/tamil-ie/media/media_files/uploads/2020/07/a211.jpg)
coronavirus, coronavirus news, covid 19, india covid 19 cases, coronavirus india update, coronavirus cases today update, coronavirus cases, delhi corona news, delhi coronavirus news, gujarat coronavirus, maharashtra coronavirus,இந்தியாவில் கொரோனா வைரஸ், தமிழகத்தில் கொரோனா வைரஸ், mumbai coronavirus, tamil nadu coronavirus cases, chennai coronavirus cases
India COVID-19 Numbers: கடந்த இரண்டு நாட்களில், ராஜஸ்தானில் 1,100 க்கும் மேற்பட்ட புதிய கொரோனா வைரஸ் நோய்த்தொற்றுகள் பதிவாகியுள்ளன. சனிக்கிழமை 479 பாதிப்புகளும் ஞாயிற்றுக்கிழமை 632 பாதிப்புகளும் பதிவாகியுள்ளன. மாநிலத்தில் முதல் முறையாக, 400 க்கும் பாதிப்பு தொற்றுகளை அரசு அறிவித்துள்ளது. ஏழு வாரங்களுக்கும் மேலாக 200 முதல் 400 வரையிலான பாதிப்புகளே தினசரி பதிவு செய்யப்பட்டு வந்தது.
மாநிலத்தில் அதிக எண்ணிக்கையிலான கொரோனா தொற்று இருப்பதற்கு ஒரு காரணம், பிரதாப்கர் சிறைச்சாலையில் இந்த நோய் பரவத் தொடங்கியது தான், இதுவரை 100 க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளதாக கண்டறியப்பட்டுள்ளது. ஜெய்ப்பூர், ஜோத்பூர், பிகானேர் மற்றும் ஆல்வார் ஆகிய பகுதிகளிலும் எண்ணிக்கையில் அதிகரிப்பு உள்ளது.
Explained: சர்வதேச விமானப் போக்குவரத்து: ஜூலை இறுதி வரை ரத்து ஏன்?
அதேசமயம், அதிக தொற்று ஏற்படுவதில் இருந்து ராஜஸ்தான் மட்டும் விலகி நிற்கவில்லை. ஏறக்குறைய ஒரே நேரத்தில், குஜராத் மற்றும் மத்தியப் பிரதேசம் ஆகிய இரண்டு மாநிலங்களும் இதேபோல் மிகக் குறுகிய அளவில் பாதிப்புகளை பதிவு செய்து வந்த நிலையில், கடந்த சில நாட்களில் அதிக எண்ணிக்கை பதிவாகத் தொடங்கியுள்ளன.
மே மாதத்தின் பெரும்பகுதி வரை 300 முதல் 400 பாதிப்புகள் பதிவான நிலையில், ஜூன் மாதம் குஜராத்த்தில் தொற்று எண்ணிக்கை ஒவ்வொரு நாளும் 500 முதல் 600 வரை பதிவாகியிருந்தது. இந்த மாதம், மேலும் அதிகரிப்பு உள்ளது, கடந்த ஐந்து நாட்களில் நான்கு நாட்கள் மாநிலத்தில் புதிய தொற்றுநோய்களின் எண்ணிக்கை 700 க்கும் அதிகமாக உள்ளது.
இதேபோல், முதன் முறையாக மத்தியப் பிரதேசம் ஒரு நாளைக்கு 300 பாதிப்புகளை பதிவு செய்துள்ளது. மாநிலத்தில் ஞாயிற்றுக்கிழமை 326 பாதிப்புகளும், சனிக்கிழமை 307 பாதிப்புகளும் பதிவாகியுள்ளன.
அதிகரிக்கும் இந்த எண்ணிக்கை ஒரு மாறுபாடா அல்லது ஒரு புதிய போக்கின் அறிகுறிகளா என்று தற்போதே சொல்வது கடினம். குறைந்த பட்சம் குஜராத்தைப் பொறுத்தவரையில், அதிகரித்து வரும் போக்கு இன்னும் அதிகமாகிக் கொண்டே இருப்பது நமக்கு தெரிகிறது. பாதிப்புகள் மற்ற மாநிலங்களுடன் ஒப்பிடும்போது மிக மெதுவான வேகத்தில் இருந்தாலும், தினசரி எண்ணிக்கை சீராக உயர்ந்து வருகிறது. ராஜஸ்தான் மற்றும் மத்திய பிரதேசத்தில், முந்தைய போக்குகளிலிருந்து எண்ணிக்கை விலகத் தொடங்கியுள்ளன.
தேசிய அளவில், இதே போக்கு அதிகமாக காணப்படுகிறது. ஒரு மாதத்திற்கு முன்பு, கண்டறியப்பட்ட நோய்த் தொற்றின் எண்ணிக்கை 8,000 முதல் 9,000 வரை இருந்தது, கடந்த ஐந்து நாட்களாக இது 20,000 ஐ தாண்டியுள்ளது. உண்மையில், இது 25,000 க்கு மிக அருகில் உள்ளது.
எதிர்பார்த்தபடி, இந்தியாவில் மொத்த பாதிப்புகள் ஞாயிற்றுக்கிழமை ரஷ்யாவை விட அதிகமாக இருந்தது. ஜான்ஸ் ஹாப்கின்ஸ் பல்கலைக்கழகத்தின் உலகளாவிய தரவுத்தளத்தின்படி, ஞாயிற்றுக்கிழமை மாலை ரஷ்யாவில் 6.8 லட்சம் தொற்று ஏற்பட்டது. இந்தியா ஞாயிற்றுக்கிழமை 6.97 லட்சத்தை எட்டியது, இப்போது மொத்த நோய்த் தொற்றின் அடிப்படையில் அமெரிக்கா மற்றும் பிரேசிலுக்கு அடுத்து இந்தியா உள்ளது.
9வது வாரத்தில் சீனாவுடனான எல்லை மோதல்: இந்தியாவுக்கான வாய்ப்புகள் என்ன?
ஞாயிற்றுக்கிழமை 24,000 க்கும் மேற்பட்ட புதிய பாதிப்புகள் கண்டறியப்பட்டன, அவற்றில் கிட்டத்தட்ட 9,000 ஐந்து தென் மாநிலங்களிலிருந்து பதிவாகியுள்ளன, அவை தற்போது அதிக வளர்ச்சியின் மத்தியில் உள்ளன.
கடந்த சில நாட்களாக எழுச்சியைக் காட்டும் மற்றொரு மாநிலம் ஒடிசா. கடந்த மூன்று நாட்களில் சுமார் 1,500 பாதிப்புகள் பதிவாகியுள்ளன. இப்போது 9,500 க்கும் மேற்பட்ட பாதிப்புகள் உறுதிப்படுத்தப்பட்டுள்ளன. நீண்ட காலத்திற்குப் பிறகு, ஒடிசா தேசிய வளர்ச்சி விகிதத்தை விட வேகமாக வளரத் தொடங்கியது. மேலும், ஞாயிற்றுக்கிழமை, உத்தரப்பிரதேசத்தில் முதன்முறையாக 1,000 க்கும் மேற்பட்ட பாதிப்புகள் பதிவாகியுள்ளன.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.