Advertisment

ஹரியானாவில் கொரோனா பாதிப்பு குறைவதற்கான அறிகுறிகள் இல்லை

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
ஹரியானாவில் கொரோனா பாதிப்பு குறைவதற்கான அறிகுறிகள் இல்லை

ஹரியானா மாநிலத்தில் கொரோனா தொற்று வளர்ச்சி விகிதம் குறைவதற்கான எந்த அறிகுறிகளும் தெளிவாகத் தென்படவில்லை . கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 355  பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதன் மூலம், மாநிலத்தின் மொத்த எண்ணிக்கை 5,209 ஆக அதிகரித்துள்ளது. கொரோன எண்ணிக்கையில் ஆந்திராவை தற்போது முந்திய ஹரியானா, இந்தியாவில் அதிகம் பாதிப்படைந்த 10    மாநிலங்களின் பட்டியலில் சேருவதற்கான வாய்ப்பும் அதிகமாக உள்ளது.

Advertisment

ஹரியானாவின் மோசமான கொரோனா பாதிப்பு இந்த மாதத்தில் தான் நடந்தேறியது. இந்த மாதத்தில் மட்டும் 3,100-க்கும் மேற்பட்ட புதிய கொரோனா பாதிப்புகள். மே கடைசி வாரம் வரை, ஹரியானா ஒவ்வொரு நாளும் நூற்றுக்கும் குறைவான கொரோனா பாதிப்புகளை மட்டுமே உறுதி செய்து வந்தது. ஆனால், கடந்த மே 28 முதல், பாதிப்புகள் அதிகரித்தன. இன்று வரை, கொரோனா தொற்று எண்ணிக்கை ஒவ்வொரு நாளும் அதிகரித்துக் கொண்டு வருகிறது. தற்போது, நாட்டில் வேகமாக கொரோனா தொற்று பரவி வரும் மாநிலங்களில் ஒன்றாக ஹரியானா திகழ்ந்து வருகிறது.

குருகிராம், ஃபரிதாபாத் சோனிபட் ஆகிய மூன்று மாவட்டங்களில் இருந்து மாநிலத்தின்  கிட்டத்தட்ட 70 சதவீத பாதிப்புகள் காணப்படுகிறது .  ஹரியானா டெல்லிக்கு அருகாமையில் இருப்பதால், மாநிலத்தின் கொரோனா பாதிப்பிற்கு முக்கிய காரணம் டெல்லி என்று ஹரியானா அரசு முதலில் குற்றம்சாட்டி வந்தது. தடுப்பு நடவடிக்கையாக, டெல்லிக்கு செல்லும், சாலைகளையும், நெடுஞ்சாலைகளையும் ஹரியானா அரசு முடக்கியது. இருப்பினும், கொரோனா பாதிப்புகள் தொடர்ந்து அதிகரித்து வருகின்றன.  செவ்வாய்க்கிழமை நிலவரப்படி, குருகிராம் நகரின் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 2329-க அதிகரித்து.  நாட்டின் மிக மோசமாக பாதிக்கப்பட்ட நகர்ப்பகுதிகளின் பட்டியலில்  குருகிராம் சத்தமில்லாமல் இணைந்துள்ளது.

கடந்த 24 மணி நேரத்தில் நாடு முழுவதும்  10,400 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டன. இதன்மூலம், கொரோனா உறுதி செய்யப்பட்டவர்களின் மொத்த  எண்ணிக்கை 2.75 லட்சமாக அதிகரித்தது. திங்களன்று விவரிக்கமுடியாத வகையில் இந்தியாவின் கொரோனா எண்ணிக்கைகள் சரிந்தது. ‘நியமிக்கப்படாத’ கொரோனா பாதிப்பின் எண்ணிக்கை நேற்று மீண்டும் உயர்ந்தது.

சில கொரோனா தொற்று எண்ணிக்கையை ஒரு குறிப்பிட்ட  மாநில புள்ளிவிவரங்களில் காட்டப்படாத பாதிப்பை (உதாரணமாக, மாநிலங்களுக்கு இடையே  செல்லும் புலம்பெயர் தொழிலாளர்களுக்கு ஏற்படும் கொரோனா தொற்று) ‘நியமிக்கப்படாத’ கொரோனா பாதிப்பு என்று அழைக்கப்படுகிறது. இந்த, எண்ணிக்கை கடந்த மூன்று வாரங்களாக படிப்படியாக உயர்ந்து, தற்போது 9,227 ஆக உள்ளது.

இருப்பினும், கடந்த திங்களன்று, இந்த நியமிக்கப்படாத தொற்று எண்ணிக்கை முதல் முறையாக குறைந்தது. இதன் விளைவாக தான், கடந்த திங்களன்று நாட்டின் மொத்த எண்ணிக்கையும் திடீரென்று குறைந்தன. ஆகவே, இந்த வகை பாதிப்புகள், தற்போது மாநிலங்களின் புள்ளிவிவரங்களில் முறையாக ஒதுக்கப்படுகின்றன(மொத்த எண்ணிக்கையை அதிகரிக்கமால்) என்று உணரப்பட்டன. இருப்பினும், செவ்வாய்க்கிழமை மீண்டும் இந்த  நியமிக்கப்படாத தொற்று எண்ணிக்கை அதிகரித்ததால், திங்கட்கிழமை ஏற்பட்டகுறைவு வெறும் கணிதப் பிழையாக இருக்கலாம் என்று தற்போது புரிந்து கொள்ள முடிகிறது.

publive-image

ஹரியானா போல் தாமதமாக, கொரோனா எழுச்சியின் அறிகுறிகளைக் காட்டத் தொடங்கிய மற்றொரு மாநிலமாக ஜார்கண்ட் உள்ளது  . புலம்பெயர் தொழிலாளர்கள் தங்கள் சொந்த மாநிலங்களுக்கு திரும்பத் தொடங்கியதால் மே மாத நடுப்பகுதியில் பீகார், ஒடிசாவில் அதிகமான கொரோனா பாதிப்புகள கண்டறியப்பட்டது. அந்த காலகட்டத்தில்,  ஜார்க்கண்ட் மாநிலத்தில் கொரோனா பாதிப்புகள் அதிகளவு உணரப்படவில்லை என்றாலும்,  கடந்த ஒரு வாரத்தில் அதன் எண்ணிக்கைகள் கணிசமாக அதிகரித்துள்ளன.  ஜூன் 2 அன்று 712-க இருந்த தொற்று எண்ணிக்கை  முதல் செவ்வாய்க்கிழமை ஆன்று 1416-க அதிகரித்தது (ஒரு வாரத்தில் இரட்டிப்பாகியுள்ளது).  அண்டை மாநிலமணா சத்தீஸ்கரும் இதேபோன்ற பாதையை பின்பற்றுகிறது. இதே காலகட்டத்தில் அதன் கொரோனா பாதிப்புகள் 556-ல் இருந்து 1211-ஆக உயர்ந்துள்ளன.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil
Corona Corona Virus
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment