப்பு

கேரளாவின் கோவிட் -19 போரில் ஒரு முக்கியமான காரணி அதன் வலுவான சுகாதார அமைப்பாகும், இது பல வளர்ந்த நாடுகளுடன் ஒப்பிடப்படுகிறது. ஜூன் 2019 இல், என்ஐடிஐ ஆயோக்கின் வருடாந்திர சுகாதார குறியீட்டில் அனைத்து மாநிலங்களையும் விட அதிகமாக 74.01 ஸ்கோர் பெற்று கேரளா முதலிடம் பிடித்தது. இது மிகக் குறைவான புள்ளிகள் கொண்ட மாநிலமான யுபி (28.61) ஐ விட 2½ மடங்கு அதிகமாகும்.

கேரளா தனது மொத்த மாநில திட்ட செலவினங்களில் 5% மட்டுமே சுகாதாரத்துக்காக முதலீடு செய்திருந்தாலும் – இது இந்த துறையில் தேசிய சராசரி செலவினமாகும் – ஆரம்ப சுகாதார நிலையங்கள் மற்றும் சமூக சுகாதார மையங்களின் மட்டத்தில் சுகாதாரத்துறையில் அதன் கவனம் நல்ல நிலையில் உள்ளது. இந்த சுகாதார நிலையங்கள் மூன்று அடுக்கு உள்ளாட்சி அமைப்புகளின் கைகளில் இருப்பதால், இவற்றில் பல நவீன கண்டறியும் வசதிகளைக் கொண்டுள்ளன மற்றும் டெலி-மருந்து சேவைகளை வழங்குகின்றன.

அவசியத் தேவைகளுக்கு முக்கியத்துவம்

பிப்ரவரி 1 ம் தேதி, மாநிலத்தின் கொரோனா வைரஸ் கட்டுப்பாட்டு அறை மூலம் சோதனை, தனிமைப்படுத்தல், மருத்துவமனை அனுமதி மற்றும் வெளியேற்ற அளவுகோல்கள் குறித்த வழிகாட்டுதல்கள் வெளியிடப்பட்டன.

ஜனவரி பிற்பகுதி வரை, கேரளாவில் எந்த சோதனை வசதியும் இல்லை. சந்தேகத்திற்கிடமான பாதிப்புகளின் throat swabs புனேவின் தேசிய வைராலஜி நிறுவனம் (என்.ஐ.வி) க்கு அனுப்ப வேண்டியிருந்தது. ஆனால் பிப்ரவரி முதல் வாரத்தில், என்.ஐ.வி-ஆலப்புழா சோதனைகளை நடத்த அனுமதி பெற்றது. கடந்த இரண்டு மாதங்களில், கேரளாவின் கோவிட் -19 சோதனை வசதிகள் 13 ஆக உயர்ந்துள்ளன, அரசுத் துறையில் பத்து இதில் அடங்கும்.

செயல்படாத மருத்துவமனைகளை கோவிட் -19 வசதிகளாக மாற்றி, அரசு தனது மருத்துவ வசதிகளையும் முடுக்கிவிட்டது. இதுவரை, 38 அரசு மருத்துவமனைகள் கோவிட் -19 மருத்துவமனைகளாக மாற்றப்பட்டுள்ளன, மேலும் பொது மருத்துவமனைகளில் 800 வென்டிலேட்டர்களும், தனியார் துறையில் 1,578 மருத்துவமனைகளும் அடையாளம் காணப்பட்டுள்ளன.

ஜியோ- ஃபேஸ்புக் ஒப்பந்தம்: இந்தியாவுக்கு என்ன பயன்?

நிபா வைரஸ் படிப்பினைகள்

இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் (ஐ.சி.எம்.ஆர்) அமைத்த நெறிமுறைகளை பின்பற்றும் அதே வேளையில், கேரளா தனது கடுமையான கண்காணிப்பு நெட்வொர்க்கை அமைத்தது, இது 2018 மற்றும் 2019 ஆம் ஆண்டுகளில் நிபா வைரஸ் பரவிய போது ஏற்படுத்தப்பட்ட நடவடிக்கைகளுக்கு இணையாக இருந்தது

பாதிக்கப்பட்டவர்களின் தொடர்புகளைக் கண்டுபிடிப்பதைத் தவிர, கேரளா 28 நாட்கள் வீட்டு தனிமைப்படுத்தலை கடுமையாக அமல்படுத்தியது. இருப்பினும் வைரஸின் பொதுவான incubation காலம் 14 நாட்கள் ஆகும்.

மார்ச் தொடக்கத்தில் இருந்து, அனைத்து சர்வதேச பயணிகளையும் அரசு முழுமையாக பரிசோதித்தது. யாராவது விமான நிலையத்தில் சோதனை செய்வதில் இருந்து தெரியாமல் விலகிச் சென்றாலும், அவர்கள் கிராமக் குழுக்களின் சோதனையை சந்திக்க வேண்டியிருக்கும். அவர்கள் புதிய நபர்களின் வருகையைப் பற்றி சுகாதாரத் துறையினருக்குத் தெரியப்படுத்தி, அவர்கள் வீட்டிற்குள் தனிமையில் இருப்பதை உறுதி செய்தனர். காசராகோடு மற்றும் கண்ணூர் மாவட்டங்களின் ‘ஹாட்ஸ்பாட்’ பகுதிகளில், சில கிராம பஞ்சாயத்துகள் கால் சென்டர்களைத் தொடங்கின, இதன் மூலம் அதிகாரிகளுடன் தனிமைப்படுத்தப்பட்டவர்கள் இணைக்கப்பட்டனர்.


தவிர, வைரஸ் தொற்று நபர்களின் பாதை வரைபடங்கள், ஜி.பி.எஸ் தரவு மூலம் பெறப்பட்டு, மக்கள் தாங்கள்  பாதிக்கப்பட்ட நபருடன் தொடர்பு கொண்டிருக்கலாம் என்று சந்தேகித்தால் உடனே அவர்கள் தகவல் தெரிவிக்க ஏதுவாக வசதிகள் ஏற்படுத்தி கொடுக்கப்பட்டன. கண்காணிப்பின் கீழ் உள்ளவர்களின் புவி-மேப்பிங் சிறந்த ஒருங்கிணைப்பை செயல்படுத்த உதவியது.

விமான நடவடிக்கைகள் இடைநிறுத்தப்பட்டதும், மாநிலங்களுக்கு இடையேயான சாலை மற்றும் ரயில் பயணிகள் மீது அரசு கவனம் செலுத்தியது. மார்ச் 8 முதல் பிற மாநிலங்களிலிருந்து கேரளாவை அடைந்தவர்கள் – மற்றும் அவர்களின் தொடர்புகள் – தங்களை தனிமைப்படுத்தும்படி கேட்டுக்கொள்ளப்பட்டன. இந்த நடவடிக்கை மூலம் தான் டெல்லியில் நடந்த தப்லிக் ஜமாத் நிகழ்வின் பங்கேற்பாளர்களிடமிருந்து கேரளாவில் தொற்று ஏற்படுவதைக் கட்டுப்படுத்த அரசுக்கு உதவியது. டெல்லி மாநாட்டில் பங்கேற்றவர்கள் மூலம் பல பாதிப்புகள் பதிவாகியபோதுதான் பல மாநிலங்கள் விழிப்புடன் செயல்படத் தொடங்கியன, ஆனால், கேரளா ஏற்கனவே 217 நபர்களை கண்காணிப்பில் வைத்திருந்தது. இறுதியில், அவர்களில் 20 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டது.

சமூக, அரசியல் பங்கேற்பு

கேரள அரசியலின் பெருமளவில் இருமுனை தன்மை இருந்தபோதிலும், முதலமைச்சர் பினராயி விஜயன் தனது நிலைமையை சமாளிப்பது குறித்த தனது தினசரி பத்திரிகையாளர் சந்திப்புகளில் உரையாற்றுவதைப் பார்க்க கிட்டத்தட்ட முழு மாநிலமும் காத்திருக்கும். சுகாதார அமைச்சர் ஷைலாஜா மாவட்ட மருத்துவ அதிகாரிகளுடன் தினசரி சந்திப்புகளை நடத்துகையில், முதலமைச்சர் அலுவலகம் காவல்துறை, வருவாய், மின்சாரத்துறை போன்ற பிற துறைகளுடன் ஒருங்கிணைக்கிறது. ஒவ்வொரு மாலையும் COVID-19 நிபுணர் டாக்டர் பி. எக்பால் குழுவின் மறுஆய்வுக் கூட்டத்தில் பினராயி விஜயன் தலைமை தாங்குகிறார்,

குடும்பஸ்ரீ மிஷன், தனது தன்னார்வலர்கள் மூலம் முகமூடிகளை தயாரிப்பதற்கும் சமூக சமையலறைகளைத் நடத்துவதிலும் முன்னணியில் உள்ளது.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற  t.me/ietamil இந்த இணைப்பை க்ளிக் செய்யவும்” 

Get the latest Tamil news and Explained news here. You can also read all the Explained news by following us on Twitter, Facebook and Telegram.

Web Title: Corona virus containment in kerala robust healthcare system

Next Story
திண்டாடும் குஜராத்: கொரோனா பாதிப்பு ஒரே மாதத்தில் 3 மடங்கு உயர்வுcoronavirus cases india, india coronavirus update, coronavirus latest news, covid-19 tracker, indian express,coronavirus news, coronavirus tamil news, coronavirus tamil nadu news, coronavirus chennai news, coronavirus Tamil nadu, coronavirus outbreak
The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com