வெப்பமயமாதலை தடுக்க ஒரு ட்ரில்லியன் மரம் நட வேண்டும்! ஆனால் அதற்கு நிலம் எங்கே?

ஆராய்ச்சியாளர்கள் தற்போது உலகின் எந்தெந்த மூலையில் எவ்வளவு நிலம் இருக்கிறது. அங்கு காடுகளை உருவாக்க இயலுமா என்ற ஆராய்ச்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.

Kabir Firaque

Global warming forest restoration : நாளுக்கு நாள் அதிகரித்துவரும் காலநிலை மாற்றத்தால் பெரும் அளவிற்கு சேதங்களை சந்தித்து வருகிறது உலகம். 2050ம் ஆண்டுக்குள் உலகத்தின் சராசரி வெப்பநிலையானது 1.5 டிகிரி செல்சியஸாக உயர்ந்துவிடும் என்று அறிவிக்கப்பட்ட நிலையில், 1 பில்லியன் ஹெக்டர் அளவுக்கு காடுகளை அதிகப்படுத்தினால் மட்டுமே இந்த வெப்பநிலை உயர்வை குறைக்க இயலும் என்று இண்டெர்கவர்ன்மெண்டல் பேனல் ( Intergovernmental Panel ) கூறியுள்ளது. தற்போது இருக்கும் உலகத்தின் கட்டமைப்பில் இந்த காடுகளை உருவாக்கும் பணியை எங்கே மேற்கொள்வது என்ற கேள்வி எழுந்து வருகிறது. இதற்கான பதில் இந்த கட்டுரையில்.

மேலும் படிக்க : உலக வெப்பமயமாதலால் இந்தியாவிற்கு இப்படியும் ஒரு பாதிப்பு வருமா?

ஆராய்ச்சியாளர்கள் தற்போது உலகின் எந்தெந்த மூலையில் எவ்வளவு நிலம் இருக்கிறது. அங்கு காடுகளை உருவாக்க இயலுமா என்ற ஆராய்ச்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.

கார்பன் டை ஆக்ஸைடின் தாக்கம் குறையும்

ஆராய்ச்சியாளர்கள் தற்போது உலகின் எந்தெந்த மூலையில் எவ்வளவு நிலம் இருக்கிறது. அங்கு காடுகளை உருவாக்க இயலுமா என்ற ஆராய்ச்சியில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் தொழிற்சாலைகள் முதற்கொண்டு பல்வேறு வகையில் வெளியேற்றப்படும் கார்பன் எமிஷன் கட்டுப்படுத்தப்படும். இதனால் நம்முடைய சுற்றுப்புறமும் சுத்தமாக இருக்கும். அமெரிக்க தேசிய கடல் மற்றும் சுற்றுப்புறவியல் அம்மைப்பு கூறுகையில் எரிபொருள்களினால் வெளியேற்றப்படும் கார்பன் டை ஆக்ஸைடின் 25%-த்தினை மரங்கள் உட்கொள்கின்றன. மற்றொரு 25% கடலால் உள்வாங்கிக் கொள்ளாப்படுகிறது. மீதம் இருக்கும் 50% கார்பன் டை ஆக்ஸ்டைடு தான் உலக வெப்பமயமாதலுக்கு காரணமாக அமைக்கிறது. காடுகளின் எண்ணிக்கை அதிகரிக்கத் துவங்கினால் இந்த நிலை முற்றிலுமாக மாறுபடும்.

Crowther Lab of ETH Zurich university – ஆராய்ச்சி முடிவுகள்

சுவிட்சர்லாந்து நாட்டில் உள்ள ஜூரிச்சில் அமைந்திருக்கிறது ஈ.டி.எச். பல்கலைக்கலத்தின் க்ரௌத்தர் லேப் (Crowther Lab of ETH Zurich university). இந்த லேப் சமீபத்தில் உலகின் 80000 இடங்களை அடிப்படையாக கொண்டு ஒரு முடிவு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில் 0.9 பில்லியன் ஹெக்டேர் நிலப்பரப்பில் காடுகளை மீள் உருவாக்கம் செய்ய இயலும் என்று குறிப்பிட்டுள்ளனர். க்ரௌத்தர் லேப்பின் நிறுவனர் மற்றும் இந்த ஆராய்ச்சிக் கட்டுரையை வெளியிட்டவருமான தாமஸ் க்ரௌத்தர் இந்தியன் எக்ஸ்பிரஸ் இதழுக்கு பதில் கூறுகையில் “இந்த 0.9 பில்லியன் ஹெக்டெர் பரப்புகளில் மரம் வளர்த்தால் மனிதனால் உருவாக்கப்படும் கார்பன் டை ஆக்ஸைடின் 3ல் இரண்டு பங்கினை உட்கிரகித்துக்கொள்ளும்” என்று கூறியுள்ளார்.

இந்த ஆராய்ச்சிக் கட்டுரையை எழுதிய மற்றொரு ஆராய்ச்சியாளர் ஜீன் – ஃபிரான்கோயிஸ் பாஸ்டின் கூறுகையில் “எங்களின் இந்த கணக்கானது, நகரங்கள் மற்றும் வேளாண் நிலம் நீங்களானது. ஏன் என்றால் காடுகளைப் போன்றே இந்த நிலங்களும் மக்களின் வாழ்விற்கு மிக முக்கியமான ஒன்றாகும்” என்று குறிப்பிட்டார்.

மேலும் படிக்க : இந்த கட்டுரையை முழுமையாக ஆங்கிலத்தில் படிக்க

தற்போது இருக்கும் காடுகளின் பரப்பு

இந்த உலகில் தற்போது காடுகளின் பரப்பானது 2.8 பில்லியன் ஹெக்டர்களாகும். நம்முடைய பூமியில் 4.4 பில்லியன் ஹெக்டர்கள் பரப்பில் காடுகளை உருவாக்க இயலும். அதாவது இன்னும் 1.6 பில்லியன் ஹெக்டர் பரப்பில் நம்மால் காடுகளை உருவாக்கிட இயலும். தற்போதைய கணக்கீட்டின் படி உலகின் 0.9 பில்லியன் ஹெக்டர்கள் பரப்பு மக்கள் பயன்பாட்டில் இல்லாமல் இருக்கிறது. அமெரிக்க ஐக்கிய நாடுகள் அளவிற்கு இருக்கும் இந்த பரப்பில் நம்மால் புதிய காடுகளை உருவாக்கிட இயலும்.

மேலும் படிக்க : வனவிலங்குகளின் எண்ணிக்கை பற்றியே கவலைப்பட்டோம். ஆனால் அவற்றிற்கான காடுகளின் பரப்பை கவனிக்க மறந்துவிட்டோம்.. 

இந்த நிலப்பரப்பில் முழுமையாக காடுகள் உருவாக்கப்பட்டால் 205 பில்லியன் டன் கார்பன் வெளியீட்டை இது உட்கிரகித்துக் கொள்ளும். மனித நடவடிக்கைகளாலும், தொழிற்சாலைகளின் வளர்ச்சிகளாலும் வெளியாகும் 300 பில்லியன் டன் கார்பனில் மூன்றில் இரண்டு பங்கு இதுவாகும். ஆனால் நாம் விரைவாக செயல்பட வேண்டும். ஒரு முழுமையான காட்டினை உருவாக்க நமக்கு பல ஆண்டுகள் தேவைப்படும் என்று கவலை கொள்கிறார் க்ரௌத்தர்.

0.9 பில்லன் ஹெக்டர்கள் எங்கே உள்ளன?

ரஷ்யாவில் 151 மில்லியன் ஹெக்டர் பரப்பும், அமெரிக்காவில் 103 மில்லியன் ஹெக்டர் பரப்பும், கனடாவில் 78.4 மில்லியன் ஹெக்டர் பரப்பும், ஆஸ்திரேலியாவில் 58 மில்லியன் ஹெக்டர் பரப்பும், ப்ரேசிலில் 49.7 மில்லியன் ஹெக்டர் பரப்பும், சீனாவில் 40.2 மில்லியன் ஹெக்டர் பரப்பு நிலமும் மனித பயன்பாடுகள் இன்றி இருக்கிறது. 2017ம் ஆண்டு வனத்துறை வெளியிட்ட அறிவிப்பின் படி இந்தியாவில் மட்டும் 9.93 மில்லியன் ஹெக்டர் பரப்பு உள்ளது.

இதனால் ஏற்படும் பிரச்சனைகள் & மாற்றுக் கருத்துகள்!

காடுகளின் மீள் உருவாக்கத்தால் ஏற்படும் பிரச்சனைகள் குறித்து ஆராய்ச்சியாளர்கள் சிந்திக்க மறந்துவிட்டனர் என்றும், இவர்கள் கூறியிருக்கும் 0.9 பில்லியன் ஹெக்டர் பரப்பானது அப்படியே யாருக்கும் சொந்தமில்லாமல் இருந்துவிடாது. இது தனியார் நிறுவனங்கள், தனி நபர்கள், நிறுவனங்கள், அரசுகள் என்று பலதரப்பில் இருந்தும் சொந்தம் கொள்ளப்பட்ட பரப்புகளாகும். இதில் காடுகளை உருவாக்குவது என்பது சர்ச்சையில் தான் போய் முடியும் என்று கூறியுள்ளார்.

இந்த ஆராய்ச்சியில் கூறப்பட்டிருக்கும் கார்பன் எமிசன் என்பது மிகவும் அதிகமானது.  காடுகளை மீள் உருவாக்கம் செய்வது குறித்து மட்டுமே இவர்களின் ஆராய்ச்சி இருக்கின்றதே தவிர, கார்பன் எமிஷனை எப்படி குறைப்பது என்பதை தெளிவுபடுத்த மறந்துவிட்டனர் என்று கூறுகிறார் கலிஃபோர்னியா யுனிவர்சிட்டியின் லீகல் ப்ளானட் அமைப்பின் உறுப்பினர் ஜெஸ்ஸி ரெனால்ட்ஸ்.

Get all the Latest Tamil News and Tamil Nadu News at Indian Express Tamil. You can also catch all the latest Tamil Explained News by following us on Twitter and Facebook

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com.
Just Now
X
×Close
×Close