ஹெர்டு இம்யூனிட்டி நோய்த் தடுப்பாற்றலை உறுதி செய்யுமா?

மக்கள் தொகையில் பாதி நபர்களுக்கு நோய் தொற்று ஏற்படுவதற்கு முன்பு இத்தகைய ஹெர்ட் இம்யூனிட்டி தோன்ற வாய்ப்பில்லை.

மக்கள் தொகையில் பாதி நபர்களுக்கு நோய் தொற்று ஏற்படுவதற்கு முன்பு இத்தகைய ஹெர்ட் இம்யூனிட்டி தோன்ற வாய்ப்பில்லை.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
Explained: What exactly is herd immunity

Blood samples collection and Sero-Survey conducted at health center by the medical staffs, in Sonia Vihar, New Delhi, to check the immunity against Corona, on Tuesday, June 30, 2020. Express photo by Abhinav Saha

 Amitabh Sinha 

What exactly is herd immunity :   டெல்லியில் சமீபத்தில் நடந்த ஒரு செரோலாஜிகல் ஆய்வில், சோதனை செய்யப்பட்ட மாதிரிகளில் சுமார் 23% மாதிரிகளில் கொரோனா வைரஸ்-குறிப்பிட்ட ஆன்டிபாடிகள் இருப்பது கண்டறியப்பட்டது. அந்த கணக்கெடுப்பின் முடிவுகள் டெல்லியில் சுமார் 46 லட்சம் பேர் இதுவரை கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டிருக்கலாம் என்றும் “மந்தை நோய் எதிர்ப்பு சக்தி” விரைவில் உருவாகும் என்றும் தெரிவிக்கப்படுகிறது. முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் கூட வெள்ளிக்கிழமை இந்த ஆலோசனையை வெளியிட்டார்.  இருப்பினும், விஞ்ஞானிகள் இத்தகைய முடிவுகளை எச்சரிக்கையுடன் அணுகுகின்றார்கள். ஒரு குறிப்பிட்ட கேள்விக்கு பதிலளிக்க செரோலாஜிக்கல் ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டன. இந்த கட்டத்தில் "மந்தை நோய் எதிர்ப்பு சக்தி" பற்றிய எந்தவொரு அனுமானமும்  முதிர்ச்சி அடையாமல் இருப்பதோடு மட்டுமல்லாமல், தவறாகவும் உள்ளது.

Advertisment

செரோலாஜிக்கல் ஆராய்ச்சி எதைப் பற்றியது?

இந்த ஆய்வு, கொரோனா பரிசோதனை மேற்கொண்ட மக்களிடம் கொரோனாவுக்கு எதிரான ஆண்ட்டிபாடிகள் உருவாகியுள்ளதா என்பதை அறியவே மேற்கொள்ளப்பட்டது. நோய் எதிர்ப்பு சக்தி மூலம் உருவாக்கப்படும் புரதம் தான் ஆண்ட்டிபாடிகள் என்று அழைக்கப்படுகிறது. இவை, உடலுக்குள் புகும் வைரஸ் போன்ற நுண்ணியிரிகளை தாக்கி அழிக்கும். இது மனிதர்களிடம் இந்த நோய் பரவிய பிறகே உருவாகும். உடலில் ஆண்ட்டிபாடிகள் இருப்பதன் அர்த்தம், ஏற்கனவே உடலில் வைரஸ் அல்லது பாக்டீரியாவால் பாதிப்பு ஏற்பட்டிருப்பதை உறுதி செய்வது தான். இது மேற்கொண்டு உடலில் அந்த வைரஸ் பரவலை தடுக்கிறது.

தடுப்பு மருந்துகளும் இப்படித்தான் வேலை புரிகின்றன. பாதிப்பை ஏற்படுத்தாத வைரஸ் மற்றும் பாக்ட்டீரியாக்களை மனித உடலில் செலுத்தி நோய் எதிர்ப்பு சக்தி தூண்டப்படும். பின்னர் உருவாகும் ஆண்ட்டிபாடிகள் உடலில் ஏதேனும் வைரஸ் அல்லது பாக்ட்ரீயா தாக்குதல் நடக்கும் போது அதனை எதிர்த்து போராடும். தற்போதைய தொற்றுநோயின் பின்னணியில், கோவிட் -19 எவ்வளவு பரவலாக மாறக்கூடும் என்பதை மதிப்பிடுவதற்கு செரோலாஜிகல் கணக்கெடுப்பு மேற்கொள்ளப்பட்டது. அனைவரையும் சோதிக்க இயலாது என்பதால், மக்கள் தொகையில் எத்தனை பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் என்பது தெளிவாகத் தெரியவில்லை, குறிப்பாக பெரும்பாலான நோயாளிகள் நோயின் எந்த அறிகுறிகளையும் காட்டவில்லை என்பதால். குறிப்பிட்டு இல்லாமல் ரேண்டமாக மக்களிடம் ஆன்டிபாடிகளைக் கண்டறிவது ஒரு சமூகத்தில் நோய் பரவும் அளவை மதிப்பிடுவதற்கான மறைமுக வழியாகும்.

முடிவுகள் அறிவிப்பது என்ன?

பரிசோதிக்கப்பட்ட 21,000 நபர்களில் சுமார் 23% நபர்கள் கொரோனா சார்ந்த ஆன்டிபாடிகளை பெற்றுள்ளனர் என்பது ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது. இதன் பொருள், ஏதோ ஒரு சூழலில், காலகட்டத்தில் கொரோனா நோய்க்கு ஆளாகியுள்ளனர் என்பது தான். சீரற்ற நபர்கள் பரிசோதிக்கப்பட்டதால், நோயறிதல் சோதனைகள் பரிந்துரைப்பதை விட நோயின் பரவல் மிகவும் விரிவானது. டெல்லியில், வைரஸால் பரிசோதிக்கப்பட்டவர்களில் சுமார் 14% பேர் கொரோனா தாக்குதலுக்கு ஆளாகியுள்ளனர். கொரோனா நோய் பரவல் குறித்த தகவல்கள், அதிகாரிகள் கட்டுப்பாட்டு நடவடிக்கைகளை திட்டமிடுவதற்கு மிகவும் முக்கியமான ஒன்றாகும்.

Advertisment
Advertisements

வரையறுக்கப்பட்ட நோக்கத்திற்காக இது போன்ற செரோலாஜிகல் சர்வேவை நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் மேற்கொள்ள வேண்டும் என்று ஆராய்ச்ச்சியாளர்கள் அறிவிக்கின்றனர். இது தொடர்பான மற்ற விளக்கங்கள் குறித்து அவர்கள் எச்சரிக்கின்றனர். தற்போது ஆண்ட்டிபாடிகள் உள்ளவர்கள் தங்களை கொரோனா நோயில் இருந்து பாதுகாத்துக் கொள்வார்கள். ஆனால் இதனால் ஹெர்ட் இம்யூனிட்டி எனப்படும் மந்தை நோய் தடுப்பாற்றல் நிலையை நாம் எட்டிவிட்டோம் என்று கூறுவது பிரச்சனைக்குரியது என்றும் அவர்கள் கவலை தெரிவிக்கின்றனர்.

இந்த ஆண்ட்டிபாடிகள் நோய் தடுப்பாற்றலை உறுதி செய்யுமா?

வெறுமனே ஆண்ட்டிபாடிகள் இருப்பதால் அவை நோய்க்கு எதிரான தடுப்பாற்றலை உருவாக்கும் என்று அர்த்தம் இல்லை. இராண்டு வகையான விசயங்களை கருத்தில் கொள்ள வேண்டும் என்று ஆராய்ச்சியாளர்கள் கூறுகிறார்கள். முதலில் எவ்வளவு ஆண்ட்டிபாடிகள் உடலில் இருக்கிறது என்பது. மற்றொன்று அதில் நியூட்ரிலைஸிங் ஆண்ட்டிபாடிகளும் அடங்கியுள்ளதா என்பது. இவை தான் நோயை எதிர்த்து போராடக் கூடியது. ஆனால் செராலஜி ஆராய்ச்சி எவ்வளவு ஆண்ட்டிபாடிகள் இருக்கின்றது என்பதையும், நியூட்ரிலைஸிங் ஆண்ட்டிபாடிகள் இருக்கிறதா என்பதையும் அறிய நடத்தப்படவில்லை.

"செராலாஜிக்கல் சோதனைகள் ஆம் / இல்லை என்ற பதிலை தரக்கூடிய அடிப்படை கேள்விளைத் தான் கேட்டது. ஆன்டிபாடிகள் உள்ளனவா? அவ்வளவுதான். இப்போது, ​​அந்த நபர் நோயால் பாதிக்கப்பட்டுள்ளாரா இல்லையா என்பதை அறிய இது உதவும். நோய்க்கு எதிரான பாதுகாப்பு புரதம் இருக்கிறதா என்பது மாறுபட்ட கேள்வி. செராலஜிக்கல் சோதனைகள் அதைப் பற்றிய போதுமான தகவல்களை எங்களுக்கு வழங்கவில்லை, ”என்று புனேவில் உள்ள இந்திய அறிவியல் கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தில் (ஐ.ஐ.எஸ்.இ.ஆர்) பணியாற்றும் நோயியல் நிபுணர் மற்றும் நோயெதிர்ப்பு நிபுணர் சத்யஜித் ராத் நோயியல் நிபுணர் மற்றும் நோயெதிர்ப்பு நிபுணர் சத்யஜித் ராத் கூறினார்.

ஏற்கனவே இந்நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு மீண்டும் பாதிப்பு ஏற்படும் என்ற நிலை இதுவரை வரவில்லை. இருப்பினும் உடலில் தோன்றும் நியூட்ரிலைஸ்ட் ஆண்ட்டிபாடிகள் நான்கு மாதங்களுக்கு பிறகு தன்னுடைய வீரியத்தை இழக்கும். ஒரு நபருக்கு கோவிட் -19 நோய்க்கு எதிராக ஆன்டிபாடிகள் இருப்பது மிகவும் சாத்தியமானது தான். ஆனால் அது பாதுகாப்பானது என்று அர்த்தம் இல்லை. இவை இரண்டும் ஒரே மாதிரியானவை அல்ல. எனவே அறிவியல் ஆதாரங்களை அடிப்படையாக கொண்டவற்றை பற்றி பேசும் போது அதிக எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என்று ஜமீல் என்பவர் கூறினார்.

கொரோனா வைரஸ் வளர்ச்சி அடைந்து கொண்டே இருக்கிறது. அவை மேலும் பல மாற்றங்களை அடையும். எனவே நிரந்தரமான பாதுகாப்பு குறித்து இப்போதே பேச முடியாது. வெறும் ஆண்ட்டிபாடி டெஸ்ட் முடிவுகளை வைத்து நிச்சயமாக இது குறித்து பேச முடியாது என எல்.எஸ். சஷிதாரா, உயிரியல் ஆராய்ச்சியாளர் அறிவித்தார்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil

மந்தை நோய்த்தடுப்பாற்றல் (Herd Immunity) என்றால் என்ன?

கூடிய விரைவில் மந்தை தடுப்பாற்றல் உருவாகும் என்று கூறுவது மிகவும் சிக்கல் வாய்ந்தது என்கிறார்கள் ஆராய்ச்சியாளர்கள். பெருங்கொள்ளை நோய் காலத்தில் ஒரு குறிப்பிடத்தக்க மக்கள் தொகையினர் நோய் தொற்றில் இருந்து தங்களை காத்துக் கொள்வார்கள். ஏன் என்றால் அவர்களை சுற்றி இருப்பவர்களில் பலரும் ஏற்கனவே தடுப்பூசி மூலமாகவும், நோயில் இருந்து மீண்டும் தடுப்பாற்றலை பெற்றிருப்பார்கள். எனவே தடுப்பாற்றலை பெற ஒவ்வொருவரும் நோயால் தாக்கதலுக்கு ஆளாக வேண்டும் என்று இல்லை. ஒரு குறிப்பிட்ட தொகையில் மக்கள் நோய் தொற்றால் பாதிக்கப்பட்டால் அது இந்த நோய்க்கு எதிராக தடுப்பாற்றல் உருவாகும். அப்போது நோய் பரவல் கொஞ்சம் கொஞ்சமாக குறைந்து இறுதியில் நோய் பரவல் முற்றிலுமாக நின்றுவிடும்.

அதன் விகிதம் எவ்வளவாக இருக்க வேண்டும்?

ஒரு நோய்க்கான மந்தை தடுப்பாற்றல் உருவாக எவ்வளவு நபர்களுக்கு நோய் தொற்று ஏற்பட வேண்டும் என்பது யாருக்கும் தெரியவில்லை. ஒவ்வொரு நோய்க்கும் ஒவ்வொரு விதமான விகிதம் தேவைபப்டுகிறது. மக்கள் தொகையில் பாதி நபர்களுக்கு நோய் தொற்று ஏற்படுவதற்கு முன்பு இத்தகைய ஹெர்ட் இம்யூனிட்டி தோன்ற வாய்ப்பில்லை. அம்மை நோய் ஏற்பட்ட போது, 85 முதல் 90% மக்கள் அந்நோய்க்கு ஆளான பிறகு தான் ஹெர்ட் இம்யூனிட்டி தோன்றியது. சில நோய்களுக்கு இந்த விகிதம் குறைவாக இருக்கும். ஆனால் பல்வேறு ஆராய்ச்சிகள், 55 முதல் 70% மக்கள் தொகையினருக்கு நோய் தொற்று ஏற்படும் போது தான் ஹெர்ட் இம்யூனிட்டி உருவாகும் என்று கூறப்பட்டுள்ளது.

மேலும் படிக்க  : Tamil News Today Live: கோவையில் முழு ஊரடங்கு.. பாதிப்புக்குள்ளான பகுதிகளில் கிருமிநாசினி தெளிப்பு!

ஹெர்ட் இம்யூனிட்டி என்பதை மிகவும் தாரளமாக இன்றைய சூழலில் பயன்படுத்தி வருகின்றனர். அவை தவறாகவும் புரிந்து கொள்ளப்பட்டுள்ளது. மிகவும் குறிப்பிட்ட சூழலில் மட்டும் தான் இதனை பயன்படுத்த வேண்டும். மிகவும் குறிப்பிட்ட அளவுள்ள மக்கள் தொகை கொண்ட குழுவில் மட்டுமே பயன்படுத்த முடியும். அந்த மக்கள் தொகை மற்ற அண்டை சமூகத்திடம் இருந்து விலகி இருக்கும் பட்சத்தில் மட்டும் தான் பயன்படுத்த கூடும். டெல்லி மக்களிடம் ஹெர்ட் இம்யூனிட்டி என்பது அங்கு மக்கள் நடமாட்டம் இருந்து கொண்டு இருக்கும் வரை பயன்படுத்த முடியாது. மந்தை எதிர்ப்பாற்றல் வர அனைவருக்கும் ஒரே மாதிரியான சூழலில் நோய் தொற்று ஏற்படுவதில்லை. டெல்லி போன்ற நகரத்திலும் கூட வெவ்வேறு இடங்கள் மற்றும் சுற்றுப்புறத்தில் இருப்பவர்களுக்கு மற்றவர்களிடம் இருந்து தங்களை தற்காத்துக் கொண்டால் ஹெர்ட் இம்யூனிட்டி உருவாகும்.

பெருந்தொற்று நோய் நாளுக்கு நாள் அதிகமாக பரவிக் கொண்டே இருக்கின்ற நிலையில், ஹெர்ட் இம்யூனிட்டி உருவாவதற்கான நோய் பரவலின் நிலையை தீர்மானிப்பது மிகவும் கடினமான ஒன்றாகும். "இந்த கணக்கீட்டில் உள்ள ஒவ்வொரு அளவும் மாறும். தொற்றுநோய் முடிந்த பிறகே, மந்தை நோய் எதிர்ப்பு சக்தி எந்த கட்டத்தில் உருவானது என்பதை நம்பத்தகுந்த முறையில் மதிப்பிட முடியும், ”என்று ஜமீல் கூறினார்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: