Advertisment

கொரோனா தடுப்பூசி அப்டேட்: குரங்குகளில் பரிசோதனை முயற்சி வெற்றி

ஆக்ஸ்போர்டு மற்றும் மாடர்னா ஆகியவை அவற்றின் கட்டம் -1 மற்றும் இரண்டாம் கட்ட மனித சோதனைகளின் ஆரம்ப முடிவுகளை வெளியிட்டுள்ளன

author-image
WebDesk
New Update
கொரோனா தடுப்பூசி அப்டேட்: குரங்குகளில் பரிசோதனை முயற்சி வெற்றி

கட்டம் -1 மற்றும் இரண்டாம் கட்ட மனித சோதனைகளின் ஆரம்ப முடிவுகளை வெளியிட்டுள்ளன

ஆஸ்ட்ராஜெனெகாவுடன் இணைந்து ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தால் உருவாக்கப்பட்ட கொரோனா தடுப்பூசி மூலம், குரங்குகளில் கொரோனா வைரஸ் தொற்றுநோயை "தடுக்க" முடிந்தது என்று நேச்சர் ஜர்னலில் வெளியிடப்பட்ட ஒரு புதிய ஆய்வு தெரிவித்துள்ளது. அதே பத்திரிகையில் கூறப்பட்டுள்ள மற்றொரு ஆய்வின் படி, ஜான்சன் மற்றும் ஜான்சன் உருவாக்கிய தடுப்பூசி கூட இதே போன்ற முடிவுகளை அடைய முடிந்தது என்று கூறியது.

Advertisment

இந்த இரண்டு முன்னணி தடுப்பூசி தயாரிப்பாளர்களின் கொரோனா விலங்கு சோதனைகளின் விரிவான கண்டுபிடிப்புகள் வியாழக்கிழமை Nature-ல் தனித்தனியாக வெளியிடப்பட்டன. இரு தடுப்பூசி தயாரிப்பாளர்களும் இப்போது மனிதர்கள் மீது சோதனை நடத்த தொடங்கியுள்ளனர். ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தால் உருவாக்கப்பட்ட தடுப்பூசி மூன்றாம் கட்ட மனித சோதனைகளைத் தொடங்கியுள்ளது, அதே நேரத்தில் ஜான்சன் அண்ட் ஜான்சன் கட்டம் -1 மற்றும் கட்டம் II சோதனைகளை மேற்கொண்டு வருகிறது.

இரண்டு நாட்களுக்கு முன்பு, அமெரிக்க பயோடெக் நிறுவனமான மாடர்னா தெரபியூடிக்ஸ் உருவாக்கிய தடுப்பூசி அதன் விலங்கு சோதனைகளின் கண்டுபிடிப்புகளையும் வெளியிட்டது. நியூ இங்கிலாந்து ஜர்னல் ஆஃப் மெடிசினில் வெளியிடப்பட்ட இந்த ஆய்வில் குரங்குகள் மீதான சோதனைகளின் முடிவுகள், சாதகமான முறையில் சோதனைகளை ஊக்குவிப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மாடர்னா மனிதர்கள் மீதான மூன்றாம் கட்ட பரிசோதனையையும் தொடங்கியுள்ளது.

ஆகஸ்ட்டுடன் முடிவுக்கு வரும் மொராட்டோரியம்… வீட்டுக்கடனை நிர்வகிப்பது எப்படி?

ஆக்ஸ்போர்டு மற்றும் மாடர்னா ஆகியவை அவற்றின் கட்டம் -1 மற்றும் இரண்டாம் கட்ட மனித சோதனைகளின் ஆரம்ப முடிவுகளை வெளியிட்டுள்ளன, அவையும் திருப்திகரமாக இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.

மூன்றாம் கட்ட சோதனைகள் சில மாதங்கள் ஆகலாம். முன்னணி மருந்து தயாரிப்பாளர்களில் ஒன்று இந்த ஆண்டு இறுதிக்குள் இல்லாவிட்டால், அடுத்த ஆண்டு தொடக்கத்தில் தடுப்பூசியை இறுதி செய்ய முடியும் என்று ஆராய்ச்சியாளர்கள் நம்புகின்றனர்.

சுவாரஸ்யமாக, மாஸ்கோவில் உள்ள ஒரு ஆராய்ச்சி நிறுவனத்தால் உருவாக்கப்படும் ஒரு தடுப்பூசி அடுத்த மாதத்தில் இறுதி ஒழுங்குமுறை ஒப்புதலைப் பெறுவதற்கான வரிசையில் உள்ளது என்றும், செப்டம்பர் மாதத்திற்குள் இது பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கிடைக்கக்கூடும் என்றும் ரஷ்யா கூறியிருந்தது. இந்த ரஷ்ய தடுப்பூசி இன்னும் இரண்டாம் கட்ட சோதனைகளில் உள்ளது, ஆனால் கட்டம்- II முடிவுகள் திருப்திகரமாக இருந்தால், அது பயன்பாட்டுக்கு நிபந்தனை ஒப்புதல் பெறும். மூன்றாம் கட்ட சோதனைகள் பொது பயன்பாட்டிற்காக வெளியிடப்படும் போதும் எடுக்கப்படும்.

மாடர்னா அதன் தடுப்பூசியிலிருந்து லாபம் ஈட்ட விரும்புகிறது: ரிப்போர்ட்

கொரோனா வைரஸ் பரவலுக்கு எதிராக தடுப்பூசி ஒன்றை உருவாக்க முன்வந்தவர்களாகக் கருதப்பட்ட நான்கு நிறுவனங்கள் சமீபத்தில் அமெரிக்காவில் நடந்த ஒரு விசாரணைக்கு ஆஜரானன, அவற்றில் மூன்று - அஸ்ட்ராஜெனெகா, ஜான்சன் & ஜான்சன் மற்றும் Pfizer - விசாரணையில், தி நியூயார்க் டைம்ஸின் ஒரு அறிக்கையின்படி, லாப நோக்கத்திற்காக தடுப்பூசியை செயல்படுத்தமாட்டோம் என்று உறுதியளித்தன ,

இருப்பினும், மாடர்னா அத்தகைய வாக்குறுதியை அளிக்கவில்லை.

நான்கு நிறுவனங்களும் தங்கள் தடுப்பூசிகளின் மனித சோதனைகளை மேற்கொண்டு வருகின்றன. செய்தித்தாள் செய்தியை மேற்கோளிட்டு Pfizer நிர்வாகி ஒருவர் பேசுகையில், நிறுவனம் தனது தடுப்பூசியை "உலக சுகாதார அவசரத்திற்கு ஏற்ப" விலை நிர்ணயம் செய்யும் என்றும், மக்கள் அதை வாங்க முடியாவிட்டால் ஒரு தடுப்பூசி "அர்த்தமற்றது" என்றும் கூறினார்.

இந்த ஆண்டு இறுதிக்குள் அல்லது 2021 ஆம் ஆண்டின் தொடக்கத்தில் தங்கள் தடுப்பூசிகள் தயாராக இருக்கும் என்று நிறுவனங்கள் தெரிவித்தன.

ஹஜ் பயணம் 2020 எப்படி வேறுபட்டது?

கொரோனா வைரஸ் தடுப்பூசியின் வெற்றிக்கு இந்திய உற்பத்தி திறன்கள் முக்கியம்: ஃபாசி

உலகின் முன்னணி தடுப்பூசி உற்பத்தியாளராக, எந்தவொரு கொரோனா வைரஸ் தடுப்பூசியும் வெற்றிபெற இந்தியாவின் தனியார் துறை முக்கியமானது என்று தொற்று நோய்கள் குறித்த உலகின் முன்னணி நிபுணர்களில் ஒருவரான டாக்டர் அந்தோனி ஃபாசி தெரிவித்துள்ளார்.

அமெரிக்காவின் தேசிய ஒவ்வாமை மற்றும் தொற்று நோய்கள் நிறுவனத்தின் இயக்குனர் ஃபாசி, இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் ஏற்பாடு செய்த ஆன்லைன் நிகழ்வில் பேசினார்.

"உலகின் முன்னணி தடுப்பூசி தயாரிப்பாளராக இந்தியாவின் தனியார் துறையும் மிக முக்கிய பங்கு வகிக்கிறது, மேலும் எங்கள் ஆராய்ச்சி முயற்சிகளிலிருந்து பயனுள்ள கோவிட் 19 தடுப்பூசிகள் வெளிவருவதால், இந்த உற்பத்தி திறன் மிக மிக முக்கியமானதாக இருக்கும்" என்று டாக்டர் ஃபாசி கூறினார்.

இந்த நிகழ்வில் பேசிய இந்தியாவின் சுகாதாரச் செயலாளர் ராஜேஷ் பூஷண், தடுப்பூசி இறுதியாகத் தயாராகும் போது, ​​கொரோனா முன் கள சுகாதார பணியாளர்கள் அதை முதலில் பயன்படுத்த உரிமை உண்டு என்று தெரிவித்துள்ளார்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil

Corona
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment