Coronavirus Lambda variant : SARS-CoV-2 கொரோனா வைரஸின் டெல்டா மாறுபாடு உலகெங்கிலும் தொற்றுநோய்களின் வளர்ச்சியை அதிகரித்து வருகின்ற நிலையில், தற்போது லாம்ப்டா வகை மாறுபாடு ஆராய்ச்சியாளர்கள் மற்றும் சுகாதாரத்துறை நிபுணர்களால் அச்சுறுத்தல் கொண்ட பிறழ்வாக பார்க்கப்பட்டு வருகிறது. ஜூன் 14 அன்று, உலக சுகாதார நிறுவனம் அதன் முறையான விஞ்ஞானப் பெயரான சி .37-ஆல் அறியப்பட்ட லாம்ப்டா மாறுபாட்டை ஏழாவது மாறுபாடு என்று அறிவித்தது. அதாவது இது கவனிக்க வேண்டிய ஒன்று.
டெல்டா மாறுபாட்டைப் போலவே, இப்போது 25 க்கும் மேற்பட்ட நாடுகளில் கண்டறியப்பட்ட லாம்ப்டா மாறுபாடும், அசல் வைரஸை விட அதிக அளவில் பரவக்கூடியதாக இருக்கும் என்ற அச்சம் பரவலாக உள்ளது. இருப்பினும் இது குறித்து போதுமான ஆய்வுகள் இல்லாததால் இது இன்னும் நிறுவப்படவில்லை.. பெரு மற்றும் இதர தென் அமெரிக்க நாடுகளில் நோய் தொற்றை ஏற்படுத்திய மாறுபாடு இதுவாகும். இந்த மக்கள் தொகையில் இது இன்னும் கண்டுபிடிக்கப்படவில்லை. இருப்பினும் அமெரிக்கா மற்றும் ஐரோப்பா நாடுகளில் இது அடையாளம் காணப்பட்டுள்ளது.
லாம்ப்டா மாறுபாடு புதியது அல்ல
லாம்ப்டா மாறுபாடு புதிய பிறழ்வு அல்ல. கடந்த ஆண்டில் இருந்தே இது இருக்கிறது. குறிப்பாக சொல்ல வேண்டும் என்றால் ஆக்ஸ்ட் மாதத்தில் இருந்தே உள்ளது. பெருவில், இது தோன்றியதாக நம்பப்படுகிறது, இது கிட்டத்தட்ட 80% தொற்றுநோய்களுக்கு காரணமாகிறது. அண்டை நாடான சிலியிலும் இது ஆதிக்கம் செலுத்துகிறது. ஆனால் சமீப காலம் வரை, இது பெரும்பாலும் ஈக்வடார், அர்ஜென்டினா உள்ளிட்ட தென் அமெரிக்க நாடுகளில் அதிகம் காணப்படுகிறது.
மார்ச் மாத இறுதியில் இருந்து, இந்த மாறுபாடு 25 க்கும் மேற்பட்ட நாடுகளில் கண்டறியப்பட்டுள்ளது. இருப்பினும் பாதிக்கப்பட்ட நபர்களின் எண்ணிக்கை மிகவும் குறைவாகவே உள்ளது. இங்கிலாந்தில் பாதிக்கப்பட்ட 6 நபர்களும் சர்வதேச பயணிகள். ஆஸ்திரேலியாவிலும் இந்த மாறுபாடு கண்டறியப்பட்டுள்ளது.
பல குறிப்பிடத்தக்க பிறழ்வுகள்
உலக சுகாதார அமைப்பின் படி, லாம்ப்டா மாறுபாடு குறைந்தது 7 முக்கிய பிறழ்வுகளை கொண்டுள்ளதாக கூறியுள்ளது (டெல்டாவில் மூன்று பிறழ்வுகள் உள்ளன). இது பரவல் விகிதம் அதிகம் உள்ளிட்ட அதிகப்படியான தாக்கங்களை ஏற்படுத்தக் கூடும். மேலும் இயற்கை தொற்று அல்லது தடுப்பூசியின் மூலம் உருவாகியுள்ள ஆன்ட்டிபாடிகளுக்கு எதிரான மேம்பட்ட சக்தியை கொண்டிருக்கும்.
மேலும் படிக்க : கோவிட்-19 ஆன்ட்டிபாடி சோதனைகள் எவ்வாறு வேலை செய்கிறது? அது எவ்வளவு துல்லியமானது?
ஆல்பா மற்றும் காமா மாறுபாடுகளைக் காட்டிலும் அதிகப்படியான தொற்று திறனை கொண்டுள்ளது இந்த மாறுபாடு என்று சிலியில் நடத்தப்பட்ட ஆய்வு முடிவுகள் தெரிவிக்கின்றனர். (இங்கிலாந்து மற்றும் பிரேசிலில் தோன்றிய மாறுபாடுகள்) . மேலும் சீனாவின் சினோவாக் தடுப்பூசியின் செயல்திறனை முறிக்கும் வகையில் அமைந்துள்ளது லாம்ப்டா மாறுபாடு என்றும் ஆராய்ச்சி முடிவுகள் கூறுகின்றனர். ஆனால் தற்போது வரை லாம்ப்டா மாறுபாடு குறித்து முறையாக அறிந்து கொள்ள இயலவில்லை.
இந்த மரபணு மாற்றங்களுடன் தொடர்புடைய தாக்கத்தின் முழு அளவிற்கும் தற்போது வரையறுக்கப்பட்ட சான்றுகள் உள்ளன, மேலும் எதிர்விளைவுகளின் தாக்கத்தை நன்கு புரிந்துகொள்வதற்கும், பரவுவதைக் கட்டுப்படுத்துவதற்கும் பினோடைப் தாக்கங்கள் குறித்த மேலும் வலுவான ஆய்வுகள் தேவை என்று WHO ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது . தடுப்பூசிகளின் தொடர்ச்சியான செயல்திறனை உறுதிப்படுத்த மேலும் ஆய்வுகள் தேவை என்றும் கூறியுள்ளது உலக சுகாதார அமைப்பு.
variant of interest என்று வழங்கப்பட்டுள்ள இந்த மாறுபாடு சம்பந்தப்பட்ட மரபணு மாற்றங்கள் நோய் பரவுதல், நோய் தீவிரம் அல்லது நோயெதிர்ப்பில் இருந்து தப்பித்தல் ஆகியவற்றை பாதிக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது. பல நாடுகளில் பல்வேறு மக்கள் மத்தியில் குறிப்பிடத்தக்க தொற்றை இந்த மாறுபாடு உருவாக்கியுள்ளது.
லாம்ப்டா உள்ளிட்ட 7 மாறுபாடுகளை வேரியண்ட் ஆஃப் இண்டெரெஸ்ட் என்று வரையறை செய்துள்ளது உலக சுகாதார அமைப்பு. அதே நேரத்தில் ஆல்பா, பீட்டா, காமா மற்றும் டெல்டா ஆகிய மாறுபாடுகள் வேரியண்ட்ஸ் ஆஃப் கன்சர்ன் என்று வரை செய்துள்ளது. இந்த மாறுபாடுகளின் பிறப்பிடத்தை வைத்து பெயர்கள் வழங்கப்படுவதை தவிர்க்கும் வகையில் கிரேக்க எழுத்துகள் கொண்டு இந்த மாறுபாடுகள் பெயரிடப்பட்டுள்ளது.
இந்தியா இந்த மாறுபாட்டை கண்டு அச்சம் கொள்ள வேண்டுமா?
இந்தியா மற்றும் அதன் அண்டை நாடுகளில் இந்த வைரஸ் மாறுபாடு இன்னும் கண்டறியப்படவில்லை. ஆசியாவில், இஸ்ரேலில் மட்டுமே இவ்வகை மாறுபாடு பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்தியர்கள் அதிகம் பயணிக்கும் ஃப்ரான்ஸ், ஜெர்மன், இங்கிலாந்து மற்றும் இத்தாலி ஆகிய நாடுகளில் இந்த மாறுபாடு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
தடுப்பூசி மூலம் பெறப்பட்ட நோய் எதிர்ப்பு சக்தியைத் தவிர்ப்பதற்கான வளர்ந்து வரும் மாறுபாடுகளின் சாத்தியம் என்னவென்றால், சமூக அளவிலான பாதுகாப்பை அடைவதை உறுதி செய்யும் சமயத்தில் கூட புதிய வைரஸ் தொற்றுகள் ஏற்பட வாய்ப்புகள் உண்டு. ஐரோப்பாவில் இது தான் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. குறிப்பாக இங்கிலாந்தில். கடந்த சில வாரங்களில் பல நாடுகளில் வழக்குகள் கடுமையாக அதிகரித்துள்ளன.அதாவது பலவீனமான இரண்டாவது அலைகளிலிருந்து இன்னும் மீண்டு வரும் இந்தியா போன்ற ஒரு நாடு, முன்கூட்டியே கவனிக்க வேண்டும், மேலும் புதிய அலைகளைத் தூண்டக்கூடிய எந்தவொரு புதிய மாறுபாடும் பரவுவதைத் தடுக்க வேண்டும்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.