Impeachment inquiry against President Donald Trump
Impeachment inquiry against President Donald Trump : அமெரிக்க பாராளுமன்றத்தின் சபாநாயகர் நான்சி பெலோசி அமெரிக்க அதிபருக்கு எதிரான வழக்கு ஒன்றை விசாரிக்க இருப்பதாக அறிவித்துள்ளது. 2020ம் ஆண்டு அதிபர் தேர்தலில் டொனால்டுக்கு எதிராக களம் இறங்க இருக்கும் ஜோய் பைடனை விசாரிக்க உக்ரைன் அரசை வலியுறுத்தியுள்ளதாக டொனால்ட் ட்ரெம்பின் மீது குற்றச்சாட்டு வைக்கப்பட்டுள்ளது. இந்த குற்றச்சாட்டின் மீதான விசாரணை அமெரிக்க உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி முன்னிலையில் செனெட் சபையில் நடைபெறும்.
Advertisment
Impeachment inquiry against President Donald Trump
இந்தியாவில் இருப்பதை போன்றே அமெரிக்காவின் நாடாளுமன்றத்திலும் இரண்டு அவைகள் உள்ளன. கீழ் அவை ஹவுஸ் ஆஃப் ரெப்ரசண்டேட்டிவ்ஸ் என்று அழைக்கப்படுவார்கள். அவர்களால் இப்படி ஒரு விசாராணையை கொண்டு வர இயலும். மேலவையான செனெட் அவையில் அனைத்து விதமான விசாரணைகளும் மேற்கொள்ளப்படும்.
Advertisment
Advertisements
எந்தெந்த காரணங்களால் அதிபர் மீது விசாரணை கொண்டு வர இயலும்?
நாட்டிற்கு துரோகம் இழைத்தல், லஞ்சம், சட்டமீறல் மற்றும் மிகப்பெரிய அளவிலாக குற்றங்கள் செய்தால் இம்பீச்மெண்ட் என்ற நடவடிக்கை மேற்கொள்ளப்படும். சட்ட வரம்பு மீறல்கள் மற்றும் உயர் குற்றங்கள் என்றால் என்ன? எதன் அடிப்படையில் அது உறுதி செய்யப்படுகிறது என்பது குறித்து வெளிப்படையாக எந்த அறிவிப்பும் விடப்படவில்லை. ஆனால் நியூ யார்க் டைம்ஸ் இது குறித்து கூறுகையில் “இவ்விரண்டு பதங்களும் ”high crimes and misdemeanors” இங்கிலாந்து சட்ட முறைகளில் இருந்து எடுத்து பின்பற்றப்படுகிறது. தன்னுடைய அதிகாரங்களை பயன்படுத்தி குற்றம் செய்தலைத் தான் இது குறிப்பிடுகிறது. அமெரிக்காவில் இது ஊழல், லஞ்சம், பதவியை தவறாக பயன்படுத்துதல் என்று பொருள் கொள்ளப்படுகிறது.
இதற்கு முன்பு யாராவது விசாரணையின் மூலமாக நீக்கப்பட்டுள்ளனரா?
இதுவரை அப்படி யாரும் பதவியில் இருந்து நீக்கப்படவில்லை. ஆனால் 1968ம் ஆண்டு ஆண்ட்ரூ ஜான்சன் மீதும், 1998ம் ஆண்டு பில் கிளிண்டன் மீதும் விசாரணை நடத்தப்பட்டது. ஆனால் செனெட் சபை, குற்றங்கள் நிரூபிக்கப்படாததால் அவர்களை பதவியில் இருந்து நீக்க மறுத்துவிட்டது. 1974ம் ஆண்டு ரிச்சர் நிக்சன் என்ற அதிபர், சபை அவரை பதவியில் இருந்து நீக்கும் முன்பே தன்னுடைய பதவியை ராஜினாமா செய்தார்.
ஹவுஸ் கமிட்டிகள் மூலமாகவே விசாரணைகள் மேற்கொள்ளப்படும். நிக்சன் மற்றும் க்ளிண்டன் மீதான வழக்குகளில் நாடாளுமன்ற நீதித்துறை கமிட்டி விசாரணை மேற்கொண்டது. ட்ரெம்புக்கு எதிரான வழக்கை 6 குழுக்கள் விசாரணை செய்ய உள்ளது. இந்த விசாரணையின் முடிவில் அவர் குற்றம் இழைத்து கண்டறியப்பட்டால் சபையின் அனைத்து உறுப்பினர்கள் பார்வைக்கும் இவ்விவாகரம் சென்றடையும்.
வாக்களித்தல்
ஒன்றுக்கும் மேற்பட்ட ஆர்ட்டிக்கல்கள் மீதான வாக்கெடுப்பில் அதிக வாக்குகள் பெற்றால் அதிபர் மீதான நாடாளுமன்ற விசாரணை நடைபெறும். இவ்விவகாரம் செனேட் சபைக்கு கொண்டு செல்லப்படும்.
செனெட் சபை விசாரணை
செனேட் சபையில் அமெரிக்காவின் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி பார்வையில் இவ்விசாரணை மேற்கொள்ளப்படும். செனெட் சபை பார்வையாளாராக இருக்க, அதிபர் சார்பில் வழக்காட வழக்கறிஞர்கள் நியமிக்கப்படுவார்கள். மூன்றில் 2 இரண்டு செனேட்டர்கள் அதிபர் குற்றம் செய்யப்பட்டதாக அறிந்தால், அதிபர் நீக்கம் செய்யப்பட்டு துணை அதிபர் அதிபராக பொறுப்பேற்பார்.
அமெரிக்க நாடாளுமன்றத்தின் பிரதிநிதிகள் சபையில் 235 ஜனநாயக கட்சி உறுப்பினர்களும், 199 குடியரசு கட்சி உறுப்பினர்களும், ஒரு சுயேட்சை கட்சி உறுப்பினரும் உள்ளனர். குடியரசு கட்சி உறுப்பினர்களின் துணையின்றி ஜனநாயக கட்சி உறுப்பினர்களே ட்ரெம்ப் மீது இம்பீச்மெண்ட் கொண்டு வர இயலும்.
செனெட் சபையில் 53 குடியரசு கட்சி உறுப்பினர்களும், 45 ஜனநாயக கட்சி உறுப்பினர்களும், ஜனநாயக கட்சிக்கு ஆதரவு தரும் 2 சுயேட்சை கட்சி உறுப்பினர்களும் உள்ளனர். 67 வாக்குகள் இருந்தால் மட்டுமே ட்ரெம்பை பதவியில் இருந்து நீக்க முடியும். ஆனால் அதற்கு ட்ரெம்பின் ஜனநாயக கட்சி உறுப்பினர்கள் அவருக்கு எதிராக வாக்களித்தால் மட்டுமே அது சாத்தியப்படும்.