India biggest emitter of sulphur dioxide : க்ரீன்பீஸ் இந்தியா (Greenpeace India) சமீபத்தில் வெளியிட்டுள்ள அறிக்கையின் படி, இந்தியா அதிக அளவு நச்சுத் தன்மை வாய்ந்த சல்ஃபர் டை ஆக்ஸ்ட் வாயுவை வெளியிடும் நாடாக அறிவிக்கப்பட்டுள்ளது. நாசாவின் ( NASA OMI (Ozone Monitoring Instrument)) ஓசோ மானிட்டரிங் இன்ஸ்ட்ரூமெண்ட் என்ற செயற்கைகோள் வெளியிட்டுள்ள தரவுகளின் அடிப்படையில் இந்த பட்டியலில் முதலிடம் பிடித்துள்ளது இந்தியா.
India biggest emitter of sulphur dioxide
நிலக்கரியை அதிக அளவில் எரிப்பது, அளவுக்கு அதிகமான அனல் மின் நிலையங்களின் பயன்பாடு, எரிபொருள்களை முறையாக டீ-சல்ஃப்ரைசேசன் செய்யாதது போன்ற காரணங்களால் இந்தியா இந்த பட்டியில் முன்னிலை வகிக்கிறது. இதன் மூலம் அதிக அளவு காற்று மாசடைகிறது என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
சிங்கரௌலி, நெய்வேலி, ஜர்சுகுடா, கோர்பா, கட்ச், சென்னை, ராமகுண்டம், சந்திரபூர், கொரடி போன்ற இடங்களில் அமைக்கப்பட்டிருக்கும் அனல் மின் நிலையங்கள் தான் அதிக அளவில் சல்ஃபர் டை ஆக்ஸைடை வெளியிடும் ஹாட்ஸ்பாட்களாகும்.
காற்றில் கலக்கும் இவ்வகை நச்சுக்களை கட்டுப்படுத்தும் முயற்சியில் இறங்கிய சுற்றுச்சூல, காடுகள், மற்றும் பருவநிலை அமைச்சகம், சல்ஃபர் டை ஆக்ஸ்டைட் வெளியேற்றத்தை கட்டுக்குள் வைக்க அனல் மின் நிலையங்களுக்கு 2015ம் ஆண்டு உத்தரவிட்டது. FGD (flue-gas desulphurisation) கருவியை பொறுத்த 2017ம் ஆண்டு வரை காலக்கெடுவும் விதித்திருந்த நிலையில் அது 2022ம் ஆண்டு வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
/tamil-ie/media/media_files/uploads/2019/08/sulphur-emission.jpg)
இந்தியா மட்டும் அல்லாமல் ரஷ்யா, தென் ஆப்பிரிக்கா, இரான், சௌதி அரேபியா, மெக்சிக்கோ, அமீரகம், துருக்கி மற்றும் செர்பியா உள்ளிட்ட நாடுகளும் இதில் இடம் பெற்றுள்ளன.
மேலும் படிக்க : வீழ்ச்சியில் ஆட்டோ மொபைல் சந்தை… ரூ.70 ஆயிரம் வரை தள்ளுபடி விலையில் மாருதியின் டிஸைர்2019/
இந்தியா, சவுதி, மற்றும் ஈரான் ஆகிய நாடுகளில் பயன்படுத்தப்படும் அனல் மின்நிலையங்களால் சல்ஃபர் டை ஆக்ஸ்டின் நச்சுக் கலப்பு அதிகரித்துக் கொண்டே இருக்கிறது. ரஷ்யா, தென் ஆப்பிரிக்கா, மெக்சிகோ, துருக்கி போன்ற நாடுகளில் இவ்வாயுவின் வெளியீடு அதிகம் இல்லையென்றாலும், இருக்கின்ற நச்சுத் தன்மையை குறைக்க புதிய நடவடிக்கைகள் எதையும் அந்நாடுகள் மேற்கொள்ளவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
அமெரிக்கா மற்றும் சீனா போன்ற நாடுகள் இந்த வாயுக்களை அதிக அளவு வெளியிட்டாலும், அதனை கட்டுப்படுத்த அதிக அளவு சிரத்தை எடுத்துக் கொள்கிறது. அமெரிக்கா தாங்கள் பெறும் மின்சாரத்தை சுத்தமான முறையில், இயற்கைக்கு ஆபத்து ஏற்படுத்தாத வகையில் உற்பத்தி செய்ய துவங்கியுள்ளது. சீனாவோ, அனல் மின்நிலையங்கள் வெளியிடும் சல்ஃபர் டை ஆக்ஸ்டைடின் அளவை கட்டுப்படுத்த புதிய கருவிகளை பொருத்தியுள்ளது.
இந்த கட்டுரையை ஆங்கிலத்தில் படிக்க