ஐ.என்.எக்ஸ் வழக்கில் இதுவரை நடந்தது என்ன?

INX Media case against P Chidambaram : இந்த வழக்கு தற்போது முக்கியமான கட்டத்தை எட்டியுள்ளது.

Tamil Nadu News Today Live, Tamil Nadu News in Tamil Live - p. chidambaram bail plea postponed
Tamil Nadu News Today Live, Tamil Nadu News in Tamil Live – p. chidambaram bail plea postponed

INX Media case against P Chidambaram CBI ED probe :  டெல்லி உயர்நீதிமன்றம் நேற்று முன்னாள் நிதியமைச்சர் ப. சிதம்பரம் அவர்களின் முன்ஜாமின் மனு மற்றும் இடைக்காலத் கைதுக்கான தடை மனம் ஆகிய இரண்டையும் நிராகரித்த உத்தரவிட்டது.  இதனைத் தொடர்ந்து உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார் சிதம்பரம். ஆனால் உடனடி வழக்காக அதனை விசாரிக்க இயலாது என்று உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதிகள் அமர்வு அறிவித்துள்ளது.

மேலும் படிக்க : ஐ.என்.எக்ஸ் வழக்கு விவகாரம் : சிதம்பரத்திற்கு எதிராக லுக்-அவுட் நோட்டீஸ்

ஐஎன்எக்ஸ் வழக்கில் இதுவரை நடந்தது என்ன?

2007ஆம் ஆண்டு இந்தியாவின் நிதி அமைச்சராக தமிழகத்தைச் சேர்ந்த ப.சிதம்பரம் செயல்பட்டுக் கொண்டிருந்த போது ஐஎன்எக்ஸ் மீடியா நிறுவனத்திற்கு 305 கோடி ரூபாய் அந்நிய நேரடி முதலீடு,  மூன்று மொரிசியஸ் நிறுவனங்களில் இருந்து வழங்கப்பட்டது. இந்த முதலீட்டுக்கான ஒப்புதலை இந்தியாவின் அன்னிய முதலீட்டு ஊக்குவிப்பு வாரியம் அனுமதி தந்தது.

இந்த அனுமதியில் ஊழல் நடைபெற்றிருப்பதாக 2017 ஆம் ஆண்டு மே மாதம் இந்திய புலனாய்வுத்துறை முதல் தகவல் அறிக்கையை சமர்ப்பித்தது. சிதம்பரத்தின் மீது ஊழல் மற்றும் பண மோசடி  வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் கடந்த ஆண்டு அமலாக்கத்துறை சிதம்பரத்தின் மீது வழக்குப்பதிவு செய்து அவரை விசாரிக்க வேண்டும் என முறையிட்டது. அமலாக்கத்துறை மற்றும் புலனாய்வுத்துறை விசாரணைகளிலிருந்து கைதாகாமல் இருக்க டெல்லி உயர்நீதிமன்றத்தில் முன்ஜாமீன் மனு தாக்கல் செய்தார் ப.சிதம்பரம்.

ஐ.என்.எக்ஸ் மீடியா வழக்கு

பீட்டர் மற்றும் இந்திராணி முகர்ஜி நடத்தி வந்த ஐஎன்எஸ் மீடியா நிறுவனத்திற்கு வழங்கப்பட்ட 305 கோடி அந்நிய நேரடி முதலீட்டில் ஊழல் நடைபெற்றிருப்பதாக 2008ஆம் ஆண்டு நிதி அமைச்சகத்தின் புலனாய்வுத்துறை ( Financial Intelligence Unit (FIU-IND)) சந்தேகத்தின் அடிப்படையில் வழக்குப் பதிவு செய்தது.

பின்பு மும்பையின் வருமான வரித்துறை இந்த வழக்கினை அமலாக்கத் துறைக்கு அனுப்பியது.  2010ஆம் ஆண்டும் அமலாக்கத்துறை அன்னிய செலாவணி மேலாண்மை சட்டம் 1999 (Foreign Exchange Management Act (FEMA)) வரம்புகளை மீறியதாக ஐஎன்எக்ஸ் மீடியா மீது வழக்குப் பதிவு செய்தது.

கார்த்தி சிதம்பரம்

சில வருடங்களுக்குப் பிறகு சிதம்பரத்தின் மகன் கார்த்தி சிதம்பரத்தின் நிறுவனங்களில் நடத்தப்பட்ட சோதனையின் போது அவரின் சி.ஏ.  பாஸ்கர்ராமன் என்பவரின் கணினியில் ஐஎன்எக்ஸ் மீடியா தொடர்பான சில ஆவணங்கள் அமலாக்கத் துறைக்கு கிடைத்தது. அதில் ஐஎன்எக்ஸ் மீடியா மூலமாக கார்த்தி சிதம்பரம் பெற்ற நிதி குறித்து தகவல்கள் இடம்பெற்றன.  இதனைத் தொடர்ந்து 2017 ஆம் ஆண்டு அமலாக்கத்துறை பரிந்துரையின் பெயரில் சிபிஐ கார்த்தி சிதம்பரத்தின் மீது வழக்கு பதிவு செய்தது. ப. சிதம்பரம் மற்றும் கார்த்தி சிதம்பரத்துக்கு சொந்தமான இடங்கள் அனைத்தும் ஆய்வு செய்யப்பட்டன. பின்பு அமலாக்கத்துறை கார்த்தி சிதம்பரத்தின் மீது பணமோசடி வழக்கு ஒன்றை பதிவு செய்தது.  கடந்த பிப்ரவரி மாதம் கார்த்தி சிதம்பரம் கைது செய்யப்பட்டார். டெல்லி உயர் நீதிமன்றம் அவரை ஜாமீனில் விடுதலை செய்தது.  தற்போது அவர் சிவகங்கை தொகுதியின் எம்பி ஆக உள்ளார்.

சி.பி.ஐ வழக்கு

சி.பி.ஐ பதிவு செய்த முதல் தகவல் அறிக்கையில், மார்ச் 13ம் தேதி, 2007ம் ஆண்டு ஐ.என்.எக்ஸ் மீடியா, அந்நிய நேரடி முதலீட்டு வாரியத்திடம் அனுமதிக்காக வந்துள்ளது. 14.98 லட்சம் பங்குகள் மற்றும் 31.22 லட்சம் மாற்றக்கூடிய ஒட்டுமொத்த பங்குகளை (ஒரு பங்கின் அன்றைய சந்தை விலை ரூ. 10 மட்டுமே) (convertible non-cumulative redeemable preference shares) வெளிநாட்டு முதலீட்டாளர்களிடம் இருந்து பெற அனுமதி கேட்டது.

இந்த பங்குகள் ஐ.என்.எக்ஸ் மீடியாவின் ஒட்டுமொத்த முதலீட்டில் 46.21%-த்தினை குறிப்பதாகும்.  அதே அனுமதி மனுவில், ஐ.என்.எக்ஸ் மீடியாவின் கிளை நிறுவனமான ஐ.என்.எக்ஸ் நியூஸ் ப்ரைவேட் லிமிட்டட் நிறுவனத்துக்கு டவுன்ஸ்ட்ரீம் ஃபினான்சியல் இன்வெஸ்ட்மெண்ட்டிற்கும் அனுமதி கேட்டுள்ளது ஐ.என்.எக்ஸ் நிறுவனம்.

மே 30ம் தேதி, 2007ம் ஆண்டு  4.62 கோடி ரூபாய்க்கான அந்நிய நேரடி முதலீட்டிற்கு ஒப்புதல் அளித்தது அந்நிய முதலீட்டு ஊக்குவிப்பு வாரியம். ஆனால் டவுன்ஸ்ட்ரீம் இன்வெஸ்ட்மெண்டிற்கு அனுமதி மறுத்துவிட்டது. 4.62 கோடி ரூபாய்க்கான அந்நிய நேரடி முதலீட்டு அனுமதியில் ரூ. 305 கோடியை நேரடி முதலீடாக பெற்றிருக்கிறது ஐ.என்.எக்ஸ் நிறுவனம்.

அந்த நேரத்தில் ஐ.என்.எக்ஸின் பங்குகள் ஒவ்வொன்றையும் ரூ. 862.31-க்கு வாங்கியது வெளிநாட்டு நிறுவனங்கள். இது ஐ.என்.எக்ஸ் நிறுவனம் மொரிசீயஸில் இருந்து பெற்ற பங்குகளை விட 86.2 மடங்கு அதிகம். மேலும் ஐ.என்.எக்ஸ் நியூஸ் நிறுவனத்துக்கான டவுன்ஸ்ட்ரீம் முதலீட்டையும் (26%) ஐ.என்.எக்ஸ் மீடியா பெற்றுள்ளது.

சிதம்பரத்தின் தொடர்பு

மும்பை வருமான வரித்துறையினர் இந்த வழக்கினை தீவிரமாக விசாரித்து வந்த நிலையில், அந்நிய நேரடி முதலீட்டு வாரியம் ஐ.என்.எக்ஸ் மீடியாவிடம் இருந்து விளக்கம் கேட்டது. மேலும் இந்த விவகாரத்தினை முறையாக விசாரிப்பதற்கு பதிலாக டவுன்ஸ்ட்ரீம் பேமென்ட் பெறுவதற்காக புதிதாக விண்ணப்பத்தை சமர்பிக்கக் கோரி ஐ.என்.எக்ஸ் நிறுவனத்திற்கு வழியுறுத்தியுள்ளதாக சி.பி.ஐ தரப்பு அறிவித்துள்ளது.

இது வரை நடந்தது என்ன?

மே 15,2017: 2007ம் ஆண்டு, ஐ.என்.எக்ஸ் நிறுவனத்திற்கு விதிகளை மீறி அந்நிய முதலீடாக 305 கோடி ரூபாய் முதலீடு செய்யப்பட்டுள்ளது என சி.பி.ஐ வழக்கு பதிவு செய்தது. அதே மாதத்தில் இந்த விவகாரத்தில் பண மோசடி வழக்கு ஒன்றினை பதிவு செய்தது அமலாக்கத்துறை

ஜூன் 16,2017 : கார்த்தி சிதம்பரத்திற்கு எதிராக லுக்-அவுட் பிறப்பிக்கப்பட்டது.

ஆகஸ்ட் 10, 2017 : கார்த்தி மற்றும் இதர 4 பேர்களுக்கு பிறப்பிக்கப்பட்ட லுக் அவுட் அறிக்கைக்கு தடை விதித்தது சென்னை உயர் நீதிமன்றம்

ஆகஸ்ட் 14,2017 : உச்ச நீதிமன்றம், உயர் நீதிமன்றத்தின் தடைக்கு தடை விதித்தது.

ஆகஸ்ட் 18,2017 : ஆகஸ்ட் 23ம் தேதிக்குள் சி.பி.ஐயிடம் ஆஜராக வேண்டும் என கார்த்தி சிதம்பரத்திற்கு உத்தரவிட்டது உயர் நீதிமன்றம்.

செப்டம்பர் 11, 2017 : கார்த்தி சிதம்பரத்தின் சொத்து மதிப்பு குறித்து உரையிட்ட தாளில் அறிக்கை ஒன்றை உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்தது சி.பி.ஐ.

செப்டம்பர் 22, 2017 : கார்த்தி சிதம்பரம், வெளிநாட்டு வங்கிகளில் இருக்கும் கணக்கினை முடிப்பதற்காக வெளிநாடு செல்ல இருப்பதாகவும், ஆனால் அவரை அப்படி செல்ல முடியாமல் முடக்கி வைத்துள்ளோம் என்றும் சி.பி.ஐ அறிவித்துள்ளது.

அக்டோபர் 9,2017 : கேம்ப்ரிட்ஜ் பல்கலைக்கழகத்தில் தன்னுடைய மகளை சேர்ப்பதற்கு லண்டன் செல்ல அனுமதி வழங்க வேண்டும் என உச்ச நீதிமன்றத்தை நாடினார் கார்த்தி சிதம்பரம்.

அக்டோர்பர் 9,2017 : அரசியல் காரணங்களுக்காக பாஜக அரசு எங்களுக்கு எதிராக செயல்படுகிறது என ப.சிதம்பரம் உச்ச நீதிமன்றத்தில் கூறினார்.

நவம்பர் 20, 2017 : லண்டன் செல்வதற்கு கார்த்தி சிதம்பரத்திற்கு அனுமதி வழங்கியது உச்ச நீதிமன்றம்.

டிசம்பர் 8, 2017 : ஏர்செல் மேக்ஸிஸ் வழக்கில் சி.பி.ஐ. கார்த்திக்கு வழங்கிய சம்மனை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார் கார்த்தி.

பிப்ரவரி 8, 2018 : கார்த்தி சிதம்பரம் சென்னை விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டு டெல்லிக்கு அனுப்பப்பட்டார். ஒரு நாள் போலீஸ் கஸ்டடியில் வைக்கப்பட்டார்.

மார்ச் 5, 2018 : அமலாக்கத்துறை பதிவு செய்த பண மோசடி வழக்கினை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் முறையிட்டார் கார்த்தி.

மார்ச் 5, 2018 : மூன்று நாள் சி.பி.ஐ. விசாரணைக்கு அனுப்பப்பட்டார் கார்த்தி சிதம்பரம்

மார்ச் 12, 2018 : 12 நாள் நீதிமன்ற காவலில் விசாரிக்கப்பட்டார் கார்த்தி. டெல்லி உயர் நீதிமன்றத்தில் ஜாமீன் கேட்டு முறையிட்டார் கார்த்தி.

மார்ச் 15, 2018  : உச்ச நீதிமன்றம், கார்த்தி சிதம்பரத்தை கைது செய்வதற்கு இடைக்கால தடை விதித்தது.

மார்ச் 23, 2018 : ஐ.என்.எக்ஸ் மீடியா வழக்கில் டெல்லி உயர் நீதிமன்றம் கார்த்தி சிதம்பரத்திற்கு ஜாமீன் வழங்கியது.

மே 30, 2018 : டெல்லி உயர்நீதிமன்றத்தில் சி.பி.ஐயின் ஊழல் வழக்குக்கு எதிராக முன்ஜாமீன் மனுவினை தாக்கல் செய்தார் சிதம்பரம்.

ஜூலை 23, 2018 : அமலாக்கத்துறையின் பண மோசடி வழக்கில் முன்ஜாமீன் பெறுவதற்காக டெல்லி உயர் நீதிமன்றத்தை நாடினார் சிதம்பரம்.

ஜூலை 25, 2018 : உச்ச நீதிமன்றம் இரு வழக்குகளிலும் இவரை கைது செய்ய இடைக்கால தடை விதித்தது.

அக்டோபர் 11, 2018 : அமலாக்கத்துறை இந்த வழக்கில், சிதம்பரத்தின் குடியிருப்பின் 50%-ஐ இணைத்து அறிவித்தது.

ஜூலை 11, 2019 : சீனா போரா கொலைக் குற்றவாளி மற்றும் ஐ.என்.எக்ஸ் மீடியாவின் முன்னாள் இயக்குநர் இந்திராணி முகர்ஜி அப்ருவராக மாறினார்.

Get the latest Tamil news and Explained news here. You can also read all the Explained news by following us on Twitter, Facebook and Telegram.

Web Title: Inx media case against p chidambaram cbi ed probe read the full history here

Next Story
எதை நோக்கி நகர்கிறது தானியங்கி கார்கள் தொழில்நுட்பம் ?Driverless Self Driving Cars Automobile Technology
The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com