Advertisment

புதிய புயலால் மேலும் தாமதமாகும் தென்மேற்கு பருவமழை! காரணங்கள் என்ன?

ஜூன் 1ம் தேதி வர வேண்டிய பருவமழையே ஜூன் 8ம் தேதி தான் துவங்கியது என்பது குறிப்பிடத்தக்கது.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
Cyclone Vayu delays Northwest Progress of Southwest monsoon

Cyclone Vayu delays Northwest Progress of Southwest monsoon

Cyclone Vayu delays Northwest Progress of Southwest monsoon : ஃபனி புயலின் பாதிப்புகளை ஒடிசா மட்டும் அனுபவிக்கவில்லை.  மாறாக சென்னை மற்றும் இதர ஆந்திர கடலோரப் பகுதிகளும் தான் அனுபவித்தன. ஏன் என்றால் உருவான புயலானது மேல் நோக்கி நகரும் போது, அந்த பிராந்தியத்தில் இருக்கும் காற்றின் ஈரப்பதத்தினை முற்றிலுமாக உறிஞ்சிவிட்டு மேல் நோக்கி நகருகின்றன. இதனால் அங்கு வெப்ப நிலை உயர்வது, காற்றின் ஈரப்பதம் குறைவது போன்ற பிரச்சனைகளை நாம் சந்தித்தோம். தற்போது இதே நிலை அரபிக்கடலோர மாநிலங்களில் உருவாகியுள்ளது.

Advertisment

வாயுப் புயல்

தற்போது அரபிக் கடலில் உருவாகியுள்ள வாயுப்புயல் அமினிதிவி தீவிற்கு வடமேற்காக 250 கி.மீ தூரத்தில் நிலை கொண்டுள்ளது. மும்பைக்கு தென்மேற்கே 750 கி.மீ தொலைவில் அமைந்துள்ளது இந்த புயல். இன்னும் இரண்டு அல்லது மூன்று நாட்களில் இந்த புயல் குஜராத்தை தாக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும் படிக்க : ஃபனி புயல் : ஒரு சுவாரசிய பார்வை… ஏப்ரல் – மே மாதங்களில் உருவாகும் புயல்களால் ஏற்படும் தாக்கங்கள் என்ன?

ஃபானி புயலுடன் ஒரு ஒப்பீடு

ஃபானிப் புயலை விட சற்று வீரியம் குறைந்தது தான் வாயுப் புயல். அதிக சக்தி கொண்ட புயல் சின்னமாக அது உருமாறும் போது காற்றின் வேகமானது 110 கி.மீ. முதல் 120 கி.மீ வரை இருக்கும். ஆனால் ஃபானிப் புயலின் போது 220 கி.மீ வேகத்தில் புயல்காற்று வீசியது. வாயு தீவிர புயல் என்று அழைக்கப்படும் பட்சத்தில் ஃபானி புயலோ அதிதீவிர/அதிவேக/ அதிக சக்தி வாய்ந்தாக புயலாக உருமாறி ஒடிசாவை தாக்கியது.

Cyclone Vayu delays Northwest Progress of Southwest monsoon : மேலும் தாமதமாகும் தென்மேற்கு பருவமழை

வாயு, ஃபானிப் புயலைப் போன்று அதிக சேதாரத்தை ஏற்படுத்தாமல் போனாலும், ஏற்கனவே தாமதமாக பெய்யத் துவங்கியுள்ள தென்மேற்கு பருவமழையை மேலும் மேற்கு நோக்கி நகர்வதை முற்றிலும் தடுக்கும். ஜூன் 1ம் தேதி வர வேண்டிய பருவமழையே ஜூன் 8ம் தேதி தான் துவங்கியது என்பது குறிப்பிடத்தக்கது.

புயல் உருவாகும் போது, பருவமழையை உருவாக்கும் காற்றில் இருக்கும் ஈரப்பதத்தினை அது முற்றிலுமாக உறிஞ்சிக் கொள்ளும். கடலில் எவ்வளவு நேரம் தாக்குப்பிடிக்கின்றதோ அவ்வளவு வீரியம் கொண்டதாக புயல் கரையைக் கடக்கும். கடலில் தாழ்வு அழுத்த நிலையில் இருக்கும் போது, அதன் சுற்றுவட்டாரப் பகுதியில் இருக்கும் காற்றுபுலமானது நேராக புயலின் மையத்தை நோக்கியே நகரத்துவங்கும்.

அதே போன்று கரைக்கு மிக அருகில் உருவாகும் காற்றழுத்த தாழ்வு மண்டலம், பருவமழையை உருவாக்கும் காற்றினை தன்னகத்தே இழுத்துக் கொண்டு மேல் நோக்கி நகரம். அப்படி தான் தற்போது வடகிழக்கு பகுதி நோக்கி நகரும் பருவமழை காற்றினை இழுக்கும் அளவிற்கு மிகவும் சக்தி வாய்ந்த ஒரு புயலாக உருவாகியுள்ளது,

இந்த புயலால் நிச்சயமாக தென்மேற்கு பருவமழையில் சிறிய தாமதம் உருவாகும். குறிப்பாக மேற்கு நோக்கி நகரும் போது இந்த தடை நிகழும். புயல் கரையை கடக்கும் வரையில் இந்த தாமதம் நிகழும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேல்நோக்கி நகருவதில் தான் பிரச்சனை இருக்கிறது என்றாலும், மேற்கு கடற்கரையோரங்களில் தொடர்ந்து பருவமழை பெய்து கொண்டிருக்கும். புயல் கரையை கடந்து மூன்று நாட்களுக்குப் பின்னால் தான் மழை மேற்கு நோக்கி நகரும் என்று சிவானந்த பாய் தெரிவித்துள்ளார்.

ஜூன் 12ம் தேதி நள்ளிரவு அல்லது ஜூன் 13ம் தேதி அதிகாலையில் வீரவல் அல்லது டையூ பகுதியில் புயல் கட்ரையை கடக்கலாம். அதன் பின்பு மூன்று நாட்கள் கழித்து உள்ளூர் புறங்களில் மழை பெய்யத் துவங்கும் என்று அவர் இந்தியன் எக்ஸ்பிரஸ் இதழுக்கு அறிவித்துள்ளார்.

அரபிக் கடலில் உருவாகும் புயல்கள் :

பொதுவாக ஜூன் மாதங்களில் புயல் உருவாவது வழக்கம் தான். ஆனால் மிகவும் அரிதாகவே அரபிக் கடலில் புயல்கள் உருவாகின்றன. வங்கக்கடலில் உருவாகும் புயல்கள் தான் மிக அதிகம். 120 வருடங்களாக பதிவு செய்யப்பட்டுள்ள வரலாற்றில் இந்தியாவை தாக்கிய புயல்களில் 14% புயல்கள் மட்டுமே அரபிக்கடலில் உருவானவை. அதிவேக புயல்கள் 23% இந்த பகுதியில் உருவாகியுள்ளன.

அரபிக்கடலில் உருவாகும் புயல்கள், வங்கக்கடலில் உருவாகும் புயல்களை விட சக்தி குறைந்தவை. அரபிக்கடலில் உருவாகும் புயல்கள் பொதுவாக குஜராத் மாநிலத்தையே தாக்கும். அங்கு மக்கள் தொகை அடர்த்தி குறைவு என்பதால் சேதாரங்கள் அதிக அளவில் இருப்பதில்லை. குறிப்பிட்டு சொல்ல வேண்டும் என்றால் இந்தியாவின் கிழக்கு கடற்கரையோரப் பகுதிகளில் இருக்கும் மக்கள் தொகை நெருக்கம் மேற்கு கடற்கரையோரம் இருப்பதில்லை. அதனால் பாதிப்புகளும் அதிக அளவு ஏற்படுவதில்லை.

மேலும் படிக்க : இந்த வருடத்திற்கான பருவமழை துவங்குவதில் தாமதம் ஏற்பட்டது ஏன்?

Monsoon Kerala
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment