Advertisment

வைரஸ் பரவுதலில் முக்கிய பங்காற்றும் மருத்துவமனை பரப்புகள் - எச்சரிக்கும் ஆய்வு

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
coronavirus spread, covid-19, sars-cov-2, university college london, hospital bed, கொரோனா வைரஸ், இந்தியாவில் கொரோனா, தமிழகத்தில் கொரோனா,

coronavirus spread, covid-19, sars-cov-2, university college london, hospital bed, கொரோனா வைரஸ், இந்தியாவில் கொரோனா, தமிழகத்தில் கொரோனா,

கோவிட் -19 ஐ ஏற்படுத்தும் SARS-CoV-2 என்ற வைரஸ் ஒரு மருத்துவமனையின் பரப்புகளில் எவ்வாறு பரவக்கூடும் என்பதை உருவகப்படுத்துவதை நோக்கமாக கொண்டு ஒரு புதிய ஆய்வு மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்த ஆய்வின் போது, பாதுகாப்பிற்காக, ஆராய்ச்சியாளர்கள் SARS-CoV-2 வைரஸைப் பயன்படுத்தவில்லை. ஆனால் மனிதர்களை பாதிக்காக, ஒரு தாவர நோய்த்தொற்று வைரஸிலிருந்து டி.என்.ஏவின் ஒரு பகுதியை செயற்கையாக நகலெடுத்தனர். பின்னர் அதை SARS-CoV க்கு ஒத்த செறிவில் ஒரு மில்லிலிட்டர் தண்ணீரில் சேர்த்தது ஆராய்ச்சி மேற்கொள்ளப்பட்டது.

Advertisment

முடிவு: ஒரு மருத்துவமனை படுக்கையில் காணப்பட்ட வைரஸ் டி.என்.ஏ 10 மணி நேரத்திற்குள் ஒரு வார்டில் அனைத்து தளங்களிலும் கிட்டத்தட்ட பாதி இடங்களில் கண்டறியப்பட்டது. அதுமட்டுமின்றி, குறைந்தது ஐந்து நாட்களுக்கு அதன் தாக்கம் நீடித்தது. லண்டன் பல்கலைக்கழக கல்லூரி மற்றும் கிரேட் ஆர்மண்ட் ஸ்ட்ரீட் மருத்துவமனை (GOSH) மேற்கொண்ட இந்த ஆய்வு, மருத்துவமனை தொற்று இதழில் ஒரு கடிதமாக வெளியிடப்பட்டுள்ளது.

கொரோனா நோயாளிகள் வீட்டில் தனிமைப்படுத்தலில் செய்ய வேண்டியவை எவை - நிபுணர் சொல்வது என்ன?

ஆராய்ச்சியாளர்கள் டி.என்.ஏ அடங்கிய தண்ணீரை ஒரு தனிமைப்படுத்தப்பட்ட அறையில் வைத்தார்கள் - அதாவது அதிக ஆபத்து அல்லது பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்கான அறை அது. பின்னர் அடுத்த ஐந்து நாட்களில் ஒரு மருத்துவமனை வார்டில் 44 தளங்களை சோதனை செய்தனர். 10 மணி நேரத்திற்குப் பிறகு, மருத்துவமனை வார்டில் 41% தளங்களில் டிஎன்ஏ பரவியிருப்பதை அவர்கள் கண்டறிந்தனர், படுக்கைகள், கதவு கைப்பிடிகள், காத்திருப்பு அறையில் குழந்தைகளின் பொம்மைகள் மற்றும் விளையாட்டுப் பகுதியில் உள்ள புத்தகங்கள் வரை அது பரவி இருந்தது. இது மூன்று நாட்களுக்குப் பிறகு 59% தளங்களாக அதிகரித்து, ஐந்தாவது நாளில் 41% ஆக குறைந்தது.

சோதனை செய்த போது, படுக்கைகள், பல படுக்கைகளுடன் கூடிய அறை உட்பட - மற்றும் சிகிச்சை அறைகள் போன்ற மருத்துவ பகுதிகளில் தொற்று கண்டறியப்பட்டது. மூன்றாம் நாளில், மருத்துவப் பகுதிகளில் 86% மாதிரி தளங்களில் தொற்று ஏற்பட்டிருந்தது. நான்காம் நாளில், 60% மாதிரி தளங்களில் தொற்று கண்டறியப்பட்டது.

SARS-CoV-2 பொறுத்தவரை, இருமலின் போது, திரவம் வடிவமாக உடலினுள் நுழைந்து பரவக்கூடும், அதேசமயம் ஆய்வில் வைரஸ் டி.என்.ஏவை நீரில் பயன்படுத்தியது. சளி போன்ற அதிக ஒட்டும் திரவம் மிக எளிதாக பரவக்கூடும்.

டெல்லியில் பெரிய நிலநடுக்கம் ஏற்படுமா? நிபுணர்களின் கருத்து என்ன?

ஆய்வுக்கு ஒரு எச்சரிக்கை என்னவென்றால், ஒரு தளத்தில் வைரஸ் எவ்வளவு விரைவாக பரவுகிறது என்பதை இது காட்டுகிறது என்றாலும், ஒரு நபர் எவ்வாறு பாதிக்கப்படுவார் என்பதை இதன் மூலம் தீர்மானிக்க முடியாது.

ஆய்வின் மூத்த ஆசிரியரான யு.சி.எல்-இன் டாக்டர் லீனா சிரிக் ஒரு அறிக்கையில் கூறியதாவது: “ஒரு வைரஸ் பரவுவதில் தளங்கள் வகிக்கும் முக்கிய பங்கை எங்கள் ஆய்வு காட்டுகிறது, மேலும் நல்ல சுகாதாரம் மற்றும் அடிக்கடி கை சுத்தம் செய்வது எவ்வளவு முக்கியம் என்பதை இது காட்டுகிறது. மேலும் ஊழியர்கள், நோயாளிகள் மற்றும் பார்வையாளர்களால்தளங்களை தொடுவதன் மூலம் பரவியது. SARS-CoV-2 உடைய ஒருவர், இருமல், தும்மல் மற்றும் இடங்களை தொடுவதன் மூலம் வைரஸை பரப்ப முடியும்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil

Corona
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment