சாம்சங்கிற்கு போட்டியாக களம் இறங்குகிறதா இந்த ஸ்மார்ட்போன்? ஆச்சரியப்பட வைக்கும் சிறப்பம்சங்கள்!

6000mAh பேட்டரி, ஆண்ட்ராய்ட் 10, எக்ஸினோஸ் 9611 சிப்செட், 128 ஜிபி இண்டெர்நெல் ஸ்டோரேஜூடன் வெளியாகிறது இந்த ஸ்மார்ட்போன்.

iQOO 3, Oppo Reno 3 Pro, Samsung Galaxy M31 smartphones : வருகின்ற வாரங்களில் இந்தியாவில் வெளியாக இருக்கும் ஸ்மார்ட்போன்கள் என்னென்ன? எப்போது விற்பனையாக உள்ளது? அதன் சிறப்பம்சங்கள் என்ன? விலை என்பது குறித்த தகவல்கள் உங்களுக்காக இதோ!

iQOO 3

இந்தியாவில் iQOO விவோவின் கிளை கம்பெனியாக இல்லாமல் தனித்து விளங்குகிறது. இந்த ப்ராண்டின் கீழ் வெளியாகிறது முதல் ஸ்மார்ட்போன். பிப்ரவரி 25ம் தேதி வெளியாக உள்ளது இந்த ஸ்மார்ட்போன். ஸ்நாப்ட்ராகன் 865 ப்ரோசசர் கொண்டு இயங்கி வருகிறது. ஒன்ப்ளஸ் மற்றும் சாம்சங்கிற்கு கடுமையான போட்டியை தரும் ஸ்மார்ட்போனாக இந்த ஸ்மார்ட்போன் வெளியாக உள்ளது. நான்கு பின்பக்க கேமராக்களை கொண்டிருக்கும் இந்த ஸ்மார்ட்போனின் ப்ரைமரி கேமரா செயல்திறன் 64 எம்.பி ஆகும். 13MP + 13MP + 2MP என மற்ற கேமராக்களின் செயல்திறன் உருவாக்கப்பட்டுள்ளது. செல்ஃபி கேமராவின் செயல்திறன் 16 எம்.பி. இன் டிஸ்பிளே ஃபிங்கர் பிரிண்ட் சென்சாரை கொண்டுள்ளது இந்த போன்.

iQOO 3, Samsung Galaxy M31, Mi 10 smartphones launching in India soon

மேலும் படிக்க : Jio Vs Airtel Vs Vodafone : சிறந்த மாதாந்திர ப்ளான்களை தரும் நெட்வொர்க் எது?

Oppo Reno 3 Pro

ரெனோ சீரிஸில் புதிய ஸ்மார்ட்போனும் இந்தியாவுக்கு வர உள்ளது. இந்த ஸ்மார்ட்போன் மார்ச் 2ம் தேதி வெளியாகலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஸ்மார்ட்போனின் இரண்டு பக்கத்திலும் பஞ்ச் ஹோல் கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளது. சீனாவில் வெளியான ஸ்மார்ட்போன் போல் இல்லாமல் இந்த ஸ்மார்ட்போன்களின் சிறப்பம்சங்கள் வேறுபடலாம்என்று கூறப்பட்டுள்ளது. இதில் 765G ஸ்நாப்ட்ராகன் ப்ரோசசர் பொருத்தப்பட்டுள்ளது.

iQOO 3, Samsung Galaxy M31, Mi 10 smartphones launching in India soon

மேலும் படிக்க : ஆட்டோ எக்ஸ்போவில் வெளியான கார்களின் அணி வகுப்பு… உங்களின் “வாவ்”க்கு நாங்கள் கேரண்டி!

Samsung Galaxy M31

இந்த ஸ்மார்ட்போன் வருகின்ற 25ம் தேதி வெளியாக உள்ளது. ஃபுல் எச்.டி திரையுடன் கூடிய சூப்பர் ஏ.எம்.ஓ.எல்.ஈ.டி இன்ஃபினிட்டி யூ டிஸ்பிளே பேனலுடன் வெளியாகிறது இந்த ஸ்மார்ட்போன். 6000mAh பேட்டரி, ஆண்ட்ராய்ட் 10, எக்ஸினோஸ் 9611 சிப்செட், 128 ஜிபி இண்டெர்நெல் ஸ்டோரேஜூடன் வெளியாகிறது இந்த ஸ்மார்ட்போன்.

Get all the Latest Tamil News and Tamil Nadu News at Indian Express Tamil. You can also catch all the latest Tamil Technology News by following us on Twitter and Facebook

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com.
Just Now
X
×Close
×Close