Another Covid year: ஒரு ஆண்டுக்கு முன்பு இந்தியாவின் கொரோனா தொற்று எந்த நிலையில் இருந்ததோ, அதே நிலையில் 2021ம் ஆண்டின் கடைசி நாளும் இருந்தது. டிசம்பர 30, 2020-ன் போது இந்தியாவில் 21 ஆயிரம் நபர்களுக்கு கொரோனா தொற்று இருந்தது. இந்த ஆண்டு அதே நாளில் கொரோனா தொற்று எண்ணிக்கை 16 ஆயிரமாக இருந்தது. ஆனால் இன்றைய நிலையானது ஓராண்டுக்கு முன்பு இருந்த நிலையைக் காட்டிலும் வித்தியாசமானது.
கடந்த ஆண்டு இந்த நேரத்தில், செப்டம்பரில் முதல் அலையின் உச்சத்திற்குப் பிறகு தொற்று குறைய துவங்கியது. ஒரு சோர்வுற்ற அதே சமயத்தில் அனுபவமற்ற நாடு, பிரச்சனைகள் முடிந்துவிட்டது என்ற நம்பிக்கையோடு, புதிய கொரோனா ஆண்டுக்குள் நுழைந்தது.
ஆனால் இந்த முறை, வழக்குகள் அதிகரிக்கின்றன. இரண்டாம் அலையின் மூலம் பெற்ற அனுபவம் இன்னும் புதிதாகவே இருக்கிறது. கொரோனா தொற்று பரவலை தடுக்க தடைகள் அதிக இடங்களில் போடப்பட்டுள்ளது. 2022ம் ஆண்டை கவலையுடனும், நடுக்கத்துடனும் காண துவங்கியுள்ளனர்.
ஒருவரால் 34 மாணவர்களுக்கு பரவிய கொரோனா… நீட் பயிற்சி மையத்தில் அதிர்ச்சி
மூன்றாம் அலை அதிகமான பரவலையும் இரண்டாவது அலையைப் போன்ற தாக்கத்தையும் தருமா என்ற கேள்வி அனைவரின் மனதிலும் உள்ளது. ஆனால் அதற்கான பதில்கள் இன்னும் தெளிவாக தெரியவில்லை.
தற்போதைய மதிப்பீடுகள் என்னவென்றால், புதிய தொற்றுக்கு கொரோனா வைரஸின் ஒமிக்ரான் மாறுபாடு காரணமாக உள்ளது. அதிக அளவில் பரவினாலும் மிகவும் மிதமான பாதிப்புகளையே மக்களுக்கு தருகிறது. எனவே கொரோனா தொற்று பரவலை குறைப்பதில் இந்தியா தீவிரம் காட்ட வேண்டும். இப்போது அதிகப்படியான உயிரிழப்புகளை நாம் காணமாட்டோம்.
ஆய்வுகள் இன்னும் முடிவாகவில்லை என்று விஞ்ஞானிகள் எச்சரிக்கையுடன் கூறினாலும், நவம்பர் மாதத்தில் பரவத் துவங்கிய ஒமிக்ரான் மாறுபாடு மேலே கூறியதற்கு எதிர்மறையாக இருக்கிறது என்பதை நிரூபிப்பதற்கு ஒரு ஆய்வு முடிவும் ஆதாரமாக இல்லை என்பது உறுதி அளிக்கிறது. ஒமிக்ரான் தொற்று அதிக அளவில் பரவி வரும் எந்த நாடுகளிலும் அதிகப்படியான உயிரிழப்புகள் என்பது குறிப்பிடத்தக்கது.
ஒமிக்ரான் தொற்று பரவல் குறித்து பல்வேறு முக்கிய செய்திகள் இங்கே
கொரோனாவுக்கு எதிராக மேலும் புதிய 2 தடுப்பூசிகள், ஒரு மாத்திரை: எப்படி வேலை செய்கிறது?
டெல்டாவிடம் இருந்து பாதுகாக்கும் ஒமிக்ரான்…தென் ஆப்பிரிக்கா ஆய்வில் சுவாரஸ்ய தகவல்
15 – 18 வயதினருக்கு கோவிட் தடுப்பூசி: நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டியது என்ன? விளக்கப் படங்கள்
”தற்போது மாநகரில் ஒமிக்ரான் தொற்றால் பாதிக்கப்பட்டிருக்கும் 327 நபர்களில் ஒருவருக்கும் ஆக்ஸிஜன் உதவி தேவைப்படவில்லை. தற்போது வரை ஒமிக்ரான் தொற்றால் பாதிக்கப்பட்ட நபர்களுக்கான ஆக்ஜிஸன் தேவையானது பூஜ்ஜியம் தான். ஆனால் டெல்டாவால் பாதிக்கப்பட்ட நபர்களுக்கு ஆக்ஸிஜன் தேவை மிக அதிகமாக இருந்தது” என்று வெள்ளிக்கிழமை அன்று மும்பை மாநகராட்சி துணை ஆணையர் சுரேஷ் கக்கனி தெரிவித்தார்.
மற்றொரு நம்பிக்கை தரும் செய்தி தடுப்பூசி. கடந்த ஆண்டு இந்தியா தடுப்பூசி போடும் பணிகளை துவங்கவில்லை. வெள்ளிக்கிழமை அன்று மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் மன்சுக் மாண்டாவியா, 145 கோடி தடுப்பூசிகளை செலுத்தி இந்த ஆண்டை முடிக்கின்றோம்” என்று குறிப்பிட்டிருந்தார். இது மிகப்பெரிய சாதனை ஆகும். 60 கோடிக்கும் மேற்பட்ட இந்தியர்கள் தற்போது கொரோனாவுக்கு எதிரான தடுப்பூசியை செலுத்திக் கொண்டுள்ளனர். விரைவில் இளம்பிராயத்தினருக்கு தடுப்பூசிகள் வழங்கும் பணி ஆரம்பமாக உள்ளது. இரண்டாம் அலைக்கும் மூன்றாம் அலைக்குமான வித்தியாசம் என்னவென்றால் இந்த ஆண்டு இந்தியா தயார் நிலையில் இருக்கிறது என்பது தான்.
2021ம் ஆண்டு திடீரென அதிகரித்த தொற்று, வளர்ச்ச்சி மற்றும் வேகத்தினால் மத்திய அரசு, மாநில அரசுகள் நிலை தடுமாறியிருக்கலாம் என்று கூறலாம். ஆனால் இந்த முறை மேற்கத்திய நாடுகள் பாதிப்பிற்கு ஆளான ஒரு மாதம் கழித்து இந்தியாவில் தொற்றில் உயர்வு காணப்படுகிறது. திட்டமிட்டு, கொரோனா பரவலை தடுக்க தேவையான நேரத்தை இந்தியா இடைப்பட்ட காலத்தில் பெற்றுள்ளது. இது உயிர்களை காக்க மட்டுமல்ல, பொருளாதார அழ்வில் இருந்து நம்மை காக்கவும் தேவையான நேரத்தை வழங்கியுள்ளது.
மேற்கத்திய நாடுகளில், மருத்துவமனைகளில் சேர்க்கும் விகிதம் குறைவாக உள்ளது என்று அவர்களின் அனுபவம் கூறினாலும், அலையின் அளவு இந்தியாவில் கவலைக்குரியதாக இருக்க வேண்டும்.
அமெரிக்காவில் வியாழக்கிழமை அன்று 5.8 லட்சம் பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இது புதன்கிழமையன்று பதிவான புதிய உச்சமான 4.88 லட்சத்தை முறியடித்தது. இங்கிலாந்து, பிரான்ஸ், ஸ்பெய்ன் போன்ற மிகவும் குறைந்த மக்கள் எண்ணிக்கையை கொண்ட நாடுகளிலும் கூட கடந்த நில நாட்களாக 2 லட்சம் பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுவருகிறது. முந்தைய அலையைக் காட்டிலும் இரண்டு முதல் நான்கு மடங்கு உயர்வு என்பது தொற்று பரவல் உயர்வு இன்னும் முடியவில்லை என்பதை காட்டுகிறது.
இந்தியாவில் ஒமிக்ரான் எழுச்சி மற்றும் அதன் மக்கள் தொகையை கணக்கில் கொண்டு கடந்த உச்சத்தின் போது இருந்த 4 லட்சம் தொற்று நான்கு மடங்கு அதிகரிக்கலாம் என்று இதனை அர்த்தப்படுத்தவில்லை என்றாலும் ஐரோப்பிய நாடுகளைக் காட்டிலும் தொற்று விகிதம் அதிக அளவில் இருப்பதற்கான சாத்தியங்கள் உள்ளன என்பது தான் உண்மை.
தற்போது ஐரோப்பாவில் ஏற்படும் தொற்று இந்தியாவில் பிரதிபலிக்கும் எனில் குறைந்த அளவிலான மருத்துவமனை சேர்க்கை, படுக்கை வசதிகள், ஐ.சி.யூ மற்றும் ஆக்ஸிஜன் தேவை இரண்டாம் அலையில் இருந்தது போன்றே இருக்கும்.
இங்குதான் இரண்டாவது அலையின் நிலைமை மீண்டும் ஏற்படாமல் இருப்பதை அரசாங்கங்களும், மக்களும் உறுதி செய்ய வேண்டும். தொற்றுநோய்க்கு இரண்டு ஆண்டுகள், தயாராக இல்லை என்று கூற ஒரு காரணமும் இல்லை. . அரசாங்கம் மீண்டும் மீண்டும் வலியுறுத்தி வருவதால், கட்டாய கோவிட்-பொருத்தமான நடத்தையைப் பின்பற்றுவது - அத்தியாவசியமற்ற தொடர்புகள் மற்றும் கூட்டங்களைக் குறைத்தல், முகக்கவசங்கள் அணிவது போன்றவை மிக முக்கியமானதாக இருக்கும்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.