இஸ்ரோவின் விக்ரம் லேண்டரை இழந்துவிட்டோம் - ஆனால், மிஷன் இன்னும் முடியவில்லை

விண்வெளியில் தொலைத் தொடர்பு துண்டிக்கப்பட்ட பிறகும், அதனை செயல்பட வைப்பது சாத்தியமே. இஸ்ரோவில் கூட இப்படியொரு நிகழ்வு அரங்கேறியிருக்கிறது

Amitabh Sinha

விக்ரம் லேண்டரின் மென்மையான தரையிறக்கம் நிறைவேற்றப்படவில்லை என்பதால், சந்திராயன்-2வின் மிஷன் வெகு தொலைவிற்கு சென்றுவிட்டது. உண்மையில், விஞ்ஞான வார்த்தைகளில் சொல்ல வேண்டுமெனில், மிகக் குறைவாகவே இழக்கப்பட்டிருக்கிறது. ஆனால் இது, இந்திய விண்வெளி ஆராய்ச்சி அமைப்புக்கு (இஸ்ரோ) பெரும் பின்னடைவாகும்.

லேண்டர் அதன் பணியை முதல் 13 நிமிடங்களுக்கு, திட்டமிட்டப்படி தொடங்கியது. திட்டப்படி அதன் வேகம் குறைக்கப்பட்டது. ஆனால் அதன்பிறகு,வேகக் குறைப்பு தேவைக்கேற்ப செயல்படுத்தப்பட்டதாக தெரியவில்லை. இந்த சூழ்நிலையின் மிகவும் சாத்தியமான விளைவு என்னவென்றால், பாதுகாப்பான தரையிறக்கத்திற்கு தேவையான வேகத்தை விட அதிக வேகத்தில் சென்றதால், லேன்டர் நிலவின் நிலப் பரப்பில் மோதி சிதறியிருக்கலாம்.

மேலும் பார்க்க – சந்திரயான் 2: விஞ்ஞானிகளை நெகிழ வைத்த பிரதமர் மோடி (வீடியோ)

ஆனால், இது தகவல் தொடர்பு தோல்வியின் காரணமாக மட்டுமே ஏற்பட்டிருக்க முடியும். விக்ரம் திட்டமிட்டபடி நிலவில் இறங்கியிருக்கலாம், ஆனால் அதன் பயணத்தின் நடுவே தரை நிலையத்துடனான தொடர்பு நிறுத்தப்பட்டது. இப்படி ஏற்படுவதற்கான வாய்ப்பு மிகவும் குறைவு, கட்டுப்பாட்டு அறையில் உள்ள திரைகளில் காட்டப்பட்ட கிராஃபிக்ஸ்கள், 13 நிமிடங்களுக்குப் பிறகு வேறுபடத் தொடங்கியது. ஆகையால், தகவல் தொடர்பு இழக்கப்படுவதற்கு முன்பே தேவைப்பட்டதை விட, வேகம் அதிகமாக இருந்தது தெரிய வந்தது.

விண்வெளியில் தொலைத் தொடர்பு துண்டிக்கப்பட்ட பிறகும், அதனை செயல்பட வைப்பது சாத்தியமே. இஸ்ரோவில் கூட இப்படியொரு நிகழ்வு அரங்கேறியிருக்கிறது. சில வருடங்களுக்கு முன்பு, ஒரு செயற்கைக்கோள், தரைக் கட்டுப்பாடு தளத்துடனான தொடர்பை இழந்தது. ஆனால் அதன் பிறகான நிறைய முயற்சிகளுக்குப் பிறகு மீண்டும் அது செயல்படத் தொடங்கியது. ஆனால் அந்த செயற்கைக்கோள் சுற்றுப்பாதையில் இருந்தது, அதிக வேகத்தில் கிரகத்தை நோக்கி அது செல்லவில்லை.


ஆனால் மென்மையான தரையிறக்கத்தில் தவறியது சந்திரயான் -2 பணியை முடிவுக்கு கொண்டு வந்து விடாது. அதற்கு வெகு தொலைவில் உள்ளது.

இந்த மிஷன் அதிகபட்ச அளவிலான விஞ்ஞானத்தால் உருவாக்கப்பட்டுள்ளதால், ஆர்பிட்டரில் உள்ள கருவிகள் சரியான ஆரோக்கியத்துடன் தரை நிலையத்துடன் தொடர்பு கொள்கிறது. சந்திரனில் நீர் பற்றிய கூடுதல் சான்றுகளைத் தேடுவதும், அதன் ஒப்பீட்டளவை மதிப்பிடுவதும் இதில் அடங்கும்.

மேலும் படிக்க – சந்திராயன் 2 கடைசி நேர தோல்வி: அன்று அப்துல்கலாம் சொன்னதை ஒருமுறை திரும்பி பார்க்கலாமா?

பிரக்யான் ரோவரில் உள்ள இரண்டு கருவிகளும் சந்திரனின் மேற்பரப்பின் அடிப்படை அமைப்பை மதிப்பிடுவதற்கும் தரையிறங்கும் இடத்திற்கு அருகிலுள்ள வெவ்வேறு கூறுகளை ஆராய்ந்து தகவல்களை சேகரிக்க வேண்டும்.

லேண்டரில் மூன்று கருவிகள் இருந்தன, அவை சந்திர வளிமண்டலம், அதன் வெப்பநிலை மற்றும் வெப்ப கடத்துத்திறன் ஆகியவற்றை ஆராயும். ஒரு கருவி தரையிறங்கும் இடத்திற்கு அருகில் நிலவின் மேற்பரப்பில் நில அதிர்வு செயல்பாட்டை அளவிட வேண்டும்.

“அறிவியலைப் பொறுத்தவரை, இந்த பணி இன்னும் உயிர்ப்புடன் உள்ளது, நிறைய வழங்க இருக்கிறது. இது இன்னும் முடிவடையவில்லை, ”என்று ஓய்வு பெற்ற இஸ்ரோ விஞ்ஞானி ஒருவர் கூறினார்.

Get all the Latest Tamil News and Tamil Nadu News at Indian Express Tamil. You can also catch all the latest Tamil Explained News by following us on Twitter and Facebook

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com.
×Close
×Close