படிம எரிபொருள் காற்று மாசுபாடு: ஆண்டுக்கு 4.5 மில்லியன் இறப்புகள்
இந்தியாவில் கணக்கிடப்பட்டுள்ள 350,000 புதிய 'குழந்தை ஆஸ்துமா' பாதிப்புகள், நைட்ரஜன் டை ஆக்சைடால் ஏற்பட்டிருப்பதாக அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது
இந்தியாவில் கணக்கிடப்பட்டுள்ள 350,000 புதிய 'குழந்தை ஆஸ்துமா' பாதிப்புகள், நைட்ரஜன் டை ஆக்சைடால் ஏற்பட்டிருப்பதாக அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது
Fossil fuel air pollution cost $8 billion per day, 4.5 million deaths per year
அரசு சாரா அமைப்பான 'கிரீன்பீஸ்' வெளியிட்டிருக்கும் புதிய அறிக்கையின்படி, படிம எரிபொருட்களால் ஏற்படும் காற்று மாசுக்கான உலகளாவிய செலவு ஆண்டுக்கு சுமார் 9 2.9 டிரில்லியன் அல்லது ஒரு நாளைக்கு 8 பில்லியன் டாலர் என்று இருப்பதாக மதிப்பிட்டுள்ளது. இது உலகின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 3.3% ஆகும்.
Advertisment
'கமிட்டட்'கள் மிஸ் பண்ணாம பாக்க வேண்டிய 10 தமிழ் படங்கள்!
இந்தியாவில் 150 பில்லியன் டாலர் அல்லது நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 5.4% செலவாகும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது, இது உலகளவில் படிம எரிபொருள் காற்று மாசுபாட்டிலிருந்து மூன்றாவது மிக உயர்ந்த முழுமையான செலவாகும்.
Advertisment
Advertisements
சீனா, அமெரிக்காவில், படிம எரிபொருள் காற்று மாசுபாட்டினால் முறையே 900 பில்லியன் டாலர் மற்றும் 600 பில்லியன் டாலர் செலவாகும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது.
உலகளவில், ஒவ்வொரு ஆண்டும் 4.5 மில்லியன் அகால மரணங்களை காற்று மாசுபாடு ஏற்படுத்தும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது. டெல்லி உள்ளிட்ட வட இந்திய நகரங்களில் காற்று மாசு PM2.5 நிலவியது உட்பட உலகளவில் 3 மில்லியன் இறப்புகள் இதில் அடங்கும்.
உலகளவில், 62.7 மில்லியன் (6.27 கோடி) உயிர் இழப்புக்கு PM2.5 காரணமாகியுள்ளது. அதுமட்டுமின்றி, இதனால் 2.7 மில்லியன் மக்கள் ஆஸ்துமாவால் பாதிக்கப்பட்டிருக்கலாம் என்றும், 2 மில்லியன் குறைப்பிரசவங்கள் நிகழ்ந்திருக்கலாம் என்றும், 1.75 பில்லியன் வேலையின்மையை ஏற்படுத்தியிருக்கலாம் என்று மதிப்பிடப்பட்டுள்ளது. அந்த 2 மில்லியன் குறைப்பிரசவங்களில் இந்தியாவில் 981,000 மற்றும் சீனாவில் 350,000 க்கும் அதிகமானோர் உள்ளனர்.
கூடுதலாக, இந்தியாவில் கணக்கிடப்பட்டுள்ள 350,000 புதிய 'குழந்தை ஆஸ்துமா' பாதிப்புகள், நைட்ரஜன் டை ஆக்சைடால் ஏற்பட்டிருப்பதாக அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது படிம எரிபொருள் தயாரிப்பின் துணை பொருளாகும். இதன் விளைவாக, இந்தியாவில் மேலும் 1.28 மில்லியனுக்கும் அதிகமான குழந்தைகள் ஆஸ்துமாவுடன் வாழ்கின்றனர் என்றும், இது படிம எரிபொருள் மாசுபாட்டால் ஏற்பட்டவை என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்தியாவில், படிம எரிபொருட்களின் வெளிப்பாடு சுமார் 490 மில்லியன் வேலை நாட்களின் இழப்புக்கு வழிவகுக்கிறது என்று அறிக்கை தெரிவித்துள்ளது.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil "
காற்று மாசுபாட்டைக் கட்டுப்படுத்துவதற்கான பல தீர்வுகளில், உலகளாவிய வெப்பநிலை 1.5 டிகிரி செல்சியஸ் க்கு மேல் அதிகரிப்பதைக் கட்டுப்படுத்துவதும் ஒன்று என குறிப்பிட்டுள்ளது.