நாவல் கொரோனா வைரஸ் நாம் உடுத்தும் துணிகளில் ஒட்டிக்கொண்டு வாழ்கிறதா ? அப்படியானால், எத்தனை நாட்கள் அதனால் வாழமுடியும் ?
முதல் கேள்விக்கு.... ஆம்..... நாம் உடுத்தும் துணிகளில் இந்த நாவல் கொரோனா வைரஸ் வாழக்கூடும் (அல்லது) வாழலாம். எவ்வளவு காலம்? என்ற இரண்டாவது கேள்விக்கு பதில் தெளிவாகத் தெரியவில்லை.
/tamil-ie/media/media_files/uploads/2020/03/IE-1-300x228.jpg)
பிளாஸ்டிக், எஃகு (உருக்கு), தடித்த அட்டை முதலான மேற்பரப்பிலும், காற்றிலும் இந்த நாவல் கொரோனா வைரஸ் எவ்வளவு காலம் உயிர்வாழும் என்பது குறித்த பல ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இருப்பினும், மனிதர்கள் உடுத்தும் துணிக்கும், வைரஸுக்கும் உள்ள தொடர்பை யாரும் இதுவரையில் படிக்க வில்லை.
பூனைக்கும் கொரோனா! - இனி செல்லப் பிராணிகளையும் தனிமைப்படுத்தணுமா?
வைரஸ்கள் உதாரணமாக தடித்த அட்டையிலுள்ள நுண்துளைக் கொண்ட (porous) மேற்பரப்பைக் காட்டிலும் , எஃகு (உருக்கு) போன்ற நுண்துளையற்ற (Non-porous) மேற்பரப்பில் அதிக நேரம் வாழக்கூடியவை.
நாம் உடுத்தும் துணிகளின் மேற்பரப்புகள் அனைத்தும் நுண்துளைகள் கொண்டவை. நுண்ணிய மேற்பரப்புகள் அனைத்தும், வைரஸை உள்ளே நுழைய விடாமால் கெட்டியாய் பிடித்துக் கொள்கின்றன. உலக சுகாதார அமைப்பு கூட துணிகளுக்கு என்று தனியான பரிந்துரை இதுவரை அளிக்க வில்லை.எப்படியிருந்தாலும், நாம் உடுத்தும் துணிகளை மிகவும் சுத்தமாக வைத்திருப்பது கட்டாயமாகும்.
/tamil-ie/media/media_files/uploads/2020/03/IE-2-300x211.jpg)
தொற்று நோய் நிபுணர், தனு சிங்கால் கூறுகையில் " லினன் துணிகளை 60-90°C-ல் சலவை செய்யுங்கள். நாம் பயன்படுத்தும் டிடர்ஜெனட் பெரும்பாலும் வைரஸைக் கொல்லும்,”என்று தெரிவித்துள்ளார். எவ்வாராயினும், கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் ஆடைகளை தனித்தனியாக கழுவ வேண்டும்” என்றும் பரிந்துரைக்கின்றார்.
இந்திய சுகாதார அமைச்சகம் தனது இணையதளத்தில், நோய்வாய்ப்பட்டவர்களின் அனைத்து வகையான துணிமணிகளையும் வழக்கமான ( துணி சோப்பு, அல்லது வாஷிங் மெசின்) முறையில் சலவை செய்யது, நன்கு வெயிலில் உலரவைக்க வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.
/tamil-ie/media/media_files/uploads/2020/03/IE-3-300x244.jpg)
மேலும், துணியால் செய்யப்பட்ட மாஸ்கை பயன்படுத்துபவர்கள், தினமும் ஒரு முறையாவது துவைக்க வேண்டும் என்றும் பரிந்துரைக்கப்பட்டுள்ளது .