Advertisment

ஒன்றுக்கு மேற்பட்ட முறை கொரோனா தொற்று: ஆய்வாளர்கள் விளக்கம் என்ன?

நோய்த்தொற்றுக்கான தடுப்பூசிகளின் செயல்திறன் பற்றிய கவலைகளையும் இது எழுப்பியுள்ளது.

author-image
WebDesk
New Update
Explained: Why first reinfection cases do not change much in approach to Covid

Amitabh Sinha

Advertisment

Explained: Why first reinfection cases do not change much in approach to Covid : சுமார் 2 வாரங்களுக்கு முன்பு, அமெரிக்காவின் நோய் கட்டுப்பாட்டு மையங்கள் அதுவரை, கொரோனா வைரஸ் மறுதொற்று எந்தவொரு நபரிடமும் உறுதிப்படுத்தப்படவில்லை என்று கூறியிருந்தது. ஒரு முறை நோயிலிருந்து மீண்ட பிறகு மக்களுக்கு மீண்டும் கொரோனா பாசிட்டிவ் ரிசல்ட்கள் வந்த சம்பவங்களை சி.டி.சி ஒப்புக் கொண்டது. ஆனால், அது "தொடர்ச்சியான வைரஸ் உதிர்தல் (Persistent Viral Shedding)" காரணமாக இருக்கலாம் என்று அது கூறியது. மீட்கப்பட்ட நோயாளிகளுக்கு நோய்த்தொற்று ஏற்பட்du 3 மாதங்கள் வரை குறைந்த அளவு வைரஸ் உடலில் இருக்கக்கூடும், ஆனால் அதனால் நபருக்கு மேலும் நோய்வாய்ப்படுத்தவோ அல்லது நோயை மற்றவர்களுக்கு பரப்பவோ போதுமானதாக இல்லை என்றாலும், இது சோதனைகளில் கண்டறியப்படலாம்.

To read this article in English

சி.டி.சி. கொஞ்சம் முன்கூட்டியே பேசிவிட்டதாகவே தெரிகின்றது. ஏன் என்றால் ஹாங்காங்கில் ஒருவருக்கு மீண்டும் கொரோனா நோய் தொற்று ஏற்பட்டதை ஆராய்ச்சியாளர்கள் உறுதி செய்துள்ளனர். நோய் தொற்று ஏற்பட்டு நான்கரை மாதங்கள் ஆன பிறகு சீனாவை சேர்ந்த 33 வயதான ஒருவருக்கு நோய் தொற்று ஏற்பட்டுள்ளாது. இடையில் அவர் ஸ்பெய்னுக்கும் பயணமாகியுள்ள்ளார். அடுத்த நாளில் பெல்ஜியத்திலும், நெதர்லாந்திலும் மறுபடியும் கொரோனா நோய் தொற்றுக்கு ஆளானவர்கள் குறித்து தகவல்கள் வெளியானது. கடந்த வாரம் அமெரிக்காவிலும் இரண்டாம் முறை கொரோனா நோய் தொற்றுக்கு ஆளானவர்கள் குறித்த முதல் கேஷ் பதிவு செய்யப்பட்டது.

இதன் மூலம், முதன்முறையாக ஏற்பட்ட வைரஸ் தொற்றினால் உருவான நோய் எதிர்ப்பு சக்தி நீண்ட நாட்களுக்கு இருக்காது என்பதை உறுதி செய்துள்ளது. தடுப்பூசி அல்லது இயற்கையாக நோய் தொற்று ஏற்பட்டு அதிக அளவில் ஹெர்ட் இம்யூனிட்டி உருவானாலும் கூட, அதிக அளவு மக்கள் மத்தியில் இந்த வைரஸ் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது. நோய்த்தொற்றுக்கான தடுப்பூசிகளின் செயல்திறன் பற்றிய கவலைகளையும் இது எழுப்பியுள்ளது.

மேலும் படிக்க : கொரோனா தொற்று முடிந்தாலும் ஏ.சி. பெட்டிகளில் போர்வைகள் கிடையாது – ரயில்வே ஆலோசனை!

இந்த மறுநோய் தொற்று உண்மையானதா?

ஹாங்காங் ஆராய்ச்சியாளர்கள் வெளியிட்ட ஆய்வறிக்கையில், 33 வயதான சீனர் ஒருவருக்கு இரண்டாவது முறையாக நோய் தொற்றினை உறுதி செய்துள்ளனர். ஆய்வில் அந்த நபருக்கு முதன்முறை ஏற்பட்ட வைரஸ் தொற்றின் தாக்கம் தொடர்பான தடயம் ஏதும் கிடைக்கவில்லை என்று கூறப்பட்டுள்ளது.  உண்மையில், நோயறிதல் சோதனைகளின் முடிவுகளின் அடிப்படையில் மறுமுறை தொற்றுக்கான கேஷ் செய்யப்படவில்லை. இந்த நபரிடமிருந்து வைரஸ் மாதிரியானது அவர் பாதிக்கப்பட்ட இரண்டு முறையும் சேகரிக்கப்பட்டது, மேலும் இரண்டு மாதிரியிலிருந்தும் மரபணு வரிசைமுறைகள் பிரித்தெடுக்கப்பட்டு ஒப்பிடப்பட்டுள்ளன.

கொரோனாவின் வெவ்வேறு இரண்டு வகை வைரஸ்களால் இம்மனிதர் பாதிக்கப்பட்டுள்ளார் என்று மரபணு பகுப்பாய்வு முடிவுகள் அறிவிக்கின்றன. வைரஸ்கள் காலத்திற்கு ஏற்றவகையில் மாறுபடும். மரபணுவில் சிறிய அளவில் மாற்றங்களை அது உருவாக்கும். இது நோய் தொற்றின் மூலத்தை அறிய ஆராய்ச்சியாளர்களுக்கு உதவுகிறது. மேலும் அது புழக்கத்தில் இருக்கும் சாத்தியமான வழிகளைக் கண்டறியவும் உதவுகிறது. இரண்டாவது முறையாக பாதிக்கப்பட்ட நபரிடம் இருந்து பெறப்பட்ட மாதிரிகளில், ஜூலை மற்றும் ஆகஸ்ட்டில் ஐரோப்பியாவில் இருக்கும் வைரஸின் மாதிரிகளை ஒத்துள்ளது என்று கண்டறியப்பட்டுள்ளது. ஸ்பெய்னிற்கு மீண்டும் பயணம் மேற்கொண்ட போது அவருக்கு மறுபடியும் கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளது உறுதி செய்யப்பட்டுள்ளது.  அமெரிக்காவிலும் மறுதொற்று விஷயத்தில், நோயாளியின் நோய்த்தொற்றின் ஒவ்வொரு நிகழ்வோடு தொடர்புடைய வைரஸ் மரபணு ரீதியாக வேறுபட்ட விகாரங்களைக் குறிப்பதாக நெவாடாவில் ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்தனர்.

இந்த கண்டுபிடிப்புகளின் தாக்கங்கள் என்ன?

மறுதொற்று உறுதி செய்யப்பட்டது அப்படி ஒன்றும் ஆச்சரியத்தை ஏற்படுத்தவில்லை. இதற்கு முன்பே மறுதொற்று ஏற்பட்டிருக்கலாம் என்று பலரும் நம்பினார்கள். ஆனால் அப்படி ஒன்றும் உறுதி செய்யப்படவில்லை. ஒரு நபர் இரண்டாவது முறையாக பாசிட்டிவாக பரிசோதிக்கப்பட்ட எந்தவொரு சந்தர்ப்பத்திலும் கிடைக்கக்கூடிய முதல் நோய் தொற்றின் மரபணு வரிசை இல்லை. மரபணு வரிசை அனைத்து கொரோனா நோயாளிகளிடம் இருந்தும் பெறப்படவில்லை. ஆராய்ச்சியாளர்கள் நூற்றுக்கணக்கான நோயாளிகளிடம் இருந்து மட்டும் மரபணு வரிசையை பிரித்தெடுத்து ஆராய்ச்சிக்கு பயன்படுத்தி வருகிறார்கள். ஹாங்காங் மற்றும் அமெரிக்காவில் மறு தொற்றால் பாதிக்கப்பட்ட நபர்களின் ஜீனோம் வரிசை இதற்கு முன்பே அதிர்ஷ்டவசமாக பெறப்பட்டது.

கொரோனா வைரஸ் குடும்பத்தில் உள்ள மற்ற வைரஸ்கள், குறிப்பாக சுவாச பிரச்சனைகளை உருவாக்கும் வைரஸ்கள் ஒவ்வொரு ஆண்டும் ஆயிர கணக்கான மக்களை தாக்குகிறது. இந்நோயால் தொற்று ஏற்பட்டிருக்கும் மக்களிடம் நோய் எதிர்ப்பு சக்தி என்பதை பெரிதாக கருதுவதில்லை. ஹாங்காங் ஆராய்ச்சியாளர்கள் சுட்டிக்காட்டியுள்ளபடி, இந்த மற்ற பருவகால கொரோனா வைரஸ்களுக்கு மறு தொற்று பொதுவானது. கோவிட் -19 நோயை ஏற்படுத்தும் SARS-CoV2 என்ற வைரஸ் வேறுபட்டதாக இருக்க வேண்டுமென நம்புவதற்கு காரணம் ஏதும் இல்லை. வித்தியாசம் என்னவென்றால், மற்ற வைரஸ்களைப் போலல்லாமல், கோவிட் -19 க்கு இப்போது எந்த சிகிச்சையும் இப்போது இல்லை.

 

publive-image

மீண்டும் தொற்றுநோய்க்கான இந்த முதல் நிகழ்வுகள் அனைவருக்கும் மறுசீரமைப்பிற்கு சமமாக பாதிக்கப்படுகின்றன என்று அர்த்தமல்ல. அனைவருக்கும் மீண்டும் தொற்று ஏற்படக்கூடியது, மற்றும் பாதிக்கப்பட்ட நபர் ஒரு மறுசீரமைப்பிலிருந்து எவ்வளவு காலம் பாதுகாக்கப்படுவார் என்று எதிர்பார்க்கலாம், இவை இரண்டும் இப்போது திறந்த கேள்விகள், மேலும் விசாரணை தேவை. சீன காப்புரிமையில், முதல் நோய்த்தொற்றுடன் ஒப்பிடும்போது இந்த நோய் மறுசீரமைப்பில் லேசானதாக இருப்பதாக ஹாங்காங் ஆராய்ச்சியாளர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

அனைவருக்கும் மீண்டும் கொரோனா நோய் தொற்று ஏற்படாது. யாருக்கெல்லாம் மீண்டும் நோய் தொற்று ஏற்படும் மற்றும் எவ்வளவு காலத்திற்கு நோய் எதிர்ப்பு சக்தி நோயில் இருந்து அவர்களை பாதுகாக்கும் என்பது தொடர்பாக மீண்டும் ப்லவேறு ஆராய்ச்சிகள் நடத்தப்பட வேண்டும். முந்தைய தொற்றின் போது ஏற்பட்ட தாக்கத்தை காட்டிலும் தற்போது ஏற்பட்டுள்ள தாக்கம் மிகவும் குறைவாக இந்த சீன நோயாளியிடம் உள்ளது என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் படிக்க : ஜே.இ.இ/நீட் தேர்வர்களுக்கு உதவும் இணைய போர்ட்டல் : ஐ.ஐ.டி மாணவர்கள் முயற்சி

தடுப்பூசிகள் பயனுள்ளதா?

வைரலாஜிஸ்ட் ஷாஹித் ஜமீல், மறு தொற்று வைரஸ் கேஸ்களால், உருவாகி வரும் கொரோனா தடுப்பூசியின் செயல்திறன் குறித்து எந்த விதமான கேள்விகளையும் எழுப்பாது என்று கூறியுள்ளார். ஏற்கனவே ஒரு குறிப்பிட்ட பகுதியில் சுற்றிக் கொண்டிருக்கும் வைரஸ்களின் மற்ற வகைகளால் மட்டுமே கொரோனா வைரஸ் மீண்டும் பாதிக்கிறது. அனைத்துவிதமான வைரஸ்களுக்கும் எதிராகவே தடுப்பூசிகள் கண்டறியப்படும். வைரஸை ப்ளாக் செய்ய, அனைத்து வகைகளிலும் பொதுவான பகுதிகளை குறி வைத்து செய்யப்படுகிறது. மறு தொற்று குறித்து அதிக கவலை அடைய தேவையில்லை என்பதால் தடுப்பூசியின் செயல்திறன் குறித்து இப்போது யோசிக்க வேண்டியதில்லை.

தடுப்பூசிகள் பயன்பாட்டிற்கு வந்த பிறகு, வைரஸ் இயற்கையின் அழுத்ததால் மீண்டும் மாற்றங்களை அடையும். அத்தகைய சூழலை சமாளிக்க தற்போது இருக்கும் தடுப்பூசி போதாது. ஆனால் அவை இப்போது நிகழப்போவதில்லை. வருங்காலத்தில் தான் என்றார். ஆனால் இயற்கையான நோய் எதிர்ப்பு சக்தியைப் போலவே, தடுப்பூசி மூலம் வழங்கப்படும் பாதுகாப்பின் ஆயுளும் ஒரு கேள்வியாகவே உள்ளது. கோவிட் -19 நோய்க்கு எதிராக தடுப்பூசிகளால் வாழ்நாள் முழுவதும் பாதுகாப்பு வழங்க முடியாது என்று ஹாங்காங் ஆராய்ச்சியாளர்கள் சுட்டிக்காட்டுகின்றனர். ஆனால் பல நோய்களுக்கான தடுப்பூசிகள் உள்ளன, அவை நிரந்தர பாதுகாப்பை வழங்காததால் அவ்வப்போது மீண்டும் மீண்டும் உருவாக்கப்பட்டது. எவ்வாறாயினும், மீட்கப்பட்ட நோயாளிகளுக்கும் தடுப்பூசிகளை பரிசோதிக்க இப்போது ஒரு வாய்ப்பு இருப்பதாக ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil

Coronavirus
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment