16ம் நூற்றாண்டு முதல் 2020 வரை மருத்துவ முகக் கவசங்களின் பரிணாமம்! N95-ன் வரலாறு

தற்போது இருக்கும் பற்றாக்குறையை  கருத்தில் கொண்டு பொதுமக்கள் இந்த ரக மாஸ்க்குகளை பயன்படுத்துவதை தவிர்க்கலாம். 

Coronavirus outbreak : History and evolution of N95 Masks
Coronavirus outbreak : History and evolution of N95 Masks

history of N95 Respirators : கொரோனாவுக்கு எதிரான போரில் மருத்துவர்கள் மற்றும் தூய்மை பணியாளர்கள் தங்களின் உயிரையும் பணயம் வைக்கின்றார்கள். அவர்களுக்கு தேவையான ஹஸ்மட் சூட் மற்றும் என்95 வகை மாஸ்க்குகள் கிடைப்பதில் தட்டுப்பாடுகள் நிலவி வருகிறது. பொதுமக்கள் தங்களின் பாதுகாப்பிற்காக வீட்டில் தயாரிக்கப்படும் மாஸ்க்குகளை பயன்படுத்திக் கொள்ளலாம் என்று அதற்கான சில விதிமுறைகளையும் அறிவித்திருந்தது. ஆனாலும் என்95 குறித்து பலருக்கும் சந்தேகம் நிலவி வருகிறது. என்95 மாஸ்க்கின் வரலாறும், விளக்கமும் உங்களுக்காக இங்கே, சுருக்கப்பட்ட வடிவில்.

மேலும் படிக்க : 100 ஆண்டுகளுக்கு முன்பு ஒரு பெருங்கொள்ளை நோயை உலகம் எப்படி விரட்டி அடித்தது?

மாஸ்க்குகளின் வரலாறு

16ம் நூற்றாண்டுகளில் இருந்தே முககவசம் அணியும் பழக்கத்தை மக்கள் மேற்கொண்டுள்ளனர். 17ம் நூற்றாண்டில், பெரும் நோய்கள் அனைத்தும் மோசமான காற்றை சுவாசிப்பதால் தான் உருவாகிறது என்ற நம்பிக்கை அவர்களிடத்தில் தோன்றிய காரணத்தால் அவர்கள் தொடர்ந்து மாஸ்க்குகளை அணிவதை பழக்கமாக கொண்டிருந்தார்கள். 17ம் நூற்றாண்டில் ஏற்பட்ட பிளேக் நோய் தான், முககவசங்களை பரவலாக அனைவரும் அணியும் பழக்கத்தை உருவாக்கியது. அப்போது ஏற்பட்ட பிளேக்கின் போது பறவைகளின் மூக்குகளை போன்று இருக்கும் வடிவம் கொண்ட மாஸ்க்குகளை பயன்படுத்தினர்.

Coronavirus outbreak : History and evolution of N95 Masks
Coronavirus outbreak : History and evolution of N95 Masks

பிரெஞ்ச் மருத்துவர் சார்லஸ் டி லோர்மே தான் ஹஸ்மட் ஆடையுடன் இந்த பறவை அலகு மாஸ்கினையும் பயன்படுத்தினார். இவர் ஃபிரான்ஸ் மன்னன் லூயிஸ் 13-ன் தலைமை மருத்துவராக 17ம் நூற்றாண்டில் பணியாற்றினார். அந்த மாஸ்க்கில் பொருத்தப்பட்டிருக்கும் அரையடி அலகின் இரண்டு புறமும் துளைகள் பொருத்தப்பட்டிருக்கும். அந்த அலகானது மூலிகைகளால் நிரப்பப்பட்டிருக்கும்.  இது கெட்ட சுவாசத்தை “ஃபில்டர்” செய்து, நறுமணம் கொண்ட காற்றை மூச்சுக் குழலுக்குள் அனுப்பும்.   அந்த மருத்துவர் அணிந்திருக்கும் செருப்பு, தொப்பி மற்றும் கையுறை அணைத்தும் மொரோக்கன் லெதரால் உருவாக்கப்பட்டிருந்து.

மேலும் படிக்க : தூரத்தை விட பாசம் பெரிது : 1400 கி.மீ இரு சக்கர வாகனத்தில் பயணித்து மகனை மீட்ட தாய்!

மன்ச்சூரியன் ப்ளேக்

1912ம் ஆண்டு சீனாவில் தோன்றிய  மன்ச்சூரியன் பிளேக், அனைவரையும் பெரும் அச்சத்திற்கு ஆளாக்கியது. காற்று மூலமாகவே பிளேக் நோய் பரவுகிறது என்பதை கண்டறிந்தார் சீன மருத்துவரான லியென் – டெஹ் வூ (Lien-Teh Wu). பருத்தியாலான மறைப்பு, மூன்று -நான்கு அடுக்குகள் கொண்ட துணிகளை வைத்து தைத்து முகக்கவசம் ஒன்றை உருவாக்கினார் லியென் – டெஹ் வூ. இது பிளேக் நோயின் பரவலை ஓரளவுக்கு தடுத்தது. 1918ம் ஆண்டு தோன்றிய பெருங்கொள்ளை நோயான ஸ்பெனிஷ் ஃபுளூவை கட்டுப்படுத்த, சிகிச்சை அளிக்க இந்த வகை மாஸ்க்குகள் அதிக அளவில் பயன்படுத்தப்பட்டது.

Coronavirus outbreak : History and evolution of N95 Masks
சுரங்க வேலைகளுக்கு பயன்படுத்தப்படும் ஏர்-ஃபில்டர்கள் கொண்ட மாஸ்க்குகள்

ஃபைபர் கிளாஸ், ஏர் ஃபில்டர் ஆகியவை கொண்டு பெரிய அளவில்  சுரங்க வேளைகளுக்கு செல்லும் போதும் பயன்படுத்தப்பட்டது. இன்றளவும் அது பயன்பாட்டில் உள்ளது. ஆனால் அதன் எடை அதிகமாக இருக்கும்.

உலக போர்களில் மாஸ்க்குகள்

முதல் உலகப் போரின் போது மஸ்டர்ட் (Mustard Gas) வாயு எதிர் படையினரை கொல்ல பயன்பட்டது. சுத்தமாக மணமே இல்லாமல் இருக்கும் இந்த நச்சு வாயு, மனிதர்களை கொல்வதற்கு 12 மணி நேரம் எடுத்துக் கொள்ளுமாம். வெடி குண்டுகளை பயன்படுத்தும் போது சிறிய அளவு இதனை எதிர் அணியிடம் பயன்படுத்தினாலே போதும். எந்நேரமும் உயிருக்கு உத்தரவாதம் இல்லாத சூழல் அன்று உருவாகியிருந்தது. எப்போது வேண்டுமானாலும் ரசாயன குண்டுகள் வீசப்படலாம் என்பதை உணர்ந்து இங்கிலாந்து மக்கள் இந்த வகை கேஸ் மாஸ்க்குகளை பயன்படுத்தினர்.  குழந்தைகளுக்கும் பொருந்தும் வகையில் மாஸ்க்குகள் தயாரிக்கப்பட்டது. ஆனால் இரண்டாம் உலகப்போரின் போது ரசாயன குண்டுகள் பயன்படுத்தப்படவில்லை.

Coronavirus outbreak : History and evolution of N95 Masks
இரண்டாம் உலகப்போர் சமயங்களில் பயன்படுத்தப்பட்ட கேஸ் மாஸ்க்

N95 ரக மாஸ்க்குகள்

1972ம் ஆண்டு தான் முதன்முறையாக, ஒருமுறை மட்டுமே பயன்படுத்தக் கூடிய வகையிலான என்95 மாஸ்க்குகள் உருவாக்கப்பட்டது.  பல்வேறு பகுதிகளில், தொழிற்சாலை பயன்பாட்டிற்காக இது உருவாக்கப்பட்டது. ஆனாலும் 1990ம் ஆண்டு, காசநோய் பரவல் அதிகமான மருத்துவ ஊழியர்களை  காவு வாங்க மீண்டும் மருத்துவ பயன்பாட்டிற்கு வந்தது என்95 ரக மாஸ்க்குகள்.

மேலும் படிக்க : கொரோனாவுடன் 100 நாட்கள்…இரண்டே இறப்புகள்… கேரளாவில் இது எப்படி சாத்தியம்?

காற்றில் இருக்கும் மாசுக்களை சுவாசிப்பதில் இருந்து தடுக்கும் வகையில் இந்த மாஸ்க்குகள் உருவாக்கப்பட்டுள்ளது. N என்பது Non-Oil என்பதை குறிக்கும். அதாவது காற்றில் எந்த வகையான எண்ணெய் சார் மாசுக்கள் (உதாரணம். பூச்சிக்கொல்லி மருந்து) இல்லாத இடங்களில் பயன்படுத்தக் கூடியது என்று பொருள். அதே போன்று, 95 என்பது 95% எஃபிஷெயண்ட்டாக, மாசுக்கள் மனிதனின் சுவாசப் பாதையில் செல்வதை தடுக்கும் என்று பொருள். இந்த ரக மாஸ்க்குகள் 0.3 மைக்ரான் அல்லது அதற்கு மேலான அளவுள்ள காற்று மாசுக்களை தடுத்து நிறுத்துகிறது. இந்த ரக மாஸ்க்குகளை மீண்டும் பயன்படுத்த கூடாது. மருத்துவத்துறை மற்றும் மருத்துவமனை தூய்மைப் பணியாளர்கள் இந்த ரக மாஸ்க்குகளை பயன்படுத்த வேண்டும். தற்போது இருக்கும் பற்றாக்குறையை  கருத்தில் கொண்டு பொதுமக்கள் இந்த ரக மாஸ்க்குகளை பயன்படுத்துவதை தவிர்க்கலாம்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil

Get the latest Tamil news and Explained news here. You can also read all the Explained news by following us on Twitter, Facebook and Telegram.

Web Title: Coronavirus outbreak history and evolution of n95 respirators and surgical masks

Next Story
பணம் கொடுக்க மாட்டோம் என WHO-வை மிரட்டிய டிரம்ப் – நிதி தற்போது எப்படி திரட்டப்படுகிறது?US President Trump threatens stop money to WHO How is it funded currently?
The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com