நாட்டில் சட்ட நடைமுறையின் நிலப்பரப்பை மாற்றக்கூடிய ஒரு நடவடிக்கையாக, இந்திய பார் கவுன்சில் (BCI) வெளிநாட்டு வழக்கறிஞர்கள் மற்றும் சட்ட நிறுவனங்களை இந்தியாவில் பயிற்சி செய்ய அனுமதித்துள்ளது. அவர்கள் நீதிமன்றத்தில் ஆஜராக முடியாவிட்டாலும், அவர்கள் வாடிக்கையாளர்களுக்கு வெளிநாட்டு சட்டம் மற்றும் கார்ப்பரேட் பரிவர்த்தனைகளில் பணியாற்றலாம்.
பார் கவுன்சிலின் முடிவு என்ன?
மார்ச் 13 அன்று, இந்தியாவில் வெளிநாட்டு வழக்கறிஞர்கள் மற்றும் வெளிநாட்டு சட்ட நிறுவனங்களின் பதிவு மற்றும் ஒழுங்குமுறைக்கான விதிகள், 2022ஐ அதிகாரப்பூர்வ அரசிதழில் பார் கவுன்சில் அறிவித்தது.
இதையும் படியுங்கள்: ஊழல் வழக்கில் கர்நாடக பா.ஜ.க எம்.எல்.ஏ-வுக்கு வழங்கப்பட்ட முன்ஜாமீன் விவரம் என்ன?
பார் கவுன்சில் என்பது வழக்கறிஞர்கள் சட்டம், 1961 இன் கீழ் நிறுவப்பட்ட ஒரு சட்டப்பூர்வ அமைப்பாகும், மேலும் இது இந்தியாவில் சட்ட நடைமுறை மற்றும் சட்டக் கல்வியை ஒழுங்குபடுத்துகிறது. ஒரு தசாப்தத்திற்கும் மேலாக, இந்தியாவில் வெளிநாட்டு சட்ட நிறுவனங்களை அனுமதிப்பதை பார் கவுன்சில் எதிர்த்து வந்தது.
இப்போது, பார் கவுன்சில் அதன் நடவடிக்கையை, நாட்டில் அன்னிய நேரடி முதலீட்டின் ஓட்டம் குறித்த கவலைகளை நிவர்த்தி செய்து, இந்தியாவை சர்வதேச வர்த்தக நடுவர் மையமாக மாற்றும் என்று நியாயப்படுத்தியுள்ளது. இந்தியாவில் தற்போது மிகக் குறைந்த அளவில் செயல்படும் வெளிநாட்டு சட்ட நிறுவனங்களுக்கு இந்த விதிகள் சட்டத் தெளிவைக் கொண்டுவருகின்றன.
பொருள்கள் மற்றும் காரணங்களின் ஒரு நீண்ட அறிக்கையில், “வெளிநாட்டு வழக்கறிஞர்கள் மற்றும் வெளிநாட்டு சட்ட நிறுவனங்கள் வெளிநாட்டு சட்டம் மற்றும் பல்வேறு சர்வதேச சட்டம் மற்றும் சர்வதேச நடுவர் விவகாரங்களை இந்தியாவில் பரஸ்பர கொள்கையின் அடிப்படையில் நன்கு வரையறுக்கப்பட்ட, ஒழுங்குபடுத்தப்பட்ட மற்றும் கட்டுப்படுத்தப்பட்ட முறையில் நடைமுறைப்படுத்த இந்த விதிகளை செயல்படுத்த முடிவு செய்துள்ளதாக பார் கவுன்சில் கூறியது.”
புதிய விதிகள் எதை அனுமதிக்கின்றன?
வக்கீல்கள் சட்டத்தின்படி, பார் கவுன்சிலில் பதிவுசெய்யப்பட்ட வழக்கறிஞர்கள் மட்டுமே இந்தியாவில் வழக்கறிஞராக பணியாற்ற தகுதியுடையவர்கள். வழக்காடுபவர் போன்ற மற்ற அனைவரும், நீதிமன்றம், அதிகார அமைப்பு அல்லது விசாரணை நிலுவையில் உள்ள நபரின் அனுமதியுடன் மட்டுமே ஆஜராக முடியும்.
தற்போதைய அறிவிப்பு அடிப்படையில் வெளிநாட்டு வழக்கறிஞர்கள் மற்றும் சட்ட நிறுவனங்கள் தங்கள் சொந்த நாடுகளில் சட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கான உரிமையிருந்தால், இந்தியாவில் பயிற்சி செய்ய பார் கவுன்சிலில் பதிவு செய்ய அனுமதிக்கிறது. எனினும், அவர்களால் இந்திய சட்டத்தை நடைமுறைப்படுத்த முடியாது.
“வெளிநாட்டு வழக்கறிஞர்கள் அல்லது வெளிநாட்டு சட்ட நிறுவனங்கள் இந்திய நீதிமன்றங்கள், தீர்ப்பாயங்கள் அல்லது பிற சட்டப்பூர்வ அல்லது ஒழுங்குமுறை அதிகாரிகளின் முன் ஆஜராக அனுமதிக்கப்பட மாட்டார்கள்.”
கூட்டு முயற்சிகள், இணைப்புகள் மற்றும் கையகப்படுத்துதல்கள், அறிவுசார் சொத்து விவகாரங்கள், ஒப்பந்தங்களின் வரைவு மற்றும் பிற தொடர்புடைய விஷயங்கள் போன்ற பரிவர்த்தனை வேலை/ கார்ப்பரேட் வேலைகளை பரஸ்பர அடிப்படையில் பயிற்சி செய்ய அவர்கள் அனுமதிக்கப்படுவார்கள்.
அவர்கள் சொத்து பரிமாற்றம், உரிமையியல் விசாரணை அல்லது பிற ஒத்த வேலைகள் தொடர்பான எந்த வேலையிலும் ஈடுபடவோ அல்லது செய்யவோ அனுமதிக்கப்பட மாட்டார்கள் என்று அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது.
வெளிநாட்டு சட்ட நிறுவனங்களுடன் பணிபுரியும் இந்திய வழக்கறிஞர்களும் “வழக்கு அல்லாத நடைமுறையில்” மட்டுமே ஈடுபடும் அதே கட்டுப்பாடுகளுக்கு உட்பட்டுள்ளனர்.
வெளிநாட்டு சட்ட நிறுவனங்கள் இதுவரை எவ்வாறு இயங்கின?
வெளிநாட்டு சட்ட நிறுவனங்கள் இந்திய சந்தையில் நுழைவது தொடர்பான பிரச்சனை 2009 இல் பம்பாய் உயர் நீதிமன்றத்தில் ஒரு சவாலுடன் நீதிமன்றத்திற்கு வந்தது. ‘வக்கீல்கள் கூட்டமைப்பு எதிர் யூனியன் ஆஃப் இந்தியா’ வழக்கில், பம்பாய் உயர்நீதிமன்றம் அடிப்படையில் இந்திய சட்டப் பட்டம் பெற்ற இந்தியர்கள் மட்டுமே இந்தியாவில் வழக்கறிஞர் பயிற்சி செய்ய முடியும் என்று கூறியது.
வழக்கறிஞர்கள் சட்டத்தின் பிரிவு 29 ஐ உயர் நீதிமன்றம் விளக்கியது, இது பார் கவுன்சிலில் பதிவுசெய்யப்பட்ட வக்கீல்கள் மட்டுமே சட்டத்தை நடைமுறைப்படுத்த முடியும் என்று கூறுகிறது. ‘நடைமுறை’ என்பது வழக்கு மற்றும் வழக்கு அல்லாத நடைமுறைகளை உள்ளடக்கும் என்றும் உயர் நீதிமன்றம் கூறியது, எனவே வெளிநாட்டு நிறுவனங்கள் இந்தியாவில் உள்ள தங்கள் வாடிக்கையாளர்களுக்கு ஆலோசனை வழங்கவோ அல்லது நீதிமன்றத்தில் ஆஜராகவோ முடியாது.
2012ல், ‘ஏ.கே. பாலாஜி எதிர் யூனியன் ஆஃப் இந்தியா’ என்ற வழக்கில், சென்னை உயர் நீதிமன்றத்தில், இதுபோன்ற பிரச்னை வந்தது.
2015 இல், உச்ச நீதிமன்றம் ஒரு தீர்ப்பில் வெளிநாட்டு சட்ட நிறுவனங்களின் நடைமுறையை மிகவும் குறுகிய அர்த்தத்தில் அங்கீகரித்தது. வக்கீல்கள் சட்டம் மற்றும் பார் கவுன்சில் விதிகள் வகுத்துள்ள தேவைகள் மற்றும் விதிகளை பூர்த்தி செய்யாத வரை, வெளிநாட்டு நிறுவனங்கள் வழக்கு அல்லது வழக்கு அல்லாத தரப்பில் பயிற்சி செய்ய முடியாது என்று ‘ஏ.கே. பாலாஜி எதிர் இந்திய அரசு’ வழக்கில் சென்னை உயர்நீதிமன்றம் கூறியது. இங்கிலாந்து, அமெரிக்கா, பிரான்ஸ் மற்றும் ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த 32 வெளிநாட்டு சட்ட நிறுவனங்கள் இந்த வழக்கில் பிரதிவாதிகளாக சேர்க்கப்பட்டன. ஆனால், சென்னை உயர்நீதிமன்றம் விதிவிலக்கு அளித்தது. “ஃப்ளை இன் அண்ட் ஃப்ளை அவுட்” (அவ்வப்போது வந்து செல்வது) அடிப்படையில் தற்காலிக வருகைகள் அல்லது வாடிக்கையாளர்களுக்கு ஆலோசனை வழங்குவதற்கு எந்த தடையும் இருக்காது என்று நீதிமன்றம் கூறியது.
“வெளிநாட்டு சட்ட நிறுவனங்கள் அல்லது வெளிநாட்டு வழக்கறிஞர்கள் இந்தியாவில் உள்ள தங்கள் வாடிக்கையாளர்களுக்கு வெளிநாட்டு சட்டம் அல்லது அவர்களின் சொந்த சட்ட அமைப்பு மற்றும் பல்வேறு சர்வதேச சட்ட சிக்கல்கள் குறித்து சட்ட ஆலோசனைகளை வழங்குவதற்காக, “ஃப்ளை இன் அண்ட் ஃப்ளை அவுட்” என்ற அடிப்படையில் ஒரு தற்காலிக காலத்திற்கு இந்தியாவிற்கு வருவதற்கு சட்டம் அல்லது விதிகளில் எந்த தடையும் இல்லை. மேலும், மத்தியஸ்தம் மற்றும் சமரசச் சட்டம், 1996 இல் அறிமுகப்படுத்தப்பட்ட சர்வதேச வணிக நடுவர் மன்றத்தின் கருத்து மற்றும் நோக்கத்தைக் கருத்தில் கொண்டு, வெளிநாட்டு வழக்கறிஞர்கள் இந்தியாவிற்கு வந்து சர்வதேச வர்த்தகம் தொடர்பான ஒப்பந்தத்தால் எழும் சர்ச்சைகள் தொடர்பாக நடுவர் மன்றம் நடவடிக்கைகளை நடத்துவதைத் தடுக்க முடியாது,” என்று உயர் நீதிமன்றம் கூறியது.
2012 வாக்கில், பிசினஸ் பிராசஸ் அவுட்சோர்சிங் (BPOs) பெரிய அளவில் இந்தியாவிற்கு வந்து அமெரிக்காவை தளமாகக் கொண்ட நிறுவனங்களுக்கு பின்தளத்தில் வேலை செய்தது. சட்டத் தொழிலில், இந்த நிறுவனங்கள், சட்ட செயல்முறை அவுட்சோர்சிங் (LPOs), வழக்கறிஞர்களுக்கான ஆதரவு நடவடிக்கைகளை மேற்கொண்டன. அவை நிச்சயமற்ற சட்டக் கட்டமைப்பில் செயல்பட்டன, மேலும் இந்தப் பிரச்சினையில் சட்டத்தைத் தீர்ப்பதற்கு உச்ச நீதிமன்றம் தலையிட வேண்டியிருந்தது.
உச்ச நீதிமன்றத்தின் முடிவு என்ன?
சென்னை மற்றும் பம்பாய் உயர் நீதிமன்றத் தீர்ப்புகள் இரண்டையும் முறையே பார் கவுன்சில் மற்றும் வக்கீல் கூட்டமைப்பு ஆகியவை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தன. 2018 ஆம் ஆண்டில், உச்ச நீதிமன்றம் வெளிநாட்டு சட்ட நிறுவனங்கள் மற்றும் வழக்கறிஞர்களை அனுமதிக்காத உயர் நீதிமன்றத் தீர்ப்புகள் இரண்டையும், “அவ்வப்போது வந்துச் செல்லுங்கள்” என்ற சொற்றொடரை “சாதாரண வருகை நடைமுறைக்கு அல்ல,” என்பது போன்ற சில மாற்றங்களுடன் உறுதி செய்தது.
இதன் பொருள் “அவ்வப்போது வந்துச் செல்வது” வழக்கமான வருகைகளைக் குறிக்காது. LPOக்கள் பிரச்சினையில், அவர்களின் தலைவிதியை உச்ச நீதிமன்றம் முடிவு செய்யவில்லை. அவர்கள் முக்கியமாக செயலக ஆதரவு, டிரான்ஸ்கிரிப்ஷன் சேவைகள், சரிபார்த்தல் சேவைகள், பயண மேசை ஆதரவு சேவைகள் போன்றவற்றை நிர்வகிக்கும் BPOக்கள் என்று அவர்கள் வாதிட்டனர். இவை தொழில்நுட்ப ரீதியாக வழக்கறிஞர்கள் சட்டம் அல்லது பார் கவுன்சிலின் விதிகளின் வரம்பிற்குள் வரவில்லை.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil