/tamil-ie/media/media_files/uploads/2020/07/a22.jpg)
coronavirus, coronavirus news, positivity rate, india covid positivity rate, india covid 19 cases, கொரோனா வைரஸ், இந்தியாவில் கொரோனா, தமிழகத்தில் கொரோனா, coronavirus india update, coronavirus cases today update, coronavirus cases
கொரோனா வைரஸ் நோயறிதல் சோதனைகளின் எண்ணிக்கை நாட்டில் அதிகரித்து வருவதால், நேர்மறை வீதமும் உள்ளது. இதன் பொருள் என்னவென்றால், பரிசோதிக்கப்படுபவர்களில் அதிகமான மக்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்படுகிறது. நேர்மறை விகிதம் ஜூன் 20 அன்று முதல் முறையாக 6 சதவீதத்தை தாண்டியது, அதன்பிறகு விரைவாக உயர்ந்துள்ளது. தற்போது, நேர்மறை விகிதம் சுமார் 7.09 சதவீதமாக உள்ளது.
சமூகத்தில் நோயின் பரவலை மதிப்பிடுவதற்கு நேர்மறை விகிதம் ஒரு நல்ல இண்டிகேட்டர் ஆகும். நேர்மறை விகிதத்தின் உயர்வு என்பது சோதனையின் எண்ணிக்கையை விட, உறுதிப்படுத்தப்பட்ட தொற்றுகளின் எண்ணிக்கை அதிகமாக உள்ளது என்பதை குறிக்கிறது. பெரும்பாலான மாநிலங்களில் சோதனைக்கான அளவுகோல்கள் இன்னும் குறைவாகவே உள்ளதால், இந்த விகிதம் நிலவுகிறது.
விஞ்ஞானிகள் சுட்டிக்காட்டியுள்ளபடி, சோதனைகளின் எண்ணிக்கை அதிகமாக்கினால், பாதிக்கப்பட்ட நபர்களை கண்டுபிடிப்பதற்கான வாய்ப்புகள் அதிகம். இருப்பினும், மக்கள் தோராயமாக சோதிக்கப்படுவதில்லை. சோதனை திறன் குறைவாக இருப்பதால், மக்களை சோதிப்பதில் மாநிலங்கள்சில கட்டுப்பாடுகளை வைத்துள்ளன. எடுத்துக்காட்டாக, பல மாநிலங்கள் அறிகுறிகள் தென்பட்டால் மட்டுமே சோதனை செய்கின்றன, அல்லது ஏற்கனவே பாதிக்கப்பட்ட நபரின் முதன்மை அல்லது இரண்டாம் நிலை தொடர்புகளைப் போல, நோய்த் தொற்று ஏற்படுவதற்கான அதிக ஆபத்து உள்ளவர்களை மட்டுமே சோதிக்கின்றன. இப்போது, மற்றவர்களுடன் ஒப்பிடும்போது, இந்த நபர்கள் நேர்மறையை சோதிக்கும் வாய்ப்பு அதிகம். ஆகவே, மொத்த சோதனைகளின் எண்ணிக்கை அதிகரித்து வருகின்றது, ஆனால் இன்னும் அறிகுறி உள்ளவர்கள் அல்லது அதிக ஆபத்தில் உள்ளவர்கள் மட்டுமே சோதிக்கப்படுகிறார்களானால், நேர்மறை விகிதம் படிப்படியாக உயரும்.
ஆசிய நூற்றாண்டு கனவை முடிவுக்கு கொண்டுவரும் சீனா?
உண்மையில், சோதனைகளுக்கு கட்டுப்பாட்டு அளவுகோல்களைக் கொண்ட மாநிலங்கள் அதிக நேர்மறை விகிதத்தைக் கொண்டுள்ளன. நேர்மறை விகிதம் கிட்டத்தட்ட 19 சதவீதமாக இருக்கும் மகாராஷ்டிரா ஒரு உதாரணம். மும்பையில் இன்னும் அதிகமான நேர்மறை விகிதம் உள்ளது, இது சுமார் 24 சதவீதம்.
சோதனை அளவுகோல்கள் மிகவும் தளர்வானதாக இருப்பதால், நேர்மறை விகிதம் குறைய வாய்ப்புள்ளது. உதாரணமாக, மும்பை, இனிமேல், அனைவருக்கும் கொரோனா சோதனை செய்யப்படும் என்று அறிவித்துள்ளது.
நாட்டில் மேற்கொள்ளப்படும் சோதனைகளின் எண்ணிக்கை கடந்த இரண்டு மாதங்களில் குறிப்பிடத்தக்க உயர்வைக் கண்டுள்ளது. ஒவ்வொரு நாளும் இரண்டு லட்சத்துக்கும் மேற்பட்ட மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டு வருகின்றன, மேலும் இரண்டு நாட்களுக்கு முன்பு ஒரு கோடி எண்ணை இது தாண்டியது.
ஆனால் பாதிப்புகளின் எண்ணிக்கையில் வளர்ச்சி மிகவும் விரைவாக உள்ளது. செவ்வாயன்று, நாடு முழுவதும் சுமார் 22,750 புதிய பாதிப்புகள் கண்டறியப்பட்டன, இது முந்தைய நாளை விட சற்று அதிகமாகும். இதுவரை 7.42 லட்சத்துக்கும் அதிகமானோருக்கு வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அவர்களில் 4.56 லட்சத்துக்கும் அதிகமானோர் ஏற்கனவே நோயிலிருந்து மீண்டுள்ளனர்.
இன்று மூன்றாவது நாளாக, புதிய பாதிப்புகளில் மிகப்பெரிய பங்களிப்பாளர்களான மகாராஷ்டிரா மற்றும் தமிழ்நாடு மாநிலங்களின் பாதிப்புகள் ஓரளவு சரிவைக் காட்டின, ஆனால் டெல்லியில் எண்ணிக்கை உயர்ந்துள்ளது. கர்நாடகாவிலும் புதிய பாதிப்புகள் பதிவாகியுள்ளன, அதேசமயம், தெலங்கானாவில் செவ்வாயன்று 1,800 க்கும் மேற்பட்ட பாதிப்புகள் பதிவாகியுள்ளன.
இந்தியாவில் கொரோனா சோதனைகள் எண்ணிக்கை 1 கோடியை எட்டியது - ஆனால் இது குறைவு தான்?
கடந்த மூன்று நாட்களாக, உறுதிப்படுத்தப்பட்ட பாதிப்புகளின் வளர்ச்சி விகிதத்தில் மீண்டும் ஒரு முறை சரிவு ஏற்பட்டுள்ளது. தற்போதைய ஏழு நாள் கூட்டு தினசரி வளர்ச்சி விகிதம் 3.46 சதவீதமாக இருந்தது, இது இதுவரை இல்லாத அளவுக்கு மிகக் குறைவான விகிதமாகும்.
கடந்த சில நாட்களாக எழுச்சியின் அறிகுறிகளைக் காட்டும் ஒரு மாநிலம் ஒடிசா. கடந்த மூன்று நாட்களாக 500 க்கும் மேற்பட்ட பாதிப்புகளை ஒடிசா பதிவு செய்து வருகிறது. கடந்த ஒரு வாரத்தில் 3,300 க்கும் மேற்பட்ட புதிய பாதிப்புகளை சேர்த்தது. இது இப்போது 5.47 சதவீத விகிதத்தில் வளர்ந்து வருகிறது, இது தேசிய விகிதத்தை விட மிக அதிகம்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.