Inheritance of daughters : உயில் ஏதும் எழுதி வைக்காமல், தன்னுடைய மகள் பாதுகாப்பில் வசிக்கும் தந்தை இறக்கும் போது அவருடைய சொத்து அவருடைய மகளுக்கே சேரும் தவிர இறந்தவரின் சகோதரர்களுக்கு அந்த சொத்தில் உரிமை இல்லை என வியாழக்கிழமை உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
1949ம் ஆண்டு உயிரிழந்த மாரப்ப கவுண்டரின் சொத்து தொடர்பான வழக்கு இது. அவர் உயிரிழந்த உடன் அவரின் சொத்து அவருடைய மகள் குப்பாயி அம்மாளுக்கு கிடைத்தது. அவரும் உயில் ஏதும் எழுதி வைக்காமல் 1967ம் ஆண்டு மரணம் அடைந்தார். மாரப்ப கவுண்டருக்கு சகோதரர் ஒருவர் இருக்கிறார். அவருக்கு ஒரு மகனும் 4 மகள்களும் உள்ளனர். அந்த நான்கு மகள்களில் ஒருவரான தங்கம்மாள் மாரப்ப கவுண்டரின் சொத்தில் 5-ல் ஒரு பங்கு சொத்து தனக்கு கிடைக்க வேண்டும் என்று வழக்கு பதிவு செய்துள்ளார்.
பெண் ராணுவ வீரர்கள் ராணுவத்துக்கு எவ்வாறு பயனளிக்கின்றனர்?
எதிர் தரப்பினர் கூறுவது என்ன?
மாரப்ப கவுண்டர் மரணம் அடைந்தவுடன் அவருடைய சொத்து குப்பாயி அம்மாளுக்கு கிடைத்தது. அவரும் இறந்தவுடன் அந்த சொத்து சுந்தர கவுண்டருக்கு வந்தது. அவரிடம் இருந்து பின்னர் ராமசாமி கவுண்டருக்கு இந்த சொத்து கிடைத்தது. ராமசாமியின் வாரிசுகளில் ஒருவரான எனக்கு அந்த சொத்தில் ஐந்தில் ஒரு பங்கு வேண்டும் என்று தங்கம்மாள் கூறியுள்ளார்.
ராமசாமியின் மகனான குருநாத்தின் பிள்ளைகள், இதனை மறுத்துள்ளனர். மேலும் 1949ம் ஆண்டு மாரப்ப கவுண்டர் மரணிக்கும் போது குப்பாயி அம்மாளுக்கு வாரிசாக இருக்கும் உரிமை இல்லை என்று கூறியுள்ளனர். அப்போது இருந்த ஒரே வாரிசு குருநாத கவுண்டர் தான் என்றும் அவரிடம் இருந்து அவருடைய பிள்ளைகளான எங்களுக்கு கிடைத்துள்ளது என்றும் அவரின் வாரிசுகள் கூறுகின்றனர்.
ட்ரயல் கோர்ட்டும், மெட்ராஸ் ஐகோர்ட்டும் கூறியது என்ன?
மாரப்ப கவுண்டர் இந்து வாரிசு உரிமைச் சட்டம் 1956 நடைமுறைக்கு வருவதற்கு முன்பே மரணித்துவிட்டதால் அவருடைய சொத்துக்கு தங்கம்மாளும், அவருடைய சகோதரிகளும் வாரிசுகளாக இருக்க முடியாது. மேலும் ஐந்தில் ஒரு பங்கு சொத்தை உரிமை கோரவும் முடியாது என்று இரு தரப்பு சாட்சியங்களையும் விசாரணை செய்து நீதிமன்றம் முடிவுக்கு வந்தது. மார்ச் 1, 1994ம் ஆண்டு தங்கம்மாள் வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டது. . விசாரணை நீதிமன்றத்தின் உத்தரவுக்கு எதிரான மேல்முறையீட்டு மனுவை உயர்நீதிமன்றம் ஜனவரி 21, 2009 அன்று தள்ளுபடி செய்தது.
உச்ச நீதிமன்றத்தின் முன் இருக்கும் கேள்வி என்ன?
தந்தையின் தனிப்பட்ட சொத்திற்கு மகள் மட்டுமே வாரிசாக இருக்க முடியுமா? அப்படி வாரிசாக இருந்த பெண்ணும் இறந்துவிட்டால் அந்த சொத்திற்கு அடுத்த வாரிசுகளாக யார் உரிமை கோரலாம்?
உச்ச நீதிமன்றம் என்ன முடிவு செய்தது?
மேற்கண்ட விவாதங்களில் தந்தையின் தனி சொத்துகளுக்கு வாரிசாக இருக்க தகுதியுடையவர் என்பது தெளிவாகிறது. பண்டைய நூல்கள், ஸ்மிரிதிகள் போன்றவற்றில் இடம் பெற்றுள்ள தகவல்களும், புகழ்பெற்ற அறிஞர்களால் எழுதப்பட்ட காவியங்களிலும், நீதித்துறை தீர்ப்புகளிலும் கூட பெண் வாரிசுகள், பொதுவாக மனைவி மற்றும் மகள்களுக்கு சொத்துகள் வழங்கப்பட்டுள்ளன என்று எஸ். அப்துல் நசீர் மற்றும் க்ருஷ்ண முராரி நீதிபதிகளின் அமர்வு பல கட்ட பண்டைய இந்து நூல்களையும், முந்தைய நீதிமன்ற தீர்ப்புகளையும் ஆய்வு செய்து கூறியுள்ளனர்.
சுயமாக சம்பாதித்து சேர்த்த சொத்துகள் மற்றும் சொத்தைப் பிரிப்பதன் மூலம் கிடைக்கும் பங்குகளை பெற இறந்தவரின் மனைவி மற்றும் பெண்களுக்கு உரிமை உண்டு என்பதை பழைய இந்து சட்டத்தில் மட்டுமின்றி பல சட்டங்களில், பழக்கவங்களில் நடைமுறையில் இருக்கும் ஒன்று. இறக்கும் தருவாயில் உள்ள ஆண் சுயமாக சம்பாதித்த சொத்தை அல்லது சொத்து பங்கீட்டின் மூலம் கிடைத்த சொத்துகளை அல்லது குடும்ப சொத்துகள் பரம்பரையாக மாற்றப்படும். இத்தகைய ஆணின் சொத்துகளை பெற மற்ற அனைவரைக் காட்டிலும் அவரின் மகள்களுக்கே முன்னுரிமை உண்டு.
இத்தகைய சொத்துகளைப் பெற்ற பெண்ணும் உயில் ஏதும் எழுதி வைக்காமல் இறக்கும் பட்சத்தில் தன்னுடைய தந்தை வழியில் பெறப்பட்ட சொத்துகள் அனைத்தும் தந்தையின் இதர வாரிசுகளுக்கு போய் சேரும். அதே போன்று கணவர் மற்றும் மாமனார் வழி பெறப்பட்ட சொத்துகள் அனைத்தும் கணவர் குடும்பத்தினரின் வாரிசுகளுக்கு போய் சேரும்.
ஒரு இந்து பெண் இறந்துவிட்டால், அவர் கணவர் உயிருடன் இருக்கும் பட்சத்தில் இந்து வாரிசுரிமைச் சட்டத்தின் பிரிவு 15(1)(a) செயல்பாட்டிற்கு வரும், மேலும் அப்பெண் தன்னுடைய பெற்றோர் வழியில் இருந்து பெற்ற சொத்துகள் உட்பட அனைத்தும் அவருடைய கணவரின் விருப்பத்தின் பெயரில் பகிர்ந்தளிக்கப்படும்.
இந்த விவரங்களை வழக்கில் பயன்படுத்திய உச்ச நீதிமன்றம், குப்பாயி அம்மாள் இறப்பிற்கு பிறகு இந்த வழக்கு 1967ல் துவங்கப்பட்டது என்பதால் இந்து வாரிசுமைச் சட்டம் 1956 செல்லுபடியாகும். இதன் மூலம் ராமசாமி கவுண்டரின் மகள் தந்தையின் வகுப்பு-1 வாரிசுகளில் ஒருவராக இருப்பார். மேலும் இதர வாரிசுதார்களுக்கும் இது பொருந்தும். எனவே அவர் சொத்தில் ஐந்தில் ஒரு பங்கு சொத்தை உரிமை கோர முடியும் என்று அறிவித்துள்ளது.
இந்த முடிவை நீதிமன்றம் எப்படி எடுத்தது?
வாரிசுரிமை பற்றிய பாரம்பரிய இந்து சட்டத்தின் ஆதாரங்களைக் கண்டறிந்து, நீதிமன்றம் மிடாக்ஷரா சட்டத்தைப் பற்றி விவாதித்தது. மேலும் 'வியாவஸ்தா சந்திரிகா', ஷ்யாமா சரண் சர்க்கார் வித்யா பூஷனின் இந்து சட்ட டைஜிஸ்ட்டில் குறிப்பிடப்பட்டுள்ள 'விருஹஸ்பதி'யை மேற்கோள்காட்டியது. இதன் பொருள் கணவரின் செல்வத்திற்கு மனைவியே வாரிசாக வருவார் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. , அவரிடம் இருந்து அவருடைய மகளுக்கும் செல்கிறது. ஒரு மகனைப் போன்றே ஒரு மகளும் ஒரு தந்தையின் அங்கம். பின்பு எப்படி மற்றொரு நபர் அவள் தந்தையின் சொத்தை எடுத்துச் செல்ல முடியும் என்று கேள்வியும் எழுப்பியுள்ளது. தனியுரிமை கவுன்சில் தீர்ப்புகளையும் உச்ச நீதிமன்றம் ஆய்வு செய்து இந்த தீர்ப்பை பிறப்பித்துள்ளது.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.