மாநிலங்களுக்கான ஜிஎஸ்டி இழப்பீட்டுத் தொகையில் என்ன பிரச்சனை?

2019-20ஆம் ஆண்டிற்கான மொத்த இழப்பீட்டுத் தொகை ரூ. 1,65,302 கோடியை மாநில அரசுகளுக்கு வழங்கியது.

By: Updated: July 30, 2020, 02:20:02 PM

Aanchal Magazine

மத்திய அரசு சமீபத்தில் மார்ச் 2020க்கு ஜிஎஸ்டி இழப்பீடாக ரூ.13,806 கோடியை மாநில அரசுகளுக்கு வழங்கியுள்ளது. இதுகுறித்து வெளியான செய்திக் குறிப்பில், ”  இந்த தொகையைக் கணக்கில் எடுத்துக்கொண்டால், 2019-20 வரை முழு இழப்பீடும் மாநிலங்களுக்கு விடுவிக்கப்பட்டுள்ளது. 2019-20ஆம் ஆண்டிற்கான மொத்த இழப்பீட்டுத் தொகை ரூ. 1,65,302 கோடி ஆகும். 2019-20ஆம் ஆண்டில் சேகரிக்கப்பட்ட செஸ் வரித் தொகை ரூ. 95,444 கோடி ஆகும்” என்று தெரிவித்தது.

இதற்கிடையே, நிதி அமைச்சக அதிகாரிகள்  நாடாளுமன்ற நிதி நிலைக்குழுவிடம்,” வரும் காலங்களில் மாநிலங்களுக்கான ஜிஎஸ்டி இழப்பீட்டுத் தொகை வழங்குவதில் மத்திய அரசிடம் உள்ள இயலாமை” குறித்து விளக்கமளித்ததாக கூறப்படுகிறது.

” நிலுவையில் உள்ள நான்கு மாத இழப்பீட்டுத் தொகை மாநிலத்தின் இரண்டு மாத சம்பள பில்களுக்கு சமம் என்று பாஞ்சாப் மாநிலம் தெரிவித்தது. நிதி அமைச்சகத்தின்  அதிகாரிகளின் விளக்கம் “கூட்டாட்சி தத்துவத்திற்கு இழைக்கப்பட்ட துரோகம்” என்று கேரளா விவரித்துள்ளது. மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி இந்த வார தொடக்கத்தில், ஏப்ரல்- மே வரையில் ஜிஎஸ்டி இழப்பீடாக உள்ள ரூ.4,135 கோடியை வெளியிடுமாறு பிரதமர் நரேந்திர மோடிக்கு கடிதம் எழுதியிருந்தார்.

ஜி.எஸ்.டி இழப்பீடுத் தொகை  ஏன் பிரச்சனையாக உள்ளது?        

கடந்த ஆண்டு, அக்டோபர் மாதம் முதன் முதலாக, ஜி.எஸ்.டி இழப்பீட்டுத் தொகை ஒரு  பிரச்சனையாக உருவெடுத்தது. ஜிஎஸ்டி வருவாய் எதிர்பார்த்ததை விட குறைவானதால்,மாநிலங்களுக்கான இழப்பீட்டுத் தொகை வழங்குவது தாமதமாகின.  உலகளாவிய கொரோனா  பரவல் இந்திய பொருளாதாரத்தில் மந்த நிலையை ஏற்படுத்தியது. இதனால், மத்தியஅரசு தான்  திட்டமிட்டிருந்த  வருவாயை உறுதிபடுத்த முடியாத சூழல் உருவாகியது. உதாரணமாக, ஏப்ரல்-ஜூன் காலாண்டில் ஜி.எஸ்.டி வருவாய் 41% சரிவை சந்தித்ததாக கூறப்பட்டது.

மாநிலங்களின் வருவாய் இழப்புக்கான ஈட்டுத்தொகை கடந்த இரண்டு ஆண்டுகளாக உயர்த்தப்படாமல் இருக்கையில்,மாநிலங்களுக்கு இழப்பீடாக  நிர்ணயிக்கப்பட்ட 14 சதவீத உயர் வருவாய் வளர்ச்சி, பொருளாதார யதார்த்தங்களிலிருந்து பிரிக்கப்பட்டதாக கருதப்படுகிறது.

கட்டுரையை ஆங்கிலத்தில் படிக்க இங்கே கிளிக் செய்யவும்

உதாரணமாக, நடப்பு நிதியாண்டில், ஜூன் மாதத்திற்கான மாநில அரசின் ஜிஎஸ்டி (எஸ்.ஜிஎஸ்டி) வருவாய் ரூ .23,970 கோடியாக உள்ளது. மாநில அரசுகளுக்கான மாதாந்திர பாதுகாக்கப்பட்ட ( மாநிலங்களின் வளர்ச்சி விகிதம் 14% விகித அனுமானத்தில்) வருவாய் ரூ .63,706 கோடியாகும்.  அதாவது, மத்திய அரசுக்கு கிட்டத்தட்ட ஒரு மாதத்திற்கு 39,736 கோடி ரூபாய் வருவாய் பற்றாக்குறையை ஏற்படுகிறது.(மாநிலங்களுக்கு இடையேயான ஜிஎஸ்டி வரியை இங்கு கணக்கில் எடுத்துக் கொள்ளப்படவில்லை  (IGST). ஏப்ரல்-ஜூன் மாதங்களில் வருவாய் இழப்புக்கான செஸ் வரி மூலம் ரூ .14,675 கோடி மட்டுமே வசூலிக்கப்பட்டது. ஜூன் மாதத்தில் மட்டும் இந்த வருவாய் ரூ .7,665 கோடி தான் என்பதும் குறிப்பிடத்தக்கது .

2019-20ஆம் ஆண்டிற்கான மொத்த இழப்பீட்டுத் தொகை ரூ. 1,65,302 கோடியை மாநில அரசுகளுக்கு வழங்கியது. ஆனால், 2019-20ஆம் ஆண்டில் சேகரிக்கப்பட்ட செஸ் வரித் தொகை ரூ. 95,444 கோடி அளவில் தான் உள்ளது.

இந்த வருவாய் பற்றாக்குறையை போக்கிட  மத்திய அரசு ,ரூ.33,412 கோடியை இந்திய ஒருங்கிணைந்த (Consolidated Fund of India) நிதியிலிருந்து இழப்பீட்டு நிதிக்கு மாற்றியுள்ளது. மேலும், 2017-18 மற்றும் 2018-19ஆம் ஆண்டுகளில் சேகரிக்கப்பட்ட செஸ் தொகையின் நிலுவைத் தொகையும் பயன்படுத்தியுள்ளது.

எவ்வாறாயினும், கடந்த ஏப்ரல் மாதத்தில் இருந்து மாநிலங்களுக்கு வழங்க வேண்டிய இழப்பீட்டுத் தொகையை மத்திய அரசு இதுவரை வெளியிடவில்லை.

இழப்பீட்டு நிதிக்கு எவ்வளவு மாற்றப்படுகிறது?

2020-21 நிதி ஆண்டிற்கான பட்ஜெட் உரையில், 2016-17 மற்றும் 2017-18 ஆம் ஆண்டுகளில் சேகரிக்கப்பட்ட செஸ் வரியின் நிலுவைத் தொகையை இரண்டு தவணைகளாக  ஜிஎஸ்டி இழப்பீட்டு நிதிக்கு மாற்றுவதாக அறிவித்த  நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், “வரும் காலங்களில் ஜி.எஸ்.டி இழப்பீடு வரி மூலம் சேகரிக்கப்பட்ட தொகை மட்டும் தான்  இழப்பீடு நிதிக்கு மாற்றப்படும்” என்று தெரிவித்தார்.

முன்னாள் நிதிச் செயலாளரும், 13 -வது மத்திய நிதி ஆணையக் குழுவின் தலைவருமான விஜய் கெல்கர்,  வி.பாஸ்கர் ஆகியோர் தங்களின் சமீபத்திய கட்டுரையில்  இந்த முன்மொழிவை கேள்வி எழுப்பினர். “மத்திய அரசின்  நிலைப்பாடு சட்டப்படி சரியானதாக தோன்றினாலும், அது கூட்டாச்சி நெறிமுறையை பாதுகாப்பதாக  தெரியவில்லை…  ஜிஎஸ்டி கவுன்சில் ஒப்புதலுடன், இழப்பீட்டு நிதியில் ‘பிற தொகைகளையும்’ மாற்ற  சட்டத்தின் பிரிவு 10 (1) அனுமதிக்கிறது,என்று அவர்கள் எழுதினர்.

தற்போது, ​​புகையிலை, வாகனங்கள் போன்றவைகள் மீது  விதிக்கப்படும் செஸ் வரித்தொகை இழப்பீட்டு நிதியில் பாய்கிறது. 2017 ஆம் ஆண்டின் முற்பகுதியில் நடந்த ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டங்களில், பற்றாக்குறை ஏற்பட்டால், மாற்று வருவாயை இழப்பீட்டு நிதிக்கு பயன்படுத்த மாநிலங்கள் பரிந்துரைத்தன.

இழப்பீட்டுத் தொகையில் ஏற்படும் பற்றாக்குறையை  எப்படி சமாளிப்பது?

பற்றாக்குறையை  நிவர்த்தி செய்வதற்கு, சந்தையுடன் இணைக்கப்பட்ட கடன்களை நாடலாம் என்ற யோசனைய ஜிஎஸ்டி கவுன்சில் ஏற்கனவே விவாதித்திருந்தது.    இருப்பினும், கடன் வாங்கும் உரிமையை ஜி.எஸ்.டி  கவுன்சிலுக்கு சட்டம் அளித்துள்ளதா ? என்ற கேள்விகளுக்கு முதலில் பதில் தேட வேண்டியிருக்கும்

வருவாயை உயர்த்த, ஜிஎஸ்டி வரி  விகிதங்களை உயர்த்துவது, ஜிஎஸ்டி விகித அடுக்குகளை மறு சீரமைப்பது குறித்த தற்போது மாநிலங்கள் இடையே  ஒருமித்தக் கருத்துக்கள் ஏற்படும் சூழல் உருவாகி உள்ளத்கு.  எவ்வாறாயினும், கொரோனா பெருந்தொற்றால் ஏற்பட்ட பொருளாதார மந்தநிலைகள் களைந்த பின்னரே,  ஜி.எஸ்.டி வரி விகித கட்டமைப்பில் மாற்றம் கொண்டுவரப்பட வேண்டும் என்பதை மாநிலங்கள் ஒப்புக்கொள்கின்றன.

செஸ் வரி விகிதத்தை உயர்த்துவது, உத்தரவாதம் அளிக்கப்பட்ட 14% வருவாய் வளர்ச்சி இழப்பீட்டு விகிதத்தை குறைப்பது குறித்தும், முந்தைய ஜி.எஸ்.டி கவுன்சில் கூட்டங்களில் விவாதிக்கப்பட்டன. ஆனால், இந்த இரண்டு விருப்பங்களையும் மாநில அரசுகள் விரும்ப வில்லை.

அடுத்த ஜி.எஸ்.டி கூட்டம்:

முன்னதாக, ஜூன் மாதத்தில் நடந்த ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில், ” மாநிலங்களுக்கு வழங்கப்படவேண்டிய  இழப்பீட்டுத் தொகை குறித்து பேச அடுத்த மாதம் (ஜூலை) ஜி.எஸ்.டி கூட்டப்பட வேண்டும்” என்று முடிவெடுக்கப்பட்டது.

கூட்டம் இன்னும் கூட்டப்படவில்லை.

நேற்று, கேரள நிதியமைச்சர் தாமஸ் ஐசக் தனது ட்விட்டர் கணக்கில், ஜி.எஸ்.டி கவுன்சில் கூட்டத்தை உடனடியாக கூட்டுமாறு மத்திய அரசை கேட்டுக் கொண்டார்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil

 

Get all the Latest Tamil News and Tamil Nadu News at Indian Express Tamil. You can also catch all the latest Tamil Explained News by following us on Twitter and Facebook

Web Title:Gst compensation to states 14 rate state monthly protected revenue

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com.
பிரபலமானவை
Advertisement

இதைப் பாருங்க!
X