பனிப் பாலைவனம் ஸ்பிட்டியில் காணப்பட்ட அரிய வகை விலங்கு!

விலங்கின் நடமாட்டத்தை அறிந்து கொள்ள முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மேலும் இந்த விலங்கை நாய்களிடம் இருந்து பாதுகாக்க வேண்டிய சூழலும் உருவாகியுள்ளது.

Govt open to talks but not to repeal of laws; farmers hold a hunger strike

 Gagandeep Singh Dhillon

An unusual sighting in the Spiti cold desert : இமயமலை பகுதியின் குளிர் பாலைவனப்பகுதியில் முதன்முறையாக ஹிமாலயன் சீரோ (Himalayan serow) விலங்கு கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

ஹிமாலயன் சீரோ என்றால் என்ன?

ஆராய்ச்சியாளர்கள் இந்த விலங்கு ஆடு, கழுதை, மாடு மற்றும் பன்றியின் கலப்பினமாக குறிப்பிடுகிறார்கள். மத்திய உடல் அமைப்புடன் காணப்படும் இந்த பாலுட்டிக்கு பெரிய தலையும், வலிமையான கழுத்தும், குட்டைக் கால்களையும், அடர்த்தியான ரோமங்களுடனும் காணப்படுகிறது.

பல்வேறு வகையான சீரோக்கள் காணப்படுகிறது. அவை அனைத்தும் ஆசியாவில் தான் உள்ளன. இந்த ஹிமாலயன் சீரோ அல்லது Capricornis sumatraensis thar இமயமலைப் பகுதிகளில் மட்டுமே காணப்படுகிறது. நாட்டுப்புறங்களில் வசிக்கும் சீரோவின் (Capricornis sumatraensis) இனத்தின் துணைப்பிரிவாக இந்த சீரோக்கள் காணப்படுகிறது.

2000 மீட்டர் முதல் 4000 மீட்டர் வரையிலான உயரத்தில் காணப்படும் இந்த சீரோக்கள் தாவர உண்ணிகள் ஆகும். இவை கிழக்கு, மத்திய மற்றும் மேற்கு இமயமலைப் பகுதிகளில் காணப்படும். ஆனால் ட்ரான்ஸ் ஹிமாலயன் பகுதிகளில் இவை காணப்படுவதில்லை.

இந்த சீரோ எங்கு பார்க்கப்பட்டது?

இமாச்சல் பிரதேசம் மாநிலத்தில் உள்ள ஸ்பிட்டி, ஹர்லிங் கிராமத்தில் அமைந்திருக்கும் ஆற்றங்கரையோரம் இந்த விலங்கினை உள்ளூர்வாசிகள் மற்றும் வனத்துறையினர் டிசம்பர் 11ம் தேதி கண்டனர். மீண்டும் டிசம்பர் 13ம் தேதி அதே இடத்தில் இந்த விலங்கினை கண்டுள்ளனர். இமாச்சல் பிரதேசத்தில் சீரோவை மனிதர்கள் பார்ப்பது இதுவே முதல்முறை. இதற்கு முன்பும் இந்த விலங்கின் நடமாட்டம் உறுதி செய்யப்பட்டது. ஆனால் அவை கேமராக்களில் மட்டுமே பதிவான காட்சிகளாக இருந்தது.

சீரோவின் இந்த வருகை ஏன் நடைமுறைக்கு மாறாக இருப்பதாக உணரப்படுகிறது?

மேற்கு இமயமலை தொடர்களில் உள்ள பனி பாலைவனப்பகுதிகளில் அமைந்துள்ளது இமயமலை. கடல்மட்டத்தில் இருந்து சுமார் 4,270 மீட்டர் உயரத்தில் இந்த பகுதி அமைந்துள்ளது. சீரோக்கள் இந்த உயரத்தில் வாழ்வதில்லை. இதுநாள் வரையில் ஒரு சீரோ கூட இந்த இமயமலை பனிப்பாலை வனத்தில் இருந்ததில்லை. ரூப்பி பாபா வனவிலங்கு சரணாலயத்தில் இருந்து இந்த விலங்கு மட்டும் இங்கே வந்திருக்கலாம் என்று வனத்துறையினர் கருதுகின்றனர்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil

குல்லுவில் அமைந்திருக்கும் கிரேட் ஹிமாலயன் தேசிய பூங்காவின் இயக்குநர் அஜித் தாக்கூர் இந்த விலங்கை இங்கு பார்த்தையும் அதனை மிகவும் குறைவான இடைவெளியில் புகைப்படம் எடுத்ததையும் வியந்து கூறுகிறார். இந்த விலங்கு யார் கையிலும் சிக்கிக் கொள்ளாத ஒன்றாகும். சிலர் இதற்கு முன்பு பிடிக்க முயற்சி செய்துள்ளனர். கடந்த 12 ஆண்டுகளாக தேசிய பூங்காவில் இந்த விலங்கின் நடமாட்டத்தை அறிய முயன்றிருக்கின்றோம். இறுதியாக இரண்டு முறை திர்த்தான் பள்ளத்தாக்கில் பொருத்தப்பட்டிருக்கும் கேமராவில் இந்த விலங்கின் புகைப்படங்கள் கிடைத்திருக்கிறது என்று அவர் கூறினார்.  ரூபி பாபா வனவிலங்கு சரணலாயத்திலும், சம்பா சிகரத்தின் உயரத்திலும் இந்த இந்த விலங்குகளை பொதுமக்கள் பார்வையிட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க : எந்த தேசிய பூங்காவிலும் இல்லாத சிறப்பு வசதி கஸிரங்காவில்!

சீரோ அழிந்து வரும் உயிரினமா?

இயற்கை பாதுகாப்பிற்கான சர்வதேச ஒன்றியத்தின் (International Union for Conservation of Nature (IUCN) படி, இந்த விலங்குகளின் எண்ணிக்கை சமீப காலத்தில் குறைந்து வருகிறது என்றும் தீவிரமான மனித தாக்கங்களால் இவை நடைபெறுகிறது என்றும் கூறப்பட்டுள்ளது.

இதற்கு முன்பு ‘near threatened’ என்ற பட்டியலில் இருந்த இந்த விலங்கினம் தற்போது ‘vulnerable’ என்ற பட்டியலில் இடம் பெற்றுள்ளது. இது வனவிலங்கு பாதுகாப்பு சட்டம், 1972 இன் அட்டவணை I இன் கீழ் பட்டியலிடப்பட்டுள்ளது, இது முழுமையான பாதுகாப்பை வழங்குகிறது.

ஸ்பிட்டியில் அமைந்திருக்கும் சீரோவை என்ன செய்வார்கள்?

அந்த வனக்கோட்ட அதிகாரி ஹர்தேவ் நெகி கூறுகையில், இந்த விலங்கின் நடமாட்டத்தை அறிந்து கொள்ள முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மேலும் இந்த விலங்கை நாய்களிடம் இருந்து பாதுகாக்க வேண்டிய சூழலும் உருவாகியுள்ளது என்றார். இந்த சீரோக்கள் தனிமையாக வாழும் பழக்கம் கொண்டவை. இதனை இரண்டு முறை மக்கள் கண்டிருந்தாலும் கூட மீட்பு நோக்கங்களுக்காக இதனை பிடிக்க இயலாது. நம்மிடம் இருந்து தப்பிச் செல்லும் அளவிற்கு புத்திசாலியானவை இந்த விலங்கு என்றார் அவர்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil

Get the latest Tamil news and Explained news here. You can also read all the Explained news by following us on Twitter, Facebook and Telegram.

Web Title: Explaining an unusual sighting in the spiti cold desert

Next Story
உங்கள் தூக்கத்தை சீர்குலைக்கும் உணவுகள் எவை? ஆய்வுகள் சொல்வது என்ன?How food habits affect Sleep explained in Tamil
The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com
Best of Express