scorecardresearch

100 ஆண்டுகளுக்கு முன்பு ஒரு பெருங்கொள்ளை நோயை உலகம் எப்படி விரட்டி அடித்தது?

மாணவர்களில் யாருக்கு நோய் தொற்று இருக்கும் என்பதை அறிந்து உடனே செயல்பட ஏதுவான இடமாக பள்ளிகள் செயல்பட்டது. 

Coronavirus : History of Pandemic Spanish Flu
Coronavirus : History of Pandemic Spanish Flu

Coronavirus : History of Pandemic Spanish Flu : 1918ம் ஆண்டு, சரியாக நூற்றொரு ஆண்டுகளுக்கு முன்பு, உலகம் கொரோனா போன்ற பெருங்கொள்ளை நோய் ஒன்று பரவியது. நார்வேயில் இருந்து ப்ரூக்லின் வந்த கப்பலான பெர்ஜென்ஸ்ஃப்ஜோர்ட் என்ற கப்பலின் ஊழியர்கள் 11 பேர் மற்றும் பொதுமக்கள் 10 பேர் மிகவும் கவலைக்கிடமாக உள்ளனர் என்று கூறப்பட்டது. அவர்களை உள்ளூர் மருத்துவமனையில் சேர்த்து சிகிச்சை அளிக்கப்பட்டது.

ஆனால் தொடர்ந்து இந்நோயால் பாதிக்கப்படும் மக்களின் அதிகரித்துக் கொண்டே போனது. இறுதியில்   ஸ்பானீஷ் ஃப்ளூ என்று அழைக்கப்பட்ட அந்த காய்ச்சலுக்கு உலகெங்கும் பல லட்சம் மக்கள் பலியாகினார்கள். அமெரிக்காவில் மட்டும் சுமார் 6,75,000 நபர்கள் உயிரிழந்தனர். நியூயார்க் நகரில் 20 ஆயிரம் நபர்கள் உயிரிழந்தனர். நாள் ஒன்றுக்கு 400 முதல் 500 பேர் உயிரிழந்தனர்.

இன்று கொரோனா நோய் தொற்றால் அதிகம் பாதிக்கப்பட்டிருக்கும் நாடு அமெரிக்காவாக உள்ளது. மாகாணமாக நியூயார்க் உள்ளது. ஆனால் நேற்று (02/04/2020) ஒருநாள் மட்டும் அமெரிக்காவில் 1,169 பேர் கொரோனா நோய்க்கு உயிரிழந்துள்ளனர்.  100 ஆண்டுகளுக்கு முன்பு ஸ்பானீஷ் ஃப்ளூ நோய் பரவலை தடுக்க அம்மாகாண ஆளுநர் என்னென்ன முயற்சிகள் மேற்கொண்டார் என்பது இங்கே!

மேலும் படிக்க : கொரோனா மரணங்களில் 15 பேர் தப்லிக் ஜமாத் மாநாட்டில் பங்கேற்றவர்கள் – அதிர்ச்சித்தகவல்

திரையரங்குகள்

இன்றைய சூழல் போல் அன்று திரையரங்குகள் மூடப்படவில்லை. சினிமாவுக்கு முன்பு, மக்களுக்கு ஸ்பானீஷ் நோயின் அறிகுறிகள், பரவும் விதம், தற்காப்பு விதிமுறைகள் போன்றவற்றை விழிப்புணர்வு படமாக வழங்கினார்கள். இன்று அந்த பகுதியை சமூக வலைதளங்கள் மேற்கொண்டு வருகிறது. அனைவருக்கும் துண்டுச்சீட்டுகள் மூலம் விழிப்புணர்வு நடத்தப்பட்டது.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற  t.me/ietamil இந்த இணைப்பை க்ளிக் செய்யவும்”  

பள்ளிகள்

பொதுமக்கள் அனைவரும் சுகாதாரமற்ற முறையில், அடுக்குமாடி குடியிருப்பு பகுதியில் வாழ்ந்து வந்தனர். சுகாதாரமான முறையில் அவர்களின் வாழ்க்கை தரம் இல்லை. ஆனால் பள்ளிகள் அனைத்திலும் மாணவர்களின் சுகாதாரத்திற்கு அதிக அளவு முக்கியத்துவம் தரப்பட்டது. போதுமான ஆய்வுகளுக்கு பிறகே மாணவர்கள் பள்ளிக்குள் அனுப்பப்பட்டனர். மாணவர்கள் மீது பரிசோதனைகள் நடந்து கொண்டே இருந்ததால், அவர்களில் யாருக்கு நோய் தொற்று இருக்கும் என்பதை அறிந்து உடனே செயல்பட ஏதுவான இடமாக பள்ளிகள் செயல்பட்டது. ஆனால் இந்த முறையானது நியூயார்க்கில் மட்டுமே பின்பற்றப்பட்டது. இதர இடங்களில் பள்ளிகள் அனைத்தும் மூடப்பட்டது.

சாரணர் இயக்கம்

பொதுவெளிகளில் தும்மும் போதும், இரும்மும் போதும் சில கட்டாய விதிமுறைகளை கடை பிடிக்க வலியுறுத்தப்பட்டது. சாலைகளில் எச்சில் துப்புவதற்கு கடும் தடை விதிக்கப்பட்டது. பள்ளி மாணவர்களின் சாரணர் இயக்கத்தை சேர்ந்தவர்கள் சாலைகளில் நடந்து சென்று மக்களுக்கு விழிப்புணர்வினை வழங்கினார்கள்.

செவிலியர்கள்

150க்கும் மேற்பட்ட மருத்துவமனையில் இருந்து ஏராளமான செவிலியர்கள் மக்களை நேரில் சென்று சிகிச்சை அளித்தனர். மேலும் குவாரண்டைன் ஆன நபர்களின் வீடுகளுக்கு முன்பு எச்சரிக்கை குறியீடுகள் போடப்பட்டு, பால்காரர்களை எச்சரிக்கையாக இருக்க வைத்தனார்.

உயிரிழப்பு

நியூயார்க்கில் 1000 நபர்களுக்கு 4.7 நபர்கள் மட்டுமே இந்த நோயால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தனர். கிழக்கு கடற்கரையில் இருக்கும் பாஸ்டன், பிலடெல்ஃபியா போன்ற மாகாணங்களில் நியூயார்க்கை விட அதிக உயிரிழப்புகள் ஏற்பட்டது.

மேலும் படிக்க : ”வெண்டிலேட்டர் வேண்டாம்… இளையவர்களை காப்பாற்றுங்கள்” – தியாகம் செய்த மூதாட்டி மரணம்!

Stay updated with the latest news headlines and all the latest International news download Indian Express Tamil App.

Web Title: Coronavirus history of pandemic spanish flu