15 – 18 வயதினருக்கு கோவிட் தடுப்பூசி: நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டியது என்ன? விளக்கப் படங்கள்

15 முதல் 18 வயதினருக்கு கொரோனா வைரஸுக்கு எதிரான தடுப்பூசிகள் வழங்கும் பணி வருகின்ற ஜனவரி 3ம் தேதி முதல் ஆரம்பமாகும் என்று இந்திய அரசு அறிவித்துள்ளது.

Quixplained, Coronavirus, Covid19 Vaccine, Today news

Vaccination program for children of 15-18 yrs : 15 முதல் 18 வயதினருக்கு கொரோனா வைரஸுக்கு எதிரான தடுப்பூசிகள் வழங்கும் பணி வருகின்ற ஜனவரி 3ம் தேதி முதல் ஆரம்பமாகும் என்று இந்திய அரசு அறிவித்துள்ளது. மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் , பாரத் பயோடெக்கின் கோவாக்சின் மட்டுமே குழந்தைகளுக்கு வழங்கப்படும் என்று கூறியுள்ளது. குழந்தைகளுக்கு தடுப்பூசி மற்றும் முன்னெச்சரிக்கை தடுப்பூசி (Precautionary Dose) போடும் பணிகள், உலகம் முழுவதும் மீண்டும் அதிக அளவில் பரவி வரும் கொரோனா வைரஸை கருத்தில் கொண்டு துரிதப்படுத்தப்பட்டு வருகிறது.

வைரஸின் புதிய ஓமிக்ரான் மாறுபாடு கண்டறியப்பட்டது, அறிவியல் சான்றுகள், உலகளாவிய நடைமுறைகள், கோவிட்-19 நோய்த்தடுப்புக்கான தேசிய தொழில்நுட்ப ஆலோசனைக் குழுவின் (Working Group of National Technical Advisory Group on Immunization (NTAGI) பணிக்குழுவின் உள்ளீடுகள்/பரிந்துரைகள், என்.டி.ஏ.ஜி.ஐ-யின் அறிவியல் தொழில்நுட்ப நிலைக்குழுவின் பரிந்துரை (Standing Technical Scientific Committee) போன்ற காரணங்களின் அடிப்படையில் இந்த முடிவு எட்டப்பட்டதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது.

2007 மற்றும் அதற்கு முன்னர் பிறந்த குழந்தைகள் தடுப்பூசி பெற தகுதி பெறுகின்றனர். தங்களுக்கான தடுப்பூசியை பெற கோவின் இணையத்தின் மூலம் பதிவு செய்யலாம். ஏற்கனவே தங்கள் பெற்றோர்கள் பயன்படுத்தும் கோவின் கணக்குகள் மூலமாகவோ அல்லது தங்களுக்கான தனி அலைபேசி எண் கொண்டோ கொரோனா தடுப்பூசியை பெற பதிவு செய்யலாம்.

அரசு தடுப்பூசி முகாம்களில் அனைவருக்கும் இலவசமாக தடுப்பூசி வழங்கப்படுகிறது. தனியார் மருத்துவமனைகள் அல்லது தனியார் நிறுவனங்கள் நடத்தும் தடுப்பூசி முகாம்களில் தடுப்பூசிகளை பெற ஒருவர் கட்டணம் செலுத்த வேண்டும் என்பதை தெரிவுப்படுத்தியுள்ளது மத்திய அரசு

Vaccination program for children of 15-18 yrs

பெண்களின் திருமண வயதை அரசு உயர்த்தக் காரணம் என்ன? விளக்கப் படங்கள்

Vaccination program for children of 15-18 yrs

ஒமிக்ரான் தொற்று பரவல் குறித்து பல்வேறு முக்கிய செய்திகள் இங்கே

Explained: டெல்லி, மும்பையில் அதிகரிக்கும் பாதிப்புகள்.. வரவிருக்கும் ஒமிக்ரான் எழுச்சியின் அறிகுறியா?

கொரோனாவுக்கு எதிராக மேலும் புதிய 2 தடுப்பூசிகள், ஒரு மாத்திரை: எப்படி வேலை செய்கிறது?

டெல்டாவிடம் இருந்து பாதுகாக்கும் ஒமிக்ரான்…தென் ஆப்பிரிக்கா ஆய்வில் சுவாரஸ்ய தகவல்

Get the latest Tamil news and Explained news here. You can also read all the Explained news by following us on Twitter, Facebook and Telegram.

Web Title: Indias vaccination program for children of 15 18 yrs

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com
Best of Express