/tamil-ie/media/media_files/uploads/2020/07/a165.jpg)
chandigarh farmers suicide rate dip, chandigarh farmers suicide covid, coronavirus farmers suicide, corona tamil news, covid 19 tamil news, corona latest tamil news, கொரோனா, கொரோனா வைரஸ், பஞ்சாபில் கொரோனா
Anju Agnihotri Chaba
கடந்த மூன்று மாதங்களில், லாக் டவுன் காலம் மற்றும் ஜூன் 1 முதல் தளர்த்தப்பட்டதில் இருந்து பஞ்சாப் மாநிலம் முழுவதும் விவசாயிகள் அமைப்பு சேகரித்த அறிக்கைகளின்படி, சுமார் மூன்று டஜன் விவசாயிகள் மற்றும் / பண்ணைத் தொழிலாளர்கள் தற்கொலை செய்து கொண்டுள்ளனர்.
இந்த புள்ளிவிவரத்தின்படி, கடந்த மூன்று மாதங்களில் சராசரியாக சுமார் 12-13 விவசாயிகள் மாதத்திற்கு தங்கள் உயிரைப்மாய்த்துக் கொண்டுள்ளனர். இந்த எண்ணிக்கை மிக அதிகமாக இருந்தாலும், லாக் டவுன் முன்னர் அரசு பதிவு செய்திருந்த மாத வாரியான தற்கொலைகளை விட இது 70 சதவீதம் குறைவாக உள்ளது.
மாநிலங்களை நிதி நெருக்கடியில் இருந்து காப்பாற்ற ஜி.எஸ்.டி யில் செய்யவேண்டிய மாற்றங்கள் என்ன?
பஞ்சாப் வருவாய் துறை பதிவின் படி, கடந்த நான்கு ஆண்டுகளில், மாநிலத்தில் ஒவ்வொரு மாதமும் சராசரியாக 40-42 விவசாயிகள் / பண்ணை தொழிலாளர்கள் தங்கள் உயிரை மாய்த்துக்கொண்டனர். அம்மாநிலத்தில் வைரஸ் தொற்று ஏற்பட்ட பிறகு, தற்கொலை சம்பவங்கள் குறைந்து வருவதை இந்தியன் எக்ஸ்பிரஸ் விளக்குகிறது.
லாக் டவுன் அறிவிக்கப்பட்ட மார்ச் 23 முதல் இன்று வரை எத்தனை விவசாயிகள் / பண்ணைத் தொழிலாளர்கள் பஞ்சாபில் தற்கொலை செய்து கொண்டனர்?
தற்கொலை பற்றிய ஊடக அறிக்கைகளிலிருந்து எண்களை சேகரித்து, காவல்துறையினரால் பதிவு செய்யப்பட்ட வழக்குகளுக்கு எதிராக அதை சரிபார்த்து வரும் பாரதிய கிசான் யூனியனின் (உக்ரஹான்) பதிவுகளின்படி, ஏப்ரல் மாதத்தில் 16 விவசாயிகள் தற்கொலை செய்து கொண்டனர், அதே எண்ணிக்கையிலான தற்கொலைகள் அடுத்த இரண்டு மாதங்கள் மே மற்றும் ஜூனில் தொடர்ந்தன. மார்ச் கடைசி வாரத்தில் நிகழ்ந்த கிட்டத்தட்ட நான்கு தற்கொலைகள் கணக்கில் எடுத்துக் கொள்ளப்பட்டால், லாக் டவுன் அறிவிக்கப்பட்டதிலிருந்து இன்றுவரை சராசரியாக 12 முதல் 13 தற்கொலை வழக்குகள் பதிவு செய்யப்படுகின்றன.
2019 மற்றும் 2018 ஆம் ஆண்டுகளில் ஏப்ரல் முதல் ஜூன் வரையிலான காலப்பகுதியில், முறையே 119 மற்றும் 104 தற்கொலைகள் பாஞ்சாப் மாநிலத்தில் நிகழ்ந்துள்ளன. கடந்த இரண்டு ஆண்டுகளின் தரவுகளுடன் ஒப்பிடும்போது இந்த ஆண்டின் எண்ணிக்கை 65 சதவீதம் முதல் 68 சதவீதம் வரை குறைவாக உள்ளது.
பஞ்சாபில் குறைவான தற்கொலைகள் குறித்து நிபுணர்களின் கருத்து என்ன?
பாட்டியாலாவின் பஞ்சாபி பல்கலைக்கழகத்தின் பொருளாதார பேராசிரியரும், பண்ணை பிரச்சனைகள் குறித்த நிபுணருமான பேராசிரியர் கேசர் சிங் பாங்கு கூறுகையில், சொசைட்டியில் தற்போது அத்தியாவசிய தேவைகள் தவிர்த்து, விவசாய பணிகளுக்கான செலவுகள் குறைக்கப்பட்டுள்ளன. இரண்டாவதாக, கோவிட் -19 நெருக்கடியின் போது விவசாயிகளுக்கு கடன் தொல்லையில் இருந்து வெளியே வர அரசாங்கம் உதவக்கூடும் என்ற கருத்து உள்ளது, கனடா மற்றும் அமெரிக்கா போன்ற பெரும்பாலான வளர்ந்த நாடுகளின் வழிகளில், அந்தந்த அரசாங்கங்களால் விவசாயிகளுக்கு பெரிய பொருளாதார உதவி வழங்கப்பட்டது.
விவசாயத் தற்கொலைகள் குறித்து பல ஆய்வுகளை மேற்கொண்ட வேளாண்மை மற்றும் பொருளாதார பிரச்சினைகள் நிபுணர் பேராசிரியர் கியான் சிங், தொற்றுநோயால் தற்போது கடன்களைத் திருப்பிச் செலுத்துவதற்கு விவசாயிகள் மீது குறைந்த அளவிலேயே அழுத்தம் கொடுக்கப்பட வாய்ப்புள்ளது. இது தற்கொலைகளின் எண்ணிக்கையை குறைக்க வழிவகுக்கும் என்று கூறினார்.
பண்ணை அமைப்புகள் என்ன சொல்கின்றன?
பாரதிய கிசான் யூனியனின் (பி.கே.யூ) தலைவர் ஜோகிந்தர் சிங் உக்ரஹான், கோவிட் -19 காரணமாக, தவணைத் தொகை ஒத்திவைக்கப்பட்டதால் விவசாயிகள் நிம்மதி அடைந்துள்ளனர் என்று கூறினார்.
"கிராமப்புற பஞ்சாபில், திருமணங்களுக்கும் இறுதி சடங்குகளுக்கும் கூட பெரிய செலவு, கட்டுப்பாடுகள் காரணமாக இப்போது நடப்பதில்லை. இது ஒரு பெரிய சுமையாக இருந்தது, ”என்று சங்ரூரில் உள்ள கனக்வால் கிராமத்தைச் சேர்ந்த விவசாயி சுக்பால் சிங் கூறினார், இதுபோன்ற சமூகக் கடமைகள் கிராமப்புற பஞ்சாபில் ஏராளமான விவசாயிகளுக்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்தி வருகின்றன.
அரசாங்கத்தின் பார்வை என்ன?
சில மாதங்களுக்கு கடன் தவணைகளை செலுத்த வேண்டாம் என்று வங்கிகளுக்கு அறிவுறுத்துவது குறித்து அரசாங்கத்தின் தரப்பிலிருந்து வெளியான அறிவிப்பு தற்கொலைகளை குறைந்துள்ளதாக அரசாங்கத் அதிகாரிகள் தெரிவித்தனர்.
சிறு மற்றும் குறு விவசாயிகளுக்கு ரூ .2 லட்சம் வரை கடன்களை தள்ளுபடி செய்வது தற்கொலைகளைத் தடுக்கும் ஒரு முயற்சியாக இருந்தது, ஆனால் விவசாயிகள் ஏற்கனவே அதிக கடன்களைபெற்றிருந்ததால், இந்த முயற்சியால் தற்கொலைகளைத் தடுக்க முடியவில்லை.
"அரசாங்கத்தின் கொள்கை விவசாயிகள் முழு அடிப்படை ஆதரவு விலை செலுத்துவதிலும், தனியார் நபர்கள் விவசாயிகளை சுரண்டி பெரும் லாபம் ஈட்டுவதை தடுப்பதுமாக அமைந்தால் தற்கொலைகள் பஞ்சாபில் கடந்த கால விஷயமாக இருக்கும். அதவாது, முற்றிலும் தற்கொலைகள் தடுக்கப்படலாம்.
கொரோனா பரவல் - இந்தியாவில் ஜூன் மாசம் படுமோசம் : 12 நாட்களில் 2 லட்சம் புதிய பாதிப்புகள்
குறைந்த தற்கொலைகளின் போக்கு தொடருமா?
இந்த போக்கு ஒரு தற்காலிக நிவாரணம் என்று நிபுணர்கள் கருதுகின்றனர். இயல்புநிலை திரும்பியவுடன் தற்கொலைகளின் எண்ணிக்கை அதிகரிக்கக்கூடும் என்பதால் நிலைமை மோசமடையும். வங்கிகளும் பிற நிதி நிறுவனங்களும் விவசாயிகளிடமிருந்து நிலுவைத் தொகையை பெற மோசமான நடவடிக்கைகளை எடுக்கும் என்று அவர்கள் அஞ்சுகிறார்கள், இது விவசாய சமூகத்தை நிதி மற்றும் உளவியல் அழுத்தங்களுக்கு உள்ளாக்கும்.
பி.கே.யூ டகவுண்டா ஏக்தா பொதுச் செயலாளர் ஜக்மோகன் சிங் கூறுகையில், இப்போதே விவசாயிகள் நாட்டின் உணவுப் பொக்கிஷங்களை நிரப்புவதில் கவனம் செலுத்துகிறார்கள், ஆனால் தற்கொலைகள் மீண்டும் நிகழாது என்று அர்த்தமாகாது.
"சிறு, குறு, மற்றும் நடுத்தர விவசாயிகளை ஒரு முறையாவது கடன் சிக்கலில் இருந்து வெளியேற்றுவது, சுவாமிநாதன் அறிக்கையை முழுமையாக செயல்படுத்துதல் மற்றும் விவசாய உற்பத்திச் சந்தை விதிகளை நீக்குவது போன்றவற்றால் மட்டுமே தற்கொலைகள் நிறுத்தப்படும்.
பஞ்சாபில் விவசாயிகள் மீதான சுமார் ஒரு லட்சம் கோடி கடனில், கிட்டத்தட்ட 34 சதவீதம் நிறுவன சாரா அமைப்புகளிடம் இருந்து 28 முதல் 30 சதவீதம் வட்டி விகிதம் வசூலிக்கப்படுகிறது.
"கொரோனா வைரஸ் அத்தகைய தீவிர நடவடிக்கைகளை ஒத்திவைக்க முடிந்தால், விவசாயிகளின் துயரத்தை குறைக்க அரசாங்கத்தின் ஒரு சிறிய முயற்சி இந்த சோகமான மற்றும் மோசமான நிகழ்வில் ஒரு மந்திர தாக்கத்தை ஏற்படுத்தும்" என்று ஜக்மோகன் சிங் முடித்தார்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.