Advertisment

போலி செய்திகளுக்கு எதிராக ட்விட்டர் எடுக்கும் முக்கிய நடவடிக்கைகள் என்ன?

உண்மைத் தகவல்களை சரிபார்ப்பவர்கள், பத்திரிகையாளர்கள் ஆகியோருக்கு முன்னுரிமை அளிக்கப்பட்டு இந்த தகவல்கள் சரிபார்க்கப்படலாம்.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
How Twitter plans to flag lies and fake videos

How Twitter plans to flag lies and fake videos

Shruti Dhapola

Advertisment

How Twitter plans to flag lies and fake videos : கடந்த பல ஆண்டுகளாக போலியான செய்திகளுக்கு எதிராக பல்வேறு முக்கிய நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது ட்விட்டர். தற்போது போலியான வீடியோக்கள் மற்றும் மனிப்புலேட்டட் வீடியோக்களுக்கு எதிராக கடும் நடவடிக்கைகள் மேற்கொள்ள இருப்பதாக அறிவித்துள்ளது ட்விட்டர் நிறுவனம். போலியான வீடியோக்களுக்கு எதிராக நடவடிக்கைகள் மேற்கொள்ள புதுமையான வழிமுறையை கையாள இருப்பதாக அறிவித்துள்ளது ட்விட்டர்.

இந்த செய்தியை ஆங்கிலத்தில் படிக்க

என்ன புது அம்சம் இதில் இருக்கிறது?

போலியான அல்லது முற்றிலும் தவறான செய்திகள் ட்விட்டர் தளங்களில் உலவினால் உடனே ஆரஞ்ச் அல்லது சிவப்பு நிற எச்சரிக்கையோடு “ Harmfully Misleading” என்ற டேக்குடன் வெளியாகும் என்று என்.பி.சி வெளியிட்ட செய்தியில் அறிவிக்கப்பட்டிருந்தது. மேலும் அந்த செய்திக்கு கீழே “இந்த செய்தி ட்விட்டர் கம்யூனியிட்டியின் கொள்கைகளை மீறி இருப்பதாகவும், மிகவும் தவறான செய்தி என்றும்” குறிப்பிடப்பட்டிருக்கும். மேலும் இந்த ட்வீட்டின் பார்வைகள் முற்றிலுமாக குறைக்கப்படும்.

இது எப்படி தவறான செய்திகளின் பரவலை தவிர்க்கும்?

சிவப்பு மற்றும் ஆரஞ்சு நிற லேபிள்களை யாராலும் மிஸ் செய்ய இயலாது. மேலும் இந்த செய்திகளை பயன்படுத்தும் பயனர்களை இது எச்சரிக்கை செய்யும். மேலும் இது போன்ற ட்விட்களின் ”ரீச்சினை” முற்றிலுமாக தடை குறைக்கிறது ட்விட்டர். இதனால் வெகு சில டைம் லைன்களில் மட்டுமே இந்த ட்வீட் வரும். மேலும் இது போன்ற தகவல்களில் நோட்ஸ் மற்றும் ”critical context” என எச்சரிக்கை செய்ய பயனர்கள் ஊக்குவிக்கபடுவார்கள் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த குழுவின் அறிக்கையானது எவ்வளவு தூரம் நம்பகத்தன்மை கொண்டது என்பது கேள்விக் குறித்டான். இது தவறாக தீர்ப்பளிக்கப்பட்ட விவகாரங்களுக்கு வழிவகுக்கிறது. அல்லது தனி நபரின் கருத்துகளுக்கும் வழி வகுக்கிறது. உதாரணத்திற்கு ஒரு வரலாற்றாசிரியர் ஒரு தகவல்கை தருகிறார் என்று கொள்வோம். இது சார்பினர் தவறான கருத்துகளை அது கொண்டுள்ளது என்று நினைக்கலாம். அவர்களின் கருத்திற்கு எதிர்மாறாக உண்மை நிலவரம் இருக்கலாம். இது போன்ற சூழலை எப்படி ட்விட்டர் கையாளும் என்பது இன்னும் குழப்பமாக உள்ளது. ஒரு நாட்டில் இருந்து மற்றொரு நாட்டுக்கு இந்த அறிக்கைகள் மாறுபடலாம்.

"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற  t.me/ietamil

நம்பிக்கைக்குரிய வகையில் உண்மையான தகவல்களுக்கு ஊக்கம் அளித்து ட்விட்டர் அவர்களுக்கு கம்யூனிட்டி பேட்ஜினை (community badge) வழங்க இருப்பதாக தகவல்கள் வெளியானது. ஆனால் மீண்டும், எதன் அடிப்படையில் இந்த பேட்ஜ் வழங்கப்படும் என்ற கேள்விகள் இதனால் எழுப்பப்படுகிறது. உண்மைத் தகவல்களை சரிபார்ப்பவர்கள், பத்திரிகையாளர்கள் ஆகியோருக்கு முன்னுரிமை அளிக்கப்பட்டு இந்த தகவல்கள் சரிபார்க்கப்படலாம்.

மிகவும் தவறான தகவல்களின் பரவலை எப்படி தடுக்க உள்ளது ட்விட்டர்?

மிகவும் சிக்கலான ஆர்ட்டிஃபிசியல் டூல்களை பயன்படுத்தி ஃபேக் வீடியோக்கள், ஆடியோக்கள், மற்றும் புகைப்படங்கள் உருவாக்கப்படுகிறது. இதனை அடையாளம் காண்பது மிகவும் கடினம். இந்த டூல்களை பயன்படுத்தி ஒரு அரசியல் கட்சி தலைவரின் பேச்சினை தவறாக சித்தகரிக்கலாம். இதனை பயன்படுத்தி ஆபாச வீடியோக்களை உருவாக்க இயலும்.

"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற  t.me/ietamil

மோசமாக ஒரு படம் சித்தகரிக்கப்பட்டுள்ளது அல்லது தவறாக புனையப்பட்டுள்ளது என ட்விட்டர் அஞ்சும் இடத்தில் இது போன்ற லேபிள்களை பயன்படுத்துவது ஒரு வகையில் பயனர்களை எச்சரிக்கை செய்யும். பயனர்கள் அந்த செய்திகளை பரப்புவதற்கு முன்பு எச்சரிக்கையுடன் செயல்படுவார்கள். இது அந்த செய்திப் பரவலை முற்றிலுமாக தடுக்கிறது. இது போன்ற தவறான தகவல்களால் மிகவும் மோசமான விளைவுகள் ஏற்படும் என்ற சூழல் உருவாகும் பட்சத்தில் இந்த ட்வீட்டினை உடனடியாக ட்விட்டர் நிர்வாகம் நீக்கிவிடும். தனிமனிதர் அல்லது ஒரு குழுவினை அச்சுறுத்தும் வகையில் அல்லது தனிப்பட்ட நபரின் வாழ்வில் பாதிப்பினை உண்டாக்கும் என நிர்வாகம் நினைக்கும் பட்சத்தில் உடனடியாக அந்த ட்வீட் நீக்கப்படும். இந்த லேபிளிங் முறை வருகின்ற மார்ச் 5ம் தேதி முதல் நடைமுறைக்கு வருகிறது.

மேலும் படிக்க : சாம்சங்கிற்கு போட்டியாக களம் இறங்குகிறதா இந்த ஸ்மார்ட்போன்? ஆச்சரியப்பட வைக்கும் சிறப்பம்சங்கள்!

Twitter
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment