மத்திய இடைநிலைக் கல்வி வாரியம் (சிபிஎஸ்இ) 2020 ஆம் வகுப்பு பன்னிரெண்டாம் வகுப்பு தேர்வுகளுக்கான முடிவுகளை திங்கள்கிழமை வெளியிட்டது. COVID-19 தொற்றுப் பரவலால் நாடு தழுவிய லாக் டவுன் காரணமாக, மார்ச் மாத நடுவில் நடைபெற்ற இந்த தேர்வுகள் நிறுத்தப்பட்டன.
நிலுவையில் இருந்த அந்தத் தேர்வுகளில், 10 மற்றும் 12 வகுப்புகளுக்கு 29 “முக்கியமான” தாள்களை மட்டும் நடத்த வாரியம் முடிவு செய்தது. இருப்பினும், பின்னர் நிலுவையில் உள்ள எந்தவொரு தேர்வையும் நடத்த வேண்டாம் என்று முடிவு செய்தது.
இந்த ஆண்டும் 40,000 பேருக்கு வேலை வழங்குவோம்: டி.சி.எஸ். அறிவிப்பு
மாணவர்கள் எழுதாத தாள்களின் மதிப்பெண்களைக் நிர்ணயிக்க வாரியம் ஒரு ஃபார்முலாவை வகுத்தது. நான்கு தாள்களை எழுதிய மாணவர்களின் சிறந்த மூன்று தாள்களின் சராசரியையும், மூன்று மட்டுமே எழுதிய மாணவர்களுக்கு சிறந்த இரண்டு தாள்களின் சராசரியையும், இரண்டிற்கும் குறைவாக எழுதிய மாணவர்களுக்கு பிராக்டிகல் மற்றும் புராஜெக்ட் மதிப்பெண்களைப் பயன்படுத்துவதையும் இந்த ஃபார்முலா உள்ளடக்கியது.
திங்களன்று வெளியிடப்பட்ட முடிவுகள் 90% மற்றும் 95% க்கு மேல் மதிப்பெண் பெற்ற மாணவர்களின் சதவீதத்தில் குறிப்பிடத்தக்க அதிகரிப்பு காட்டியது. கடந்த ஆண்டு, மொத்தம் 12,05,484 தேர்வர்களில், 17,693 தேர்வர்கள் அல்லது 1.47% பேர் 95% க்கு மேல் மதிப்பெண் பெற்றிருந்தனர். இருப்பினும், இந்த ஆண்டு இந்த சதவீதம் இரு மடங்கிற்கும் அதிகமாக 3.24% என்ற நிலையை எட்டியுள்ளது. 11,92,961 தேர்வர்களில் 38,686 பேர் மிக அதிக மதிப்பெண்களை பெற்றுள்ளனர்.
இதேபோல், 90% க்கு மேல் மதிப்பெண் பெற்ற தேர்வர்களின் எண்ணிக்கையும் 2019 இல் 7.82% ஆக இருந்து நிலையில், 2020ல் 13.24% ஆக உயர்ந்தது.
இந்த போக்கு அதிக மதிப்பெண்கள் எடுத்தவர்களின் எண்ணிக்கை அதிகரித்தல் என்பதோடு மட்டும் முடியவில்லை. இந்த ஆண்டின் ஒட்டுமொத்த தேர்ச்சி விகிதமும் அதிகரித்துள்ளது. இந்த ஆண்டு, 11,92,961 தேர்வர்களில் 10,59,080 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். மொத்த தேர்ச்சி விகிதம் 88.78% ஆக பதிவு செய்யப்பட்டுள்ளது. இது கடந்த ஆண்டின் 83.40% விகிதத்தை விட அதிகமாகும்.
மற்ற எல்லா ஆண்டுகளையும் போலவே, இந்த ஆண்டின் தேர்விலும் மாணவர்களை விட மாணவிகளே சிறந்து விளங்கியதை காண முடிந்தது. மாணவிகளின் தேர்ச்சி விகிதம் 92.15% . மாணவர்களின் தேர்ச்சி விகிதம் 86.19% .
சி.பி.எஸ்.இ 12ம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவுகள் அறிவிப்பு
திருநங்கைகள் 66.67% தேர்ச்சி சதவீதத்தை பதிவு செய்துள்ளனர். கடந்த ஆண்டைப் போலவே, மிகச் சிறப்பாக செயல்பட்ட பகுதி திருவனந்தபுரம், தேர்ச்சி சதவீதம் 97.67%.
கேந்திரியா வித்யாலயாஸ் மற்றும் ஜவஹர் நவோதயா வித்யாலயாக்கள் ஒவ்வொரு ஆண்டும் போலவே மிக உயர்ந்த சதவீதத்தை பதிவு செய்திருந்தாலும், இந்த ஆண்டு நாடு முழுவதும் உள்ள அரசு பள்ளிகளின் தேர்ச்சி சதவீதத்தில் பெரிய அதிகரிப்பு உள்ளது. கடந்த ஆண்டு, இவை 87.17% தேர்ச்சி சதவீதத்தை பதிவு செய்திருந்தன, இந்த ஆண்டு இது 94.94% ஆக அதிகரித்துள்ளது.
இருப்பினும், இந்த ஆண்டு, ‘டாப்பர்ஸ் லிஸ்ட்’ வெளியிட வேண்டாம் என்று வாரியம் முடிவு செய்துள்ளது.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil