Advertisment

பீகார் தேர்தல் உணர்த்தும் 5 முக்கிய அம்சங்கள் என்னென்ன?

மோடி மறுபடியும் தனது கட்சியை மீண்டும் தேர்ந்தெடுப்பதில் மட்டுமல்லாமல், அதன் செயல்திறனை மேம்படுத்துவதிலும் வெற்றி பெற்றுள்ளார்.

author-image
WebDesk
New Update
Five main takeaways from the Bihar election results

Five main takeaways from the Bihar election results :  ஸ்டடீஸ் ஆஃப் இந்தியன் பாலிடிக்ஸின் ஆசிரியர் சுஹாஸ் பல்ஷிகார், சமீபத்தில் நடைபெற்று முடிந்த பீகார் தேர்தல் மற்றும் அதன் முடிவுகள் குறித்த 5 முக்கிய அம்சங்களை தன்னுடைய கட்டுரையில் குறிப்பிட்டுள்ளார்.

Advertisment

முதலில், பாஜகவின் தேர்தல் அரசியலில் மோடியின் புகழ் இன்னும் நிலையான காரணியாக உள்ளது. அந்த அளவிற்கு அவர் ப்ராண்டாகவே மாறிவிட்டார். ஒரு ப்ராண்டை போன்று எந்த ஒரு மாநிலத்திலும், எந்த ஒரு சூழலிலும், எந்த போட்டியிலும் அவரை பயன்படுத்திக் கொள்ள முடியும். பாஜகவிற்கு இது சிறந்த செய்தியாக பட்டாலும் கூட, இது கட்சியின் முக்கிய மூலோபயவாதிகளை கவலைப்பட வைத்துள்ளது.

இந்த கட்டுரையை ஆங்கிலத்தில் படிக்க

மோடி தோல்வியுற்றால் பாஜகவின் தேர்தல் அரசியல் நொறுங்கிவிடும். தவிர, கட்சிக்கு இன்னும் தீவிரமான அளவில் சேதாரங்கள் ஏற்படலாம். மோடி, நடைமுறையில் அனைத்தையும் பிரதிநிதித்துவப்படுத்துகிறார். எனவே இறுதியில் எதுவும் இல்லை என்று சுஹாஸ் குறிப்பிட்டுள்ளார்.

இரண்டாவது : பீகார் கூட்டணி கட்சிகளின் நன்மை மற்றும் பதட்டத்தை வெளிப்படுத்தியது. பாஜகவிற்கு கூட்டணி கட்சிகள் தற்காலிக தந்திரம் ஆனால் பாஜக அல்லாத கட்சிகளுக்கு அது வாழ்வு ஆதரவு. நிதீஷ் குமாருக்கான ஆதரவு குறைவாக இருந்த போதிலும், பாஜக அந்த சோதனையை தவிர்க்க இந்த கூட்டணியை தொடர்ந்தது. தற்போது நிதீஷ் எங்கே நிற்கிறார் என்பது வெட்ட வெளிச்சமாகியுள்ளது. பாஜக மற்றும் ஜனதா தளம் கட்சிக்கு இடையேயான உறவை நாம் பொறுத்திருந்து பார்க்க வேண்டும்.

மேலும் படிக்க : பீகார் தேர்தல் : சறுக்கிய காங்கிரஸ்…பாஜவுக்கு எதிராக மீண்டும் தோல்வி முகம்!

மூன்றாவது :  தத்துவார்த்த தேவைகள் மற்றும் அரசியல் நல்லொழுக்கம் என்பதான கூட்டணிகள் பற்றி இது கிடையாது. இது மாறாக, வெற்றி பெற்ற மாநிலங்கள் குறித்தது. பீகார், வடக்கிற்கும் கிழக்கிற்கும் இடையேயான இணைக்கும் புள்ளி. பிராந்திய லட்சியத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் மாநிலம். நிதீஷ் குமார் ஓரங்கட்டப்பட வேண்டும் என்று பாஜக நினைத்தால், தற்போது பாஜக நேரடியாக தோற்கடிக்க ஒரு போட்டியாளரை கொண்டுள்ளது. ஆர்.ஜே.டி. இந்த அடிப்படையில், 2017ம் ஆண்டு மகாகத்பந்தன் கூட்டணியில் இருந்து நிதீஷ் குமாரை பிரித்தது, பாஜகவிற்கு அதிகாரத்தில் இருப்பதன் முக்கியத்துவம் புரிந்திருக்கும் என்கிறார் பல்ஷிகர்

நான்காவது ; பார்வையாளர்களை வேதனைக்கு உள்ளாக்கும் கேள்வி. மாநில அரசியலின் தேர்தல் தன்மைக்கு ஏற்ற வகையில் பாஜக தன்னுடைய இந்துத்துவ சித்தாந்தங்களை தக்கவைத்துக் கொள்வதற்கான முயற்சிகள். இதுவரையில், பாஜக உள்ளூர் பிரச்சனைகள் மற்றும் விவரிப்புகளை ஒத்திவைக்க இயலவில்லை. இந்துத்துவ இந்தியா என்ற கொள்கையை, பாஜக இந்தியாவின் பெரும்பான்மை பகுதிகளை அடைந்த பின்பு தான் நிறைவேற்ற முடியும்.

இறுதியாக , மீண்டும் பீகாரில் தேசிய ஜனநாயக கூட்டணியின் வெற்றி அல்லது இழப்பைக் குறிப்பிடாமல், மாநிலத்தில் தேர்தல்கள் மற்றும் கட்சியின் செயல்திறன் ஆகியவை பாஜகவின் எதிர்கால ஆதிக்கம் குறித்து தொடர்ந்து சந்தேகம் கொண்ட ஆய்வாளர்களை நம்ப வைக்க வேண்டும் . மோடி மறுபடியும் தனது கட்சியை மீண்டும் தேர்ந்தெடுப்பதில் மட்டுமல்லாமல், அதன் செயல்திறனை மேம்படுத்துவதிலும் வெற்றி பெற்றுள்ளார்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil

Bihar
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment