Explained: Why has Ola Electric recalled over 1,400 scooters?: இரு சக்கர வாகனங்கள் தீப்பிடித்து, இன்றுவரை குறைந்தது நான்கு உயிர்கள் பறிபோன டஜன் கணக்கான சம்பவங்களை அடுத்து ஓலா எலக்ட்ரிக் நிறுவனம், அதன் 1,400 க்கும் மேற்பட்ட மின்சார ஸ்கூட்டர்களை திரும்பப் பெறுவதாக அறிவித்துள்ளது.
மின்சார வாகனத் தயாரிப்பாளர்கள் தங்கள் வாகனங்களின் அனைத்து குறைபாடுள்ள வாகனங்களையும் திரும்பப் பெறுவதற்கு "முன்கூட்டியே நடவடிக்கை" எடுக்குமாறு மத்திய சாலைப் போக்குவரத்து அமைச்சர் நிதின் கட்கரி எச்சரித்த சில நாட்களுக்குப் பிறகு ஓலா நிறுவனம் இவ்வாறு அறிவித்துள்ளது.
ஓலா எலெக்ட்ரிக் நிறுவனம் மின்சார ஸ்கூட்டர்களை திரும்ப பெற காரணம் என்ன?
ஓலா எலெட்ரிக் (Ola Electric) தனது ஸ்கூட்டர்களின் ஒரு குறிப்பிட்ட தொகுப்பிலிருந்து 1,441 வாகனங்களை திரும்பப் பெறுவதாகக் கூறியுள்ளது, அதில் ஒன்று கடந்த மாதம் புனேவில் பரபரப்பான வணிகப் பகுதியின் சாலையோரத்தில் நிறுத்தப்பட்டிருந்தபோது தீப்பிடித்து எரிந்தது.
எவ்வாறாயினும், ஓலா நிறுவனம், சம்பவத்தை குறைத்து மதிப்பிட்டு, "மார்ச் 26 அன்று புனேயில் நடந்த வாகன தீ விபத்து தொடர்பான எங்கள் உள் விசாரணை நடந்து வருகிறது, மேலும் தீப்பிடித்த சம்பவம் ஒரு தனிப்பட்ட நிகழ்வாக இருக்கலாம் என்று ஆரம்ப மதிப்பீட்டை வெளிப்படுத்துகிறது". மேலும், "முன்கூட்டிய நடவடிக்கையாக, அந்த குறிப்பிட்ட தொகுப்பில் உள்ள ஸ்கூட்டர்களின் குறைபாடுகளை விரிவாக கண்டறிதல் மற்றும் வாகன சோதனையை நாங்கள் நடத்துவோம், எனவே 1,441 வாகனங்களை தானாக முன்வந்து திரும்ப பெறுகிறோம்." என்று தெரிவித்துள்ளது.
மேலும், ஸ்கூட்டர்கள் அதன் சேவை பொறியாளர்களால் பரிசோதிக்கப்படும் என்றும், அனைத்து பேட்டரி, தெர்மல் மற்றும் பாதுகாப்பு அமைப்புகளிலும் முழுமையான கண்டறியும் சோதனைக்கு உட்படுத்தப்படும் என்றும் ஓலா எலக்ட்ரிக் தெரிவித்துள்ளது. ஐரோப்பிய தரநிலை ECE 136 உடன் இணங்குவதைத் தவிர, இந்தியாவில் சமீபத்திய முன்மொழியப்பட்ட தரமான AIS 156 க்கு ஏற்கனவே அதன் பேட்டரி பேக் இணங்குகிறது மற்றும் சோதிக்கப்பட்டது என்று நிறுவனம் கூறியது.
எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்கள் தீப்பற்றிய எத்தனை நிகழ்வுகள் பதிவாகியுள்ளன?
கடந்த சில வாரங்களில், Ola Electric, Okinawa, Pure EV மற்றும் Jitendra EV ஆகியவற்றால் தயாரிக்கப்பட்டவை உட்பட, ஒரு டஜன் எலக்ட்ரிக் ஸ்கூட்டர்கள் தீப்பிடித்துள்ளன. கடந்த மாதம் ஓலா ஸ்கூட்டருடன் நடந்த சம்பவத்தைத் தவிர, ஒகினாவா ஒன்றும் தீப்பிடித்து, ஒரு ஆண் மற்றும் அவரது 13 வயது மகளின் உயிர் பறிபோனது.
இதையும் படியுங்கள்: ஒட்டுக்கேட்பதை நிர்வகிக்கும் சட்டங்கள் என்ன? அதன் நடைமுறை தெரியுமா?
இந்த மாத தொடக்கத்தில், நாசிக்கில் உள்ள நிறுவனத்தின் தொழிற்சாலையிலிருந்து ஜிதேந்திரா EV தயாரித்த 20க்கும் மேற்பட்ட மின்சார ஸ்கூட்டர்கள் தீப்பிடித்து எரிந்தது. தெலுங்கானா மாநிலம் நிஜாமாபாத்தில் புதனன்று, ப்யூர் ஈவியால் தயாரிக்கப்பட்ட எலக்ட்ரிக் ஸ்கூட்டர் பேட்டரி வெடித்து தீப்பிடித்து 80 வயது முதியவரின் உயிரைப் பறித்தது.
மற்ற எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் தயாரிப்பாளர்கள் திரும்ப பெறுகிறார்களா?
தீ விபத்திற்கான காரணங்களை ஆராய்ந்து வருவதாக அந்நிறுவனங்கள் தெரிவித்துள்ளன. Pure EV ஆனது அதன் 2,000 மின்சார ஸ்கூட்டர்களை திரும்பப் பெறத் தொடங்கியுள்ளது, அதே நேரத்தில் Okinawa 3,000 க்கும் அதிகமான ஸ்கூட்டர்களை பாதுகாப்பு சிக்கல்கள் காரணமாக திரும்பப் பெறுவதாக அறிவித்துள்ளது.
அரசாங்கத்தின் நடவடிக்கைகள் என்ன?
இந்த வார தொடக்கத்தில், EV தயாரிப்பாளர்கள் தங்கள் செயல்பாட்டில் அலட்சியமாக இருப்பது கண்டறியப்பட்டால், அரசாங்கம் கடுமையான அபராதம் விதிக்கும் மற்றும் அவர்களின் குறைபாடுள்ள EVகள் அனைத்தையும் திரும்பப் பெற உத்தரவிடப்படும் என்று அமைச்சர் நிதின் கட்கரி கூறினார். EVகளுக்கான தரத்தை மையமாகக் கொண்ட வழிகாட்டுதல்களிலும் அரசாங்கம் செயல்பட்டு வருகிறது, இது விரைவில் வெளியிடப்படும் என்றும் அமைச்சர் கூறினார்.
அதற்கு முன்னதாக, சாலைப் போக்குவரத்து அமைச்சகம் இந்த சம்பவங்கள் குறித்து விசாரணை நடத்த உத்தரவிட்டது மற்றும் தீ வெடிப்பு மற்றும் சுற்றுச்சூழல் பாதுகாப்பு மையத்தை இந்தச் சம்பவங்கள் தொடர்பாக விசாரித்து தீர்வு நடவடிக்கைகளை பரிந்துரைக்க உத்தரவிட்டது.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.