சென்டிபில்லியனர் கிளப் என்பது என்ன? அதானி இதில் இணைந்தது எப்படி?, What is the centibillionaire’s club which Gautam Adani became the newest member of? | Indian Express Tamil

சென்டிபில்லியனர் கிளப் என்பது என்ன? அதானி இதில் இணைந்தது எப்படி?

சென்டிபில்லியனர் கிளப்பில் இணைந்த அதானி; சென்டிபில்லியனர் கிளப் என்பது என்ன? அதானி அதில் எப்படி இணைந்தார்?

சென்டிபில்லியனர் கிளப் என்பது என்ன? அதானி இதில் இணைந்தது எப்படி?

Dipanita Nath

What is the centibillionaire’s club which Gautam Adani became the newest member of?: இந்த மாதம், ப்ளூம்பெர்க் பில்லியனர்ஸ் தரவரிசைப் பட்டியல், அதானி குழுமத்தின் கெளதம் அதானியின் நிகர சொத்து மதிப்பு $100 பில்லியனை எட்டியுள்ளதாக அறிவித்தது. இதன் மூலம் அதானி சென்டிபில்லியனர்ஸ் கிளப் என்று அழைக்கப்படும் பிரத்யேக உலகளாவிய குழுவின் ஒரே இந்திய உறுப்பினராக இணைந்தார்.

இந்த சென்டிபில்லியனர்ஸ் கிளப் என்பது என்ன, அதன் உறுப்பினர்கள் யார்?

சென்டிபில்லியனர்ஸ் கிளப் என்பது $100 பில்லியன் அல்லது அதற்கு மேல் நிகரச் சொத்து உள்ளவர்களைக் குறிக்கிறது. பில் கேட்ஸ் 1999 முதல் 100 பில்லியன் டாலருக்கும் அதிகமான நிகர மதிப்பைக் கொண்டிருந்தாலும், அமேசான் நிறுவனர் ஜெஃப் பெசோஸ் 2017 ஆம் ஆண்டில் தனது செல்வத்தை $112 பில்லியனாக உயர்த்தும் வரை, சென்டிபில்லியனர் என்ற வார்த்தை மதிப்பைப் பெறவில்லை. 2017 முதல் ஜெஃப் பெசோஸ் உலகின் முதல் சென்டிபில்லியனர் என்று குறிப்பிடப்பட்டார்.

அதன் பிறகு, சென்டிபில்லியனர்ஸ் எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டே இருந்தது. 2020 வாக்கில், மார்க் ஜுக்கர்பெர்க் இந்தக் குழுவில் சேர்ந்தபோது, ​​குழுவில் ஏற்கனவே நான்கு உறுப்பினர்கள் இருந்தனர். அவர்கள் டெஸ்லாவின் எலன் மஸ்க், பில் கேட்ஸ், ஜெஃப் பெசோஸ் மற்றும் ஆடம்பர பொருட்கள் நிறுவனமான LVMH Moët Hennessy – Louis Vuitton SE இன் தலைவர் மற்றும் CEO பெர்னார்ட் அர்னால்ட்.

இதையும் படியுங்கள்: ஏ.டி.எம் கார்டு இல்லாமல் ஏ.டி.எம்-இல் பணம் எடுப்பது எப்படி?

இன்று, கிளப்பில் 10 உறுப்பினர்கள் உள்ளனர், எலன் மஸ்க் முதலிடத்திலும், ஜெஃப் பெசோஸ் அடுத்த இடத்திலும் உள்ளனர், அதைத் தொடர்ந்து அர்னால்ட், பில் கேட்ஸ் மற்றும் பெர்க்ஷயர் ஹாத்வேயின் வாரன் பஃபெட் ஆகியோர் உள்ளனர். பட்டியலில் அதானி பத்தாவது இடத்தில் உள்ளார். அதானி அவருக்கு மேலே உள்ள ஆரக்கிள் நிறுவனத்தின் லாரி எலிசனை விட $3 பில்லியன் கீழே உள்ளார். லாரி எலிசனின் நிகர சொத்து $103 பில்லியன் ஆகும்.

அதானி எப்படி இந்தக் குழுவில் இணைந்தார்?

ப்ளூம்பெர்க் அறிக்கையின்படி, துறைமுகங்கள் மற்றும் சுரங்கங்கள் முதல் பசுமை ஆற்றல் வரையிலான தொழில்கள் அதானிக்கு நல்ல லாபத்தை ஈட்டின. இந்த ஆண்டு பில்லியனர்கள் குறியீட்டில் கிட்டத்தட்ட $24 பில்லியன் என அதிக லாபம் ஈட்டியவராக அதானி உள்ளார். “அதானியின் ஏற்றம் பிரமிக்கத்தக்கதாக இல்லை. கல்லூரிப் படிப்பை பாதியில் நிறுத்திய அதானி, நிலக்கரித் தொழிலில் முதன்முதலில் பெரும் வருமானம் ஈட்டியவராக உள்ளார், கடந்த இரண்டு ஆண்டுகளில் தனது மொத்தச் செல்வத்தையும் குவித்துள்ளார், பசுமை ஆற்றல் மற்றும் உள்கட்டமைப்புக்கு மாறியதன் மூலம், பிரான்சின் டோட்டல் எஸ்இ மற்றும் வார்பர்க் பின்கஸ் உள்ளிட்ட நிறுவனங்களில் முதலீடுகள் அவருக்குக் கிடைத்தன என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

சென்டிபில்லியனர் கிளப்பில் உள்ள அதிர்ஷ்டங்கள் மாற்றத்தின் காற்றினால் பாதிக்கப்படக்கூடியவை, இது 2020 ஆம் ஆண்டில் 200 பில்லியன் டாலர்களைத் தொட்ட முதல் நபரான பெசோஸூக்கு நன்றாக தெரியும். இன்று அவர் 179 பில்லியன் டாலர்களுடன் பட்டியலில் இரண்டாவது இடத்தில் உள்ளார், அதே சமயம் எலன் மஸ்க் 260 பில்லியன் டாலர்களுடன் முதலிடத்தில் இருக்கிறார்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Stay updated with the latest news headlines and all the latest Explained news download Indian Express Tamil App.

Web Title: Explained centibillionaires club gautam adani net worth 100 billion