மக்களின் வாட்ஸ்ஆப் செயல்பாட்டினை கண்காணிக்க விரும்புகிறதா மத்திய அரசு?

டெலிவரி ஆகாத மெசேஜ்கள் 30 நாட்களில் செர்வரில் இருந்து டெலிட்டாகிவிடும்.

By: October 10, 2019, 4:31:03 PM

Can government intercept WhatsApp ? இந்திய தொலைத்தொடர்பு ரெகுலேட்டரி அத்தாரட்டி எனப்படும் ட்ராய் வாட்ஸ்ஆப் மற்றும் இதர சமூக வலைதளங்களை கண்காணிப்புக்கு கொண்டு மத்திய அரசு முடிவெடுத்துள்ளதாக அறிவித்துள்ளது. வாட்ஸ்ஆப், ஸ்கைப், டெலிகிராம் போன்ற சமூக வலைதளங்களை கண்காணிப்புக்கு கீழ் கொண்டு வரலாமா என்ற வாக்குவாதம் பலகாலமாக நடைபெற்று வருகிறது. மெசேஜ்கள், கால்கள், யாரிடம் தொடர்பில் இருக்கிறார்கள் போன்ற தகவல்களை விசாரணை குழுக்கள் கேட்கும் போது தர வேண்டும் என்றும் பலரும் வாதாடி வருகிறார்கள்.

ட்ராய் ஏன் மெசேஜிங்க் ஆப்களை கண்காணிக்க விரும்புகிறது?

மொபைல் நெட்வொர்க்குகளும் இந்திய தொலைத்தொடர்பு அமைச்சகம் வகுத்திருக்கும் கொள்கைகளுக்கு கீழ் டெலிகாம் சட்டத்தின் கீழ் செயல்படுகிறது. ஆனால்  இணையத்தின் உதவியுடன் வெப்பில் செயல்படும் செயலிகளுக்கு எந்த விதமான  விதிமுறைகளும் இது வரை விதிக்கப்படவில்லை. ஓவெர் தி டாப் (OTT) சேவைகளை சரி செய்ய திருத்தப்பட்ட விதிமுறைகளை உருவாக்குவதற்காக 2015ம் ஆண்டு முதல் முயற்சி செய்து வருகிறது ட்ராய். ஆனால் மொபைல் நிறுவனங்கள் சில தயக்கங்களை முன் வைத்தனர். ஏற்கனவே வாட்ஸ்ஆப் மற்றும் ஸ்கைப் கால்கள் மூலமாக அழைப்புகள் மற்றும் மெசேஜ் சேவைகளில் இருந்து பெறப்படும் வருமானம் குறையும் என்று அச்சம் தெரிவித்தனர்.

இந்த கட்டுரையை முழுமையாக ஆங்கிலத்தில் படிக்க

இந்திய டெலிகிராபி சட்டம் 1885-ன் கீழ் இந்த சேவைகள் இடம் பெறவில்லை என்று மற்றொரு தரப்பினர் வாதாடினர். டெலிகாம் கம்பெனிகள் மற்றும் ஓ.டி.டி. சர்வீஸ் ப்ரொவைடர்களுக்கும் இடையேயான ஒரு சரியான செயல்பாட்டையும் திட்டமிடுதலையும் ட்ராயால் நிறுவுவது மிகவும் கடினமாக இருந்தது. இதற்கு முன்பு இந்த இரண்டையும் இணைப்பதற்கு இடையே பொருளாதாரம் ஒரு தடையாக இருக்கும் என்று நினைத்துக் கொண்டிருந்ததால் இந்த செயல்பாடு சிக்கலாக அமைந்தது. ஆனால் தற்போதோ நிலைமை தலைகீழ்.

கடந்த 2 – 3 ஆண்டுகளில் இந்தியாவில் டேட்டாவின் பயன்பாடு மிகவும் அதிகமாக உள்ளது. முக்கியமாக ஓ.டி.டி.க்காக மக்கள் பயன்படுத்தும் டேட்டாவின் அளவும் அதிகரிக்க துவங்கியது. இதனால் தற்போது பொருளாதாரம் ஒரு பிரச்சனை இல்லை என்ற நிலை வந்ததும், இந்த இரண்டு ப்ளாட்பார்ம்களுக்குமான செக்யூரிட்டிக்கான விதிமுறைகளை நிறுவும் நிலைப்பாட்டை எட்டியுள்ளது ட்ராய் அமைப்பு. டெலிகாம் சேவைகள் அன்னைத்தும் டெலிகிராப் சட்டத்திற்கு உட்பட்டுள்ளதால் கண்காணிப்புக்கு கீழ் கொண்டு வர இயலும். ஆனால் ஓ.டி.டி. ப்ளாட்பார்மகளுக்கு லைசன்ஸ் இல்லை. எனவே இதில் சட்டத்திற்கு உட்பட்ட கண்காணிப்பு சாத்தியப்படுமா என்று யோசனை செய்து வருகிறது ட்ராய்.

ஆன்லைன் ப்ளாட்பார்களுக்காக உலக நாடுகள் பின்பற்றும் கண்காணிப்புகள் குறித்து ஆராய்ச்சி செய்து வருகிறது ட்ராய். தன்னுடைய ஆராய்ச்சி முடிவுகளை தொலைத்தொடர்பு அமைச்சகத்திற்கு அனுப்பி வைக்க உள்ளது ட்ராய். இதன் முடிவுகள் அதிகாரிகளின் ஆலோசனைக்கு எடுத்துச் செல்லபட்டு இந்திய அரசு அதில் முடிவுகளை எடுக்கும். இந்திய டெலிகிராஃப் சட்டம் 1885ன் படி நெருக்கடி காலங்களில், மக்கள் பயன்படுத்தும் தொலைத்தொடர்பு நெட்வொர்க்கில் இருந்து தேவைப்படும் தகவல்களை விசாரணைக்கு தர வேண்டும். மெசேஜ்கள், கால்கள், லாக்குகள் என அனைத்து விதமான தரவுகளையும் விசாரணைக்குழுவிற்கு கொடுத்து ஒத்துழைப்பது என்பது டெலிகாம் நிறுவனங்களின் கடமைகளில் ஒன்றாகும்.

வாட்ஸ்ஆப், சிக்னல், டெலிகிராம் போன்ற செயலிகளில் அனுப்பப்படும் மெசேஜ்களை ட்ராக் செய்வது சாத்தியமா?

வாட்ஸ்ஆப், சிக்னல், டெலிகிராம் போன்ற நிறுவனங்கள் எண்ட் – டூ – எண்ட் என்கிரிப்சனை வழங்கி வருகின்றன. இதனால் தான் அந்த மெசேஜ்களை ட்ராக் செய்ய முடியுமா என்ற கேள்விகள் எழுப்பப்படுகிறது. வாட்ஸ்ஆப் தளத்தில் “பயனாளி, தாங்கள் அனுப்பும் மெசேஜை டெலிட் செய்யாமல், அதே நேரத்தில் முறையான அனுமதி பெற்றுச் விசாரணைக்குழு விசாரணைக்கான ஆணையை சமர்பிக்குமானால் சில செய்திகளை அக்குழுவினருடன் பகிர்ந்து கொள்வோம்” என்று கூறியுள்ளது. டெலிவரி ஆகாத மெசேஜ்கள் 30 நாட்களில் செர்வரில் இருந்து டெலிட்டாகிவிடும். மெசே. ஜ்கள் எதையும் ஸ்டோர் செய்வதில்லை என்பது குறிப்பிடத்தக்கது. வாடிக்கையாளர்களின் தனிப்பட்ட உரிமையை பாதுகாப்பது, சட்டத்திற்கு புறம்பாக நிகழ்த்தப்படும் நிகழ்வுகளை முடிந்த அளவில் தடுப்பது, அரசாங்கத்திற்கு தேவையான தகவல்களை அளிப்பது மற்றும் விதிமுறைகளை பின்பற்றுவது என தங்களுக்கான அஜெண்ட்டாவுடன் செயல்பட்டு வருகிறது வாட்ஸ் ஆப்.

இந்திய நீதித்துறை அமைச்சர் ரவி சங்கரோ அனைத்து ஓ.டி.டி. சேவைகளிலும் வாடிக்கையாளர்களின் பயன்பாடுகள் குறித்து கண்காணிப்பினை அந்தந்த நிறுவனங்கள் மேற்கொள்ள வேண்டும் என்று ஒவ்வொரு முறையும் வலியுறுத்தி வருகிறார்.

மேலும் படிக்க : ரிலையன்ஸ் ஜியோவின் புதிய அறிவிப்பால் கொந்தளித்த மக்கள்

Get all the Latest Tamil News and Tamil Nadu News at Indian Express Tamil. You can also catch all the latest Tamil Explained News by following us on Twitter and Facebook

Web Title:Explained can the government intercept whatsapp

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com.
பிரபலமானவை
Advertisement

இதைப் பாருங்க!
X