இ.எஸ்.ஐ பங்களிப்பு குறைக்கப்பட்டதால் ஏற்படும் நன்மைகள் என்னென்ன?

இ.எஸ்.ஐ கார்ப்பரேசன் இந்தியாவில் உள்ள ஒவ்வொருவருக்கும் இந்த காப்பீட்டினை உறுதி செய்ய வேண்டும் என்று விரும்புகிறது.

By: June 20, 2019, 12:31:40 PM

கடந்த வாரம், மத்திய அரசு, இ.எஸ்.ஐக்கான ஊழியர்களின் பங்களிப்பினை 6.5%-இல் இருந்து 4% வரை குறைத்துள்ளது. இந்த திட்டம் வருகின்ற 1ம் தேதி முதல் நடைமுறைக்கு வரும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. 1997ம் ஆண்டிற்கு பிறகு இந்த மாற்றம் கொண்டு வரப்பட்டுள்ளது பணியாளர்கள் மத்தியில் பெரும் வரவேற்பினைப் பெற்றுள்ளது.

மேலும் படிக்க : ஊழியர்களுக்கு ஒரு மகிழ்ச்சியான செய்தி : 22 ஆண்டுகளுக்கு பிறகு ஈ.எஸ்.ஐ. பங்களிப்பு குறைப்பு

இ.எஸ்.ஐ எப்படி செயல்படுகிறது ?

சுதந்திரமாக செயல்பட்டு வரும் அரசு அமைப்பான இ.எஸ்.ஐ கார்ப்பரேசன், இ,எஸ்.ஐ திட்டத்தின் கீழ் ஊழியர்களுக்கு மருத்துவ சேவைகளை வழங்கி வருகிறது. மருத்துவ சேவைகளுக்கான நிதியை ஊழியர் தன்னுடைய வருமானத்தில் இருந்து கொஞ்சமும், நிறுவனங்கள் சார்பில் இருந்து கொஞ்சமும் பங்களிப்பாக கொடுக்கப்படும்.

வேலையில் இருக்கும் போதே மரணத்தல், உடல்நிலைக் குறைபாடு, மரணம், வேலையால் மரணமடைதல், டிஸேபிள்மெண்ட் மெட்டர்னிட்டி (disablement maternity) ஆகியவற்றிற்கான இழப்பீட்டு தொகையினை பணமாகவே வழங்குகிறது இ.எஸ்.ஐ.  இ.எஸ்.ஐ சட்டம் 10 அல்லது அதற்கு மேற்பட்ட ஊழியர்களைக் கொண்ட நிறுவனத்திற்கும், 21 ஆயிரம் (15 ஆயிரம் முன்பு) வரை சம்பளம் வாங்கும் ஊழியர்களுக்கும் பொருந்தும்.

இந்த மருத்துவக்காப்பீடு எங்கெல்லாம் செயல்படுகிறது?

இ.எஸ்.ஐ கார்ப்பரேசன் இந்தியாவில் உள்ள ஒவ்வொருவருக்கும் இந்த காப்பீட்டினை உறுதி செய்ய வேண்டும் என்று விரும்புகிறது. தற்போது 346 மாவட்டங்களிலும், 95 மாவட்ட தலைநகரங்களிலும் முழு நேரமாகவும், 85 மாவட்டங்களில் பகுதி நேரமாகவும் செயல்பட்டு வருகிறது.  இந்தியா முழுவதும் 154 இ.எஸ்.ஐ மருத்துவமனைகள் இ.எஸ்.ஐ. கார்ப்பரேசன் மற்றும் மாநில அரசுகள் சேர்ந்து நடத்தி வருகின்றது.

மேலும் படிக்க : இந்த கட்டுரையை ஆங்கிலத்தில் படிக்க 

இ.எஸ்.ஐயில் மக்களின் பயன்பாட்டினை அதிகரிக்க 2016ம் ஆண்டு டிசம்பர் மாதம் முதல் 2017ம் ஆண்டு ஜூன் மாதம் வரை சிறப்பு முகாம்கள் நடத்தப்பட்டன. இட்தன் விலைவாக இ.எஸ்.ஐ.யில் இணையும் மக்களின் எண்ணிக்கை அதிகரிக்க ஆரம்பித்தது. 2016-2017 காலகட்டத்தில் இருந்த 3.1 கோடி ஊழியர்கள் என்ற எண்ணிக்கை 2018 – 2019 காலகட்டத்தில் 3.6 கோடியாக அதிகரித்தது. அதே போன்று மொத்த பங்களிப்பும் 13,662 கோடியில் இருந்து 22,279 கோடியாக உயர்ந்துள்ளது.

பங்களிப்பின் குறைவினால் எப்படி இ.எஸ்.ஐயின் பயன்பாடு அதிகரிக்கும் ?

கடந்த வாரம் கொண்டு வரப்பட்டுள்ள மாற்றம் என்பது 4% பங்களிப்பினை குறைத்துள்ளது. அதாவது ஊழியர்களின் தரப்பில் 3.25%மும், நிறுவனங்களின் தரப்பில் இருந்து 0.75%-மும் குறைந்துள்ளது. இந்த மாற்றத்தின் மூலமாக 12.85 லட்சம் நிறுவனங்களில் உள்ள 3.6 கோடி ஊழியர்கள் பயனடைவார்கள் என்று அரசு அறிவித்துள்ளது. இந்த மாற்றம், இ.எஸ்.ஐ திட்டத்தில் இல்லாத ஊழியர்களுக்கு நம்பிக்கை அளித்து அதிக அளவில் திட்டத்தில் இணைய உக்குவிக்கும். மேலும் இது போன்ற நிறுவனங்களில் அதிக அளவிலான ஊழியர்கள் நம்பிக்கையுடன் வந்து வேலையில் சேர்வார்கள் என்றும் அரசு அறிவித்துள்ளது.

இந்த மாற்றத்திற்கு ஏன் சில தொழிற்சங்க அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன ?

இந்திய தொழிற் சங்கம் (Centre of Indian Trade Unions (CITU)) போன்ற சில அமைப்புகள் இந்த மாற்றத்திற்கு எதிர்ப்பு தெரிவித்தன. மேலும் இது ஒரு சாரரால் மட்டுமே எடுக்கப்பட்ட முடிவாகும் என்றும். இ.எஸ்.சி. கவுன்சிலில் கலந்து ஆலோசனை செய்யவில்லை என்றும் அவர்கள் குற்றம் சாட்டினர்.

அனைத்திந்திய காங்கிரஸ் தொழிற்சங்கம் ( All India Trade Union Congress (AITUC) ), இது போன்று பங்களிப்பை குறைப்பதற்கு பதிலாக பல முக்கியமான திட்டங்களையும், புதிய காப்பீட்டு திட்டங்களையும் கொண்டு வந்திருக்கலாம் என்றும் கூறியுள்ளனர்.

மேலும் சி.ஐ.டி.யூ அமைப்பு, இந்த புதிய மாற்றமானது முத்தரப்பு ஆளுகைக் குழுவின் 175வது சந்திப்பிற்கு முற்றிலும் நேர் எதிரானது என்று கூறியுள்ளார். 2018ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 18ம் தேதி நடைபெற்ற இந்த முத்தரப்பு கூட்டத்தில் ஊழியர்களின் பங்களிப்பு 4%-மாகவும், நிர்வாகங்களின் பங்களிப்பு 1%மாகவும் குறைக்க வேண்டும் என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அதன்படி ஒட்டுமொத்தமாக 5% வரை பங்களிப்புகள் குறையும் என்று கூறப்பட்டது. மேலும் 5% வரை பங்களிப்புகள் குறையும் என்று அரசு பிப்ரவரி மாதம் 15ம் தேதி, 2019 அன்று திட்டவரைவு ஒன்றை வெளியிட்டது.

இந்த மாற்றத்தின் மூலமாக நிறுவனங்கள் மற்றும் நிர்வகிக்கும் தரப்பினர் மட்டுமே பயன்படைவார்கள். இந்த பங்களிப்பு குறைபாட்டின் விளைவாக நிறுவனங்கள் 8 ஆயிரம் கோடியில் இருந்து 10 ஆயிரம் கோடி வரை லாபம் பெறும் என்று அவர்கள் குற்றம் சுமத்துகின்றனர்.

மேலும் வருமான உச்ச வரம்பில் மாற்றம் கொண்டு வரப்பட்டதும் முத்தரப்பு ஆளுகைக் கூட்டத்தின் மூலம் ஜனவரி 1, 2017 அன்று கொண்டு வரப்பட்ட முடிவாகும் என்று சி.ஐ.டி.யூ குற்றம் சுமத்தியுள்ளது.

எதனால் எதிர்ப்புகள் எழுகின்றன?

நிறுவனங்களிடம் இருந்தும், ஊழியர்களிடம் இருந்து பெறப்படும் பங்களிப்பை முறையாக பயன்படுத்தவில்லை என்று பல்வேறு தரப்பினர் குற்றச்சாட்டுகளை வைத்துள்ளனர். பங்களிப்பு மூலம் பெறப்படும் நிதிக்கும், மாறாக மருத்துவத்தற்காக செலவு செய்யப்படும் நிதிக்கும் மத்தியில் பெரும் வித்தியாசம் இருப்பதை கண்டறிந்துள்ளது ஸ்டாண்டிங் கமிட்டி.

2016-17 காலகட்டத்தில் 16,852 கோடி ரூபாய் பங்களிப்பாக பெறப்பட்டது. ஆனால் மருத்துவத்திற்காவும், இ.எஸ்.ஐ திட்டத்திற்காகவும் செலவு செய்யப்பட்ட மதிப்பானது 6409 கோடி ஆகும். இந்த வேறுபாடு எதனால் உண்டானது என்றும், செலவிடப்படாத நிதி என்ன ஆனது என்றும் ஸ்டேண்டிங் கமிட்டி பிப்ரவரி மாதம் (2019) வெளியிட்ட அறிக்கையில் கேள்வி எழுப்பியுள்ளது.

மேலும் படிக்க : உலகிலேயே மிகவும் மோசமான போக்குவரத்து நெரிசல் கொண்ட நகரங்கள்… மும்பைக்குத் தான் முதலிடம்!

Get all the Latest Tamil News and Tamil Nadu News at Indian Express Tamil. You can also catch all the latest Tamil Explained News by following us on Twitter and Facebook

Web Title:Esi rate cut relief workers encourages more people to join

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com.
Advertisement

இதைப் பாருங்க!
X