coronavirus, coronavirus news, covid 19, கொரோனா வைரஸ், குஜராத் கொரோனா வைரஸ், தமிழகத்தில் கொரோனா, india covid 19 cases, coronavirus india update, coronavirus cases today update, coronavirus cases, delhi corona news, delhi coronavirus news, covid 19 india, mumbai coronavirus news, gujarat coronavirus, maharashtra coronavirus, coronavirus tracker, coronavirus india tracker, coronavirus live news, coronavirus latest news in india, karnataka cases, karnataka covid 19 cases
Coronavirus India: மகாராஷ்டிராவில் கடந்த மூன்று வாரங்களில் கொரோனா வைரஸ் பரவலில் மந்தநிலை ஏற்பட்டாலும், இதுவரை இல்லாத அளவுக்கு குறிப்பிடத்தக்க அளவிலான மந்தநிலை குஜராத்தில் காண முடிகிறது. ஏப்ரல் மையப் பகுதியில் 20 சதவிகிதத்துக்கும் அதிகமான வைரஸ் பாதிப்பு அங்கு நிலவிய நிலையில், அதன்பிறகு, தொடர்ச்சியான சரிவைக் கண்டு, தற்போது நாட்டின் மிக மெதுவாக வைரஸ் பாதிப்பு ஏற்படும் மாநிலங்களில் ஒன்றாக உள்ளது.
Advertisment
மே 1 அன்று குஜராத் 5,000 பாதிப்புகளைத் தாண்டியது. இப்போது 19,617 பாதிப்புகள் உள்ளன. டெல்லி மற்றும் தமிழ்நாடு ஆகிய நாடுகளில் மே 1 ம் தேதி குஜராத்தை விட குறைவான பாதிப்புகளே இருந்தன. இப்போது இரு மாநிலங்களும் அதை முறியடித்துள்ளன. இதே காலக்கட்டத்தில் டெல்லி 3,738 பாதிப்புகளில் இருந்து இப்போது 27,654 ஆகவும், தமிழகம் 2,526 லிருந்து 30,152 ஆகவும் அதிகரித்துள்ளது.
Advertisment
Advertisements
குஜராத் இப்போது ஒவ்வொரு நாளும் 2.6 சதவீதம் வளர்ந்து வருகிறது (7 நாள் கூட்டு தினசரி வளர்ச்சி விகிதம்), இது தேசிய விகிதமான 4.33 ஐ விட மிகக் குறைவு, மேலும் பாதிப்பு இரட்டிப்பாகும் நாட்கள் 27 என்று உள்ளது. இது தேசிய இரட்டிப்பு கால அளவான 16.61 நாட்களை விட மிகச் சிறந்ததாகும். குஜராத்தில் அசாதாரண மந்தநிலையின் பின்னணியில் ஒவ்வொரு நாளும் புதிய பாதிப்புகளின் எண்ணிக்கையில் ஆச்சரியமான நிலைத்தன்மையும் உள்ளது.
மே மாதம் முழுவதும், மாநிலத்தில் ஒவ்வொரு நாளும் 300 முதல் 400 பாதிப்புகள் பதிவாகின. இந்த மாதம், இதுவரை மொத்தமே 400 முதல் 500 வரையிலான புதிய பாதிப்புகள் மட்டுமே பதிவாகியுள்ளன.
ஓரளவிற்கு, குஜராத்தின் போக்கு ராஜஸ்தான் மற்றும் மத்திய பிரதேசத்திலும் காணப்படுகிறது.
எவ்வாறாயினும், குஜராத்தில் ஒரு பெரிய கவலை, அதன் இறப்பு புள்ளிவிவரங்கள் தான். அதில் எந்தவிதமான மந்தநிலையும் இருப்பதாகத் தெரியவில்லை. மாநிலம் ஒவ்வொரு நாளும் 20 முதல் 30 இறப்புகளைப் பதிவு செய்து வருகிறது, தற்போது வரை மொத்தம் 1,219 இறப்புகள் பதிவாகியுள்ளன, இது மகாராஷ்டிராவைத் தவிர வேறு எந்த மாநிலத்தையும் விட அதிகம். இதில் 994 இறப்புகள், அல்லது 82 சதவீதம், அகமதாபாத் நகரில் தான் நிகழ்ந்தன. தமிழகத்தைப் பொறுத்தவரையில் சென்னையில் மட்டும் 78 சதவீதம் இறப்புகள் பதிவாகியுள்ளன. ஆனால், அகமதாபாத் அதையும் தாண்டி உள்ளது.
நாட்டில் மிக அதிகமான இறப்பு விகிதம் கொண்ட மாநிலங்களில் குஜராத்தும் ஒன்றாகும்.
சனிக்கிழமையன்று நாடு முழுவதும் 10,000 க்கும் மேற்பட்ட புதிய நோய்த்தொற்றுகள் பதிவாகியுள்ளன, அதே நேரத்தில் இறப்பு எண்ணிக்கை கிட்டத்தட்ட 300 அதிகரித்துள்ளது.
இப்போது வேகமாக வைரஸ் பாதிப்பு அதிகரித்து வரும் மாநிலங்களில் ஹரியானா, அசாம், திரிபுரா மற்றும் கோவா ஆகியவை உள்ளன. சனிக்கிழமையன்று 71 புதிய தொற்றுகள் பதிவாகியதால் அதன் மொத்த எண்ணிக்கை 267 ஆக உயர்ந்துள்ளது. மேற்கு வங்கத்திலும் கடந்த சில நாட்களாக வைரஸ் தொற்று அதிகமாகியுள்ளன.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil