இதர நெட்வொர்க்கிற்கு போன் செய்தால் கட்டணம்… ஜியோவின் அதிரடி அறிவிப்பிற்கு காரணம் என்ன?

Jio outgoing call charges : வசூலிக்கப்படும் கட்டணத்திற்கு இணையான டேட்டா கூடுதலாக வழங்கப்படும் என்று அறிவிப்பு

Jio accuses Airtel, Vodafone Idea, BSNL of cheating
jio fiber price, my jio account, reliance jio store near me, jio broadband double data, ஜியோ, ரிலையன்ஸ் ஜியோ, ஜியோ ஃபைபர்நெட்

Reliance jio charges 6 paise per minute for outgoing calls to other networks : ஜியோ நெட்வொர்க் அனைத்தும் இலவசம் என்ற பெயரில் ரிலையன்ஸ் நிறுவனத்தால் மூன்று வருடங்களுக்கு முன்னாள் அறிமுகம் செய்து வைக்கப்பட்டது. அளவுக்கு அதிகமான டேட்டா, அன்லிமிட்டட் கால்கள், அதிக நாள் வேலிடிட்டி ஆகிய அனைத்தையும் குறிப்பிட்ட  தொகைக்குள் வழங்க, ஏர்டெல், வோடபோன் மற்றும் ஐடியா போன்ற நிறுவனங்களின் வளர்ச்சி மெல்ல மெல்ல பாதிக்க துவங்கியது. அதே நேரத்தில் ஜியோவில் இணையும் வாடிக்கையாளர்களின் எண்ணிக்கையும் அதிகமாக துவங்கியது.

ஜியோவின் புதிய அறிவிப்பு

ஜியோ நிறுவனம் வாடிக்கையாளர்களுக்கு இலவச அவுட்-கோயிங் வசதியை செய்து கொடுப்பதற்காக கடந்த 3 ஆண்டுகளில் மற்ற நிறுவனங்களுக்கு இண்டெர்கனெக்ட் யூசேஜ் சார்ஜ் என (interconnect usage charge) ரூ.13 ஆயிரத்து ஐநூறு கோடியை செலுத்தியுள்ளது. தற்போது அதனை ஈடு செய்யும் வகையில் தங்கள் ஒரு நிமிடத்திற்கான அவுட்-கோயிங் அழைப்புக்கான கட்டணத்தை அறிவித்துள்ளது ரிலையன்ஸ் நிறுவனம்.

புதிய அறிவிப்பின் படி ஒரு நிமிட அவுட் கோயிங் காலுக்கு 6 பைசா கட்டணமாகும். மேலும் அந்த கட்டணத்திற்கு இணையான டேட்டா கூடுதலாக வழங்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. இது ஏற்கனவே ஜியோ பயன்படுத்தி வரும் வாடிக்கையாளர்களுக்கு அதிர்ச்சியூட்டும் செயலாக இருக்கிறது. தங்களின் வாடிக்கையாளர்களை தக்க வைத்துக் கொள்வார்களா என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும் !

மேலும் படிக்க : மூன்று மாதத்திற்கு அன்லிமிட்டடா நெட்ஃப்ளிக்ஸில் வெப்சீரிஸ் பாருங்க… ஏர்டெலின் சூப்பர் ப்ளான்

Get the latest Tamil news and Technology news here. You can also read all the Technology news by following us on Twitter, Facebook and Telegram.

Web Title: Reliance jio charges 6 paise per minute for outgoing calls to other networks

Next Story
ஐபோன் 11 ப்ரோ மேக்ஸின் வழியே மைசூரின் தசரா பெருவிழா… ஃபோட்டோ கேலரி!Apple iPhone 11 pro max camera specifications mysore dussehra festival
The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com
X